கேது தசா நன்மையைச் செய்யுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேது தசா நன்மையைச் செய்யுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 பிப்ரவரி, 2021

கேது தசா எப்படிபட்ட நிலைகளில் நன்மை தரும்?

கேது தசா எப்படிப்பட்ட நிலைகளில் நன்மை தரும்?
நிழல் கிரகமான ராகு பிரம்மாண்டத்தை குறிப்பார்.
சுபர் வீடுகளில் சுபர் தொடர்பை தர்மகர்மாதிபதி தொடர்பை பெற்ற ராகு தசா நடக்கும் போது நல்ல பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை தருவார்.
மற்றொரு நிழல் கிரகமான கேது பிரம்மாண்டத்திற்கு நேர் எதிர் நிலையான எளிமையை குறிப்பவர்,பற்றற்ற நிலையினை, ஞானத்தை தரக்கூடியவர்.
ராகு போகக்காரகன் என்பதால் போகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அதீத ஈடுபாட்டினை தருவார். எல்லாவற்றையும் அனுபவித்தாக வேண்டும் என்ற வேட்கையும் தேடுதலையும் தருவார்.
ஆனால் மற்றொரு நிழல் கிரகமான கேதுவின் தசாவில் நீங்கள் இவற்றின் எதிர்பார்க்க இயலாது. கேதுவின் தசாவினை துறவியின் மனநிலையுடன் ஒப்பிட வேண்டும்.எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடு இன்றி பற்றற்ற நிலையை தருபவர் கேது. இப்பிறவியே போதும் என்ற மனநிலையை தருவார். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு ஏற்ப தன்னிடத்தில் இருக்கும் விஷயங்களில் திருப்தியை உணர வைப்பவர் கேது.
பொருள்,அருள் என்ற இருவகை அணியில் கேது அருளணியில் இடம் பெறக் கூடியவர்.

மூலநூல்களில்  கேதுவிற்கு உகந்த இடம் வழங்க சொல்லப்பட்டவை கன்னி, விருச்சிகம், மற்றும் கும்பம்  மேற்கண்ட இடங்களில் இலக்னத்திற்கு 6, 8, 12 ஆக இருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை.

இலக்னம், இராசி அல்லது ஆழ்மன ஸ்தானமான 5ஆம் இடத்துடன் கேது குருவின் இணைவினை பெற்று தொடர்பு கொள்ளும் போது மேம்பட்ட ஞானத்தினைத் தருவார்.மேற்கண்ட அமைப்புடன் சனி இணையும்போது எதிர்பார்ப்புகள் அற்ற ஆன்மீக எண்ணத்தினை தருவார்.

போகக்காரகனான ராகு தன்னுடைய 18 வருட தசாவினில் போகங்களை அனுபவித்து உணர வைப்பதை தன்னுடைய ஏழே வருடங்களில் பற்றற்ற நிலையின் வாயிலாக உணர்த்தக் கூடிய வல்லமை பெற்றவர் ஞானகாரகன் கேது.

நிழல் கிரகமான கேது கேந்திரங்களில் இருக்கும்போது திரிகோணாதிபதி இணைவினை பெறுவதும் திரிகோணங்களில் இருக்கும்பொழுது கேந்திராதிபதி இணைவினைப் பெறுவதும், தர்மகர்மாதிபதிகள் தொடர்பினை பெறுவது சிறப்பான அமைப்பு.

எந்த ஒரு இலக்னமாக இருந்தாலும் கேது, குருவின் இணைவினை தொடர்பினை பெற்று தசா நடத்துவது சிறப்பான அமைப்பாக கருதப்படும்.

செவ்வாய் மற்றும் சனியுடன் இணைந்த கேது, செவ்வாய் மற்றும் சனியின் தசா காலங்களில் அவர்களின் தீய விளைவை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை பெற்றவர்.

அதே நேரத்தில் சனி மற்றும் செவ்வாயுடன் இணைந்த கேதுவின் திசையில் நன்மைகளை பெரிய அளவில் இயலாது.
சுபர்களின் தொடர்பு அந்த அமைப்பிற்கு கிடைத்து இருப்பது அவசியம்.

இலக்ன ரீதியாக பார்க்கும்போது மேஷ மற்றும் விருச்சிக இலக்கினத்தினை பொருத்தவரை சூரியன், குரு, செவ்வாய், சந்திரன் போன்றவர்களின் தொடர்பினை பெறுவது நல்லது. புதனின் தொடர்பு நல்லதல்ல.

மேஷ லக்கினத்தை பொறுத்தவரை 3 6-க்குடைய புதன் தொடர்பினையோ பாதக அதிபதியான சனியின் தொடர்பு பெறக்கூடாது.
ரிஷபம், துலாம் இலக்னத்திற்கு சுக்கிரன், சனி, புதன் தொடர்பை பெறுவது நல்லது. ரிஷபம் துலாம் இலக்னங்களுக்கு குரு  பகைவர் என்றாலும் குருவின் பார்வையினை  கேது பெறுவது நல்லதாகும்.

கடக, சிம்ம இலக்கனங்களுக்கு குருவின் தொடர்பை பெற்ற கேது யோகாதிபதி செவ்வாய் தொடர்பினை பெறுவது நல்லதாகும்.

தனுசு மற்றும் மீன இலக்கினத்திற்கு இலக்னம், இலக்னாதிபதி தொடர்பு கொள்ளும்போது சிறப்பான ஆன்மீக நிலையை தருவார். உண்மையான ஆன்மீகத் தன்மையினை  உணர்ந்த மனிதராக இருக்க வைப்பார்.

மீன இலக்கினத்திற்கு ஐந்தாம் இடமான கடகத்தில் குருவின் தொடர்பினை பெற்ற கேது நல்ல மனிதராக, ஞானம் நிறைந்த, பற்றில்லாத மனிதராக இருக்க வைப்பார். ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் நின்ற கேது குருவின் பார்வை தொடர்பை பெறும் போது  மிகப்பெரிய உயர்வைத்  தனது தசாக்காலங்களில் தருவார்.
மகர, கும்ப இலக்னங்களுக்கு சுக்கிரன் புதன் தொடர்பை பெறுவது நல்லதாகும்.
புதனின் லக்னங்களான மிதுனம் மற்றும் கன்னிக்கு சுக்கிரன், புதன், சனி தொடர்பு நல்லதாகும்.
மகர கேது மறைபொருள் அறியும் ஆற்றலையும் கும்ப கேதுஉண்மையான ஞானத்தையும் தரக்கூடியவர்.
தன்னுடன் இணைந்துள்ள கிரகத்தின் காரகத்துவ வழியினில் அதீத ஞானத்தை வழங்க கூடிய வல்லமை படைத்தவர் கேது.

பொதுவாகவே கேதுவின் தசாவில் ஆசைகளை அறவே குறைத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில்  விருப்பம் கொண்ட விஷயத்தில் அதீத வெறுப்பை, விரக்தியினை தந்து, பற்றில்லாத நிலையினை நோக்கி செல்ல வைப்பார்.
2,7 மற்றும் 8ஆம் இடங்களுடன் சனி செவ்வாய் தொடர்பை பெற்ற கேது குடும்ப விஷயத்தில் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கி பிரிவினையை உருவாக்குவார்.
பொதுவாகவே கேது தசாவினில் முழுமுதற் கடவுளான விநாயக வழிபாடு சித்தரகுப்தர் வழிபாடு, ஜீவசமாதி வழிபாடு கேது பகவானின்  இடர்பாடுகளை நீக்கி நலம் நல்கும்..

நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138