ஆரோக்கிய குறைபாடுகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரோக்கிய குறைபாடுகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

ஆரோக்கிய குறைவு ஜோதிட ரீதியாக ஒரு பார்வை...

ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறார் என்பதை ஜாதக ரீதியாக எப்படி அறிந்து கொள்வது?

லக்னாதிபதி 6 8 12ல் மறைந்து பலவீனமாக இருப்பது, லக்னத்திற்கு 6ம் அதிபதி தொடர்பு கிடைப்பது, சந்திரன் எனும் உடல்காரகன் பலவீனம் அடைந்து 6,8,12ல் இருப்பது அல்லது ஆறாம் அதிபதி தொடர்பு பலம் குறைந்த சந்திரனுக்கு கிடைப்பது, இலக்கனமும் பலம் குறைந்து நான்காம் அதிபதியும் பலம் குறைந்து காணப்படுவது, லக்னாதிபதி ஆறாம் அதிபதியுடன் பரிவர்த்தனை, இணைவு பெற்றிருப்பதுடன் ராகு கேது இணைந்திருப்பது.

 மேற்கண்ட சூழ்நிலைகளில் ஆறாம் அதிபதி திசை லக்னாதிபதி புத்தியிலும்,லக்னாதிபதி திசை ஆறாம் அதிபதி  புத்தியிலும்,பலவீனமான நான்காம் அதிபுதியின் புத்தியிலும் ஜாதகர்  
நோய் ஏற்பட்டு உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறுவார்.நோய் ஏற்பட்டுள்ளது உறுதி செய்த பின்பு எந்த நோய் ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டறிய இயலுமா? 

காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் உடலுறுப்புகளையும்,
ஒவ்வொரு கிரகங்கள் குறிக்கும்  நோய்களையும் கண்டறிவதன் மூலம் யூகிக்க இயலும்.

கால புருஷ தத்துவப்படி உடல் உறுப்புகளைக் குறிக்கும் இடங்கள்

மேஷம்-தலை,முகம்
 
ரிஷபம்-கண்,காது, மூக்கு,
 வாய், தொண்டை

மிதுனம்-கழுத்து மற்றும் தோள்பட்டை 

கடகம்-மேல்மார்பு, நுரையீரல் 

சிம்மம்-இருதயம்,மார்பு

கன்னி-இடுப்பு, முதுகெலும்பு 

துலாம்-கருப்பை,சிறுநீரகம், ஜீரண உறுப்புகள்

 விருச்சிகம்-பிறப்புறுப்பு, மலத்துவாரம்

 தனுசு-தொடை 

மகரம்-கால்மூட்டு

 கும்பம்-கணுக்கால்

 மீனம்-பாதம்



நன்றி
Astrologer
 ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138