தொழிலில் எப்போது முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிலில் எப்போது முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2022

அவயோக கிரகங்கள் குறிக்கும் தொழிலை செய்யலாமா?

இலக்ன ராசிக்கு 2, 10, 11 ஆம் பாவங்களுடன் எந்த கிரகம் அதிகப்படியான  சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தின் தொழில் அமையும். #Iniyavan
இரண்டு கிரகங்கள் சுபர்களின் தொடர்பினை பெற்று மேற்கண்ட இடங்களில் தொடர்பு கொள்ளும் போது இரண்டு கிரகத்தில் எந்த கிரகம் ஸ்தான பலத்துடன் தொடர்பு கொள்கின்றதோ அந்த கிரகத்தின் தொழில் அமையும்.
லக்ன அவயோகர்கள் என்றாலும் அந்த கிரகம் அதிகப்படியான சுபர்களின் தொடர்பினை பெற்றிருக்கும் போது அந்த கிரகத்தின் தொழில் அமையவே செய்யும்.#Iniyavan

உதாரணமாக இயற்கை சுப கிரகமான குரு ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு எட்டு மற்றும் ஆறாம் அதிபதியாக வருவார்.
மேற்கண்ட லக்னங்களுக்கு குரு அவயோக கிரகமாக இருந்தாலும் அவர் லக்ன ராசிக்கு 2, 10, 11ம் பாவகத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில்கள் அமைந்தே தீரும்.#Iniyavan

உதாரணத்திற்கு ரிஷப லக்கினத்திற்கு எட்டில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய 7-ஆம் பார்வையாக, வாக்கு மற்றும் தன ஸ்தானமான  2-ஆம் வீட்டைப் பார்ப்பார். அந்த லக்னத்தின் பத்தாம் அதிபதி சனியும், குருவின் பார்வையில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம் இந்நிலையில் குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட பணம் தொடர்புடைய தொழில்கள், ஆசிரியப்பணி, வங்கித்துறை போன்ற தொழில்களே அமைய வாய்ப்பு.#Iniyavan

லக்னத்திற்கு ஆகாத அவயோக கிரகங்களின் தொழில் அமைந்தாலும் மேற்கண்ட தொழில் அவருக்கு நன்மையைத் தருமா அல்லது தீமை தருமா என்பது சம்பந்தப்பட்ட தசா புத்திகளைப் பொருத்ததாகும்.

மேற்கண்ட ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தின் அதிபதியான சுக்கிரனின் நண்பர்கள் சம்பந்தப்பட்ட தசா புக்திகள் நடைபெறும் பொழுது ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன் இருக்கும்.

ரிஷப லக்னத்திற்கு பகைவர்களான சூரியன், சந்திரன், குரு தொடர்புடைய தசாபுத்திகள்  நடைபெறும்போது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேற்கண்ட கிரகங்கள் பெற்றுள்ள ஆதிபத்யங்களுக்கு ஏற்பவும், சுப மற்றும் பாபத் தன்மைக்கு ஏற்பவும் ஏற்ற இறக்கங்கள் தொழிலில் இருக்கும்.#Iniyavan

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அடையக்கூடிய பலன் நல்லதா அல்லது கெட்டதா என்பது சம்பந்தப்பட்ட தசாபுத்திகளை பொறுத்தது ஆகும்.

லக்னாதிபதியின் நண்பர்களான ஐந்து, ஒன்பதாம் அதிபதியின் தசா புத்திகள் வருகிறது என்றால் தொழிலில் சிறப்பான நிலையில் இருப்பீர்கள்.

லக்னத்திற்கு ஆகாத  6 8 12ம் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களுடன் தொடர்பு பெற்று தசாபுத்தி நடந்தால் தொழிலில் நட்டம், தொழிலில் சிக்கல், கடன் சார்ந்த பிரச்சனைகளை அனுபவிப்பீர்கள்.
6, 8, 12-ம் அதிபதிகளின் தசா புத்திகள் நடக்கும்போது தொழிலில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எந்தளவிற்கு சமாளிப்பீர்கள்? தொழிலில் தொடர்ந்து இருப்பீர்களா? (அ) இல்லையா என்பதை உங்களுடைய
லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் சுட்டிக்காட்டுவார்கள்.
லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் வலுப்பெற்றிருக்கும் போது தொழிலில் ஏற்படக்கூடிய கடன், நஷ்டம் போன்ற பிரச்சினைகளை சமாளித்து வெற்றிகரமாக தொழிலில் நிலை பெறுவீர்கள்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f