நீசம் பெற்ற கிரகங்களுக்கான பரிகாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீசம் பெற்ற கிரகங்களுக்கான பரிகாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜூலை, 2022

கிரகங்கள் நீசம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள்


நீசமான சுபகிரகங்கள் எக்காரணத்தைக் கொண்டும் சனி, செவ்வாயின் பார்வையைப் பெறக்கூடாது...
குறிப்பாக சனி பார்வையை பெறுதல் நல்லதல்ல..
இராகுவின் இணைவும் நல்லதல்ல .
ஆனால் அசுப கிரகங்களான சனி மற்றும் செவ்வாய், அரைபாபரான சூரியன் நீசம் பெறும் பொழுது சுபர்களின் பார்வை பெறுவது நல்லதாகும்.
Iniyavan Karthikeyan 
நீசம் என்பதே ஒரு வகையில் பலவீனம் தான். மேற்கொண்டு சனி செவ்வாயின் பார்வையைப் பெறும் போது அந்த கிரகம் மேலும் பலவீனத்தை பெரும்.
அந்த கிரகத்தின் காரகத்துவங்களை  பெறுவதில் ஜாதகருக்கு தடைகள் ஏமாற்றங்கள் இருக்கும்..
குரு நீச்சமாகி சனி பார்வை பெரும்பொழுது ஜாதகருக்கு ஆண் வாரிசு தடையை ஏற்படுத்தும்.

புத்திரகாரகன் குரு என்பதால் குழந்தை பாக்கியத்திலும் தடை தாமதங்கள் இருக்கும்..
தனக்காரகன் குரு என்பதால் பணம் வருவதில், பணம் நிலைப்பதில் ஜாதகருக்கு பிரச்சினை இருக்கும்..

புதன் நீசமாகி பாபர்களின் பார்வையைப் பெறும் போது ஜாதகருடைய கல்வி தடைபடும். கல்வியில் தடை, தாமதங்கள், தோல்விகள் இருக்க வாய்ப்புண்டு.
புதனே எழுத்து மற்றும் பேச்சு இவற்றிற்கு காரகத்துவம் வகிப்பதால் மேற்கண்ட விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சினை வரலாம். புதன் நண்பர்களை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம் என்பதால்
நண்பர்களால் ஜாதகருக்கு பெரிய அளவில் பிரயோஜனம் இருக்காது.

புத்திசாலித்தனம் மற்றும் சமயோசித புத்தி இவற்றிற்கு காரகர் புதன் என்பதால் ஜாதகருக்கு   
புத்திசாலித்தனக் குறைவு, முன்யோசனை அற்ற செயல்பாடுகள் இவற்றால் பாதிப்பு ஏற்படும்.

சந்திரன் நீசமாகி சனி பார்வை பெறும் பொழுது சந்திரன் மனோகாரகன் என்பதால் ஜாதகருக்கு அவ்வப்போது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். முடிவெடுப்பதில் குழப்பம், தாய், தாய் வழிச் சொந்த பந்தங்கள் ஆதரவு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.. #Iniyavan 

சுக்கிரன் நீசமாகி பாபகிரகங்களின் பார்வையைப் பெறும் பொழுது சுக்கிரனுடைய காரகத்துவங்களான வீடு, வாகனங்கள் அமைவதில் தடை தாமதங்கள் இருக்கும்.
வாழ்க்கைத்துணை குறித்த விஷயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். சுக்கிரன் தாம்பத்தியதிற்க்கு காரகன் என்பதால் தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரலாம்.

நிறைவாக ஒரு சுபகிரகம் நீசமாகி பாவிகளின் பார்வையை  பெரும் பொழுது ஜாதகர் அந்த கிரகத்தின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏமாற்றங்களை தவிர்ப்பதற்காக எச்சரிக்கையாக இருப்பது நல்லதாகும்.

நீச்சம் பெற்ற கிரகம், முறைய நீச்ச பங்கத்தை  பெறாத பொழுதும்,பாபர்களின் தொடர்பை பெற்று, சுபர்களின் தொடர்பை பெறாத நிலைகளில் அந்த கிரகத்தின் காரகத்துவ தொழில்களை செய்யாதிருப்பதே நல்லதாகும்.

புதன் நீசமானவர்கள் புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாள் வழிபாட்டையும், சுக்கிரன் நீசமானவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஒரையில் மகாலட்சுமி, மகாவிஷ்ணு வழிபாட்டையும்
குரு நீசமானவர்கள் வியாழன்தோறும் குரு ஒரையில் நவகிரக குரு, திருச்செந்தூர் முருகப் பெருமான் வழிபாட்டையும் கடைபிடித்து வருவதல் நல்லதாகும்.
சந்திரன் நீசமானவர்கள் பெளர்ணமி தோறும் அம்பாள் வழிபாட்டையும் திங்கட்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும்.

வாழ்வியல் பரிகாரங்களை பொறுத்தவரை குரு நீசமானவர்கள் யானைக்கு உணவு அளிப்பது நல்லதாகும். புதன் நீசமானவர்கள் குதிரைக்கு உணவளிப்பது சுக்கிரன் நீசமானவர்கள் மீன்களுக்கு உணவளிப்பது நல்லதாகும்.
சந்திரன் நீசமானவர்கள் 
ஆதரவற்ற வயதான பெண்களுக்கு உதவுதல் நல்லதாகும்.. #Iniyavan

அதிகாரம், ஆளுமை,அரசு வேலை, தந்தை, தந்தை வழி உறவுகள் போன்றவற்றிற்கு காரகத்துவம் பெற்ற சூரியன் நீசமாக இருக்கும் பொழுது ஞாயிறு தோறும் சிவாலயங்களில் சூரிய ஓரையில் சிவ பெருமான் வழிபாட்டை கடைபிடிப்பது, தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் அல்லது சூரிய காய்த்ரி மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்வது வருவது நல்லதாகும்.

சகோதர உறவுகள், நிலபுலன் சேர்க்கை, பூமி, தைர்யம், துணிவு, வீர்யம் போன்ற விஷயங்களுக்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய் நீசம் அடைந்து இருக்கும் போது செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகப் பெருமான் வழிபாட்டை கடைப்பிடித்து வருவது சிறப்பிற்குரியதாகும்.

நிறைவாக எந்த கிரகம் உங்களுக்கு நீசமாகி இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவ உறவுகளிடத்தில் நீங்கள் முடிந்தவரை கண்ணியத்தையும் நேர்மையும் கடைபிடித்து வருவதே சிறப்பான தீர்வாகும்..
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/IwylcXBPt0QJU5BFqKyHKB