பொதுவாக மனிதனுக்கு எந்த ஒரு விஷயத்தில் அளவுகடந்த ஈடுபாடு உண்டாகின்றதோ, அதாவது தன்னுடைய கட்டுப்பாட்டினையும் மீறுகின்ற அளவிற்கு பற்று உண்டாகி பின்பு அது மோகமாகி, வெறியாகுகின்றதோ,அது நிச்சயம் அந்த மனிதனை பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
இதைத்தான் குறிப்பிட்ட சில விஷயங்களில், "அவன் அந்த விஷயத்தில் பைத்தியம்,பித்து" என்று சொல்கிறார்கள்.
மனித வாழ்விற்கு இந்தளவிற்கு போதும் என வரையறுக்கப்பட்ட விஷயங்களில் அளவுக்கு அதிகமான நாட்டம், வெறி ஏற்படும் பொழுது அது மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிப்பினை தரவல்லது. இதை உணர்ந்தே முன்னோர் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல்லாடலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த அளவில் பெண்களின் மீது அளவுகடந்த மோகம், ஈர்ப்பு கொண்டவர்களை பெண் பித்து என்று அழைக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் எந்த ஒரு கிரகம் நீசம் அடைந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்கள், செயல்பாடுகள், உறவுகள் நோக்கியே ஜாதகர் ஈர்க்கப்படுவார். காரகத்துவ திறன்கள், அவருக்கு வருகிறது, வராமல் போகிறது என்பதெல்லாம் அடுத்த விஷயம். ஆனால் ஈர்ப்பு ஏற்படுவது என்பது இயல்பு.
அந்த வகையில் பெண்களை குறிக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் நீசமான நிலையில் இருக்கும் பொழுது ஜாதகர் பெண்களின் மீது ஈர்ப்பு அதிகம் ஏற்படுவது இயல்பு.
அடுத்ததாக வீரியத்திற்கு காரணமான கிரகமாக செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்து இருக்கும் ஜாதகர்களுக்கு பெண்களின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்படுவது இயல்பே.
போக ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுடன் பெண் கிரகங்களின் தொடர்பு அதிகம் இருக்கும்போதும் ஜாதகருக்கு பெண்களின் மீது ஈர்ப்பு அதிகமிருக்கும்.
மறைவு ஸ்தானங்களில் சுக்கிரன் வலுப் பெற்ற நிலையில் இருக்கும் பொழுதும் ஜாதகருக்கு பெண்களின் மீதான ஈர்ப்பு அதிகமிருக்கும்.
குறிப்பிட்ட சில நிலைகளில் சுக்கிரனுடன் ராகு கேதுக்கள் இணைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கும் பெண்களின் மீது ஈடுபாடு இருப்பது இயல்பே.
சிலருக்கு குறிப்பிட்ட தசாபுத்திகளில் மட்டும் பெண்களின் மீதான மோகம், ஈர்ப்பு அதிகம் உண்டாகி, பின்பு குறைந்து போவதற்கான வாய்ப்பு உண்டு. சுக்கிரனின் வீடுகளில் நின்ற ராகு கேதுக்களின் தசா புத்திகள். ஏழாம் அதிபதி அட்டமாதிபதி விரையாதிபதி தொடர்புடைய தசா புத்திகளில் பெண்களின் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு தசாபுத்தி முடியும்போது ஈர்ப்பும் குறைந்து போகும்.
போக ஸ்தானாதிபதி வலுப்பெற்ற நிலையில் 12ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டு தசாபுக்தி நடத்தும் பொழுதும், வீரிய ஸ்தானாதிபதி வலுப்பெற்ற நிலையினில் தசாபுக்தி நடத்தும் பொழுதும்,
வலுப்பெற்ற ஏழாம் அதிபதியின் தசாவில் அட்டமாதிபதி புத்தி, அட்டமாதிபதி தசாவில் ஏழாம் அதிபதியின் புத்தி,
சுக்கிரனின் வீடுகளில் நின்ற ராகு கேதுக்களின் தசா புத்தி,
சுக்கிரன் செவ்வாய் தொடர்புடைய தசா புக்திகள்.
இதுபோன்ற காலகட்டங்களில் ஜாதகருக்கு எதிர் பாலினத்தவர் மீது தீடிரென ஈர்ப்பு உண்டாகி தசாபுத்தி முடியும் பொழுது குறைந்து போகும்.
இது போன்ற சில நிலைகளில் கோச்சாரம் சரியில்லாது இருக்கும்பொழுது ஜாதகரின் பெயர் கெட்டுப் போவது, குடும்ப பிரிவினை என பல தீய நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உண்டு.
இது போன்ற தருணங்களில் இறைவழிபாட்டின் குறிப்பாக ராமபிரான் வழிபாட்டை துணையாக்கிக் கொண்டு எச்சரிக்கை உணர்வுடன் செயலாற்றும் போது நிச்சயம் பாதிப்பிலிருந்து விடுபட இயலும்..
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/Hv1tvebRHj71HOa8kVLY5K