பித்ரு தோஷத்திலிருந்து மீள்வதற்கான வழிகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பித்ரு தோஷத்திலிருந்து மீள்வதற்கான வழிகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பித்ரு தோஷம்... வழிபாடுகளும் வாழ்வியல் பரிகாரங்கள்

பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்றால் என்ன அது தரக்கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பதையும் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழிபாடுகள் மற்றும் வாழ்வியல்  பரிகாரங்கள் என்னென்ன என்பதையும் இப்பதிவில் பார்ப்போம்.  Iniyavan Karthikeyan 

பித்ருக்கள் என்ற சொல்லின் பொருள் இந்து கலாச்சார தர்மத்தின் அடிப்படையில் நம்முடைய முன்னோர்களை சுட்டிக் காட்டும்.
ஜோதிட ரீதியாக பித்ருக்களுக்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய  கிரகம், சாட்சாத் கண்களுக்கு புலப்பட கூடிய கடவுள் சூரிய பகவானாவார்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பித்ருக்காரகனான சூரியன் நிலை, ஜாதகருடைய முன்னோர்களின் நிலையினை உணர்த்தும்.
பொதுவாகவே சூரியன் ஆட்சி அல்லது உச்சம் போன்ற நிலையில் இருப்பது, சுப கிரகமான குருவின் பார்வையில் அல்லது இணைவினில் இருப்பது சுக்கிரனுடன் இணைந்து இருப்பது, புதனுடன் இணைந்து இருப்பது, வளர்பிறைச் சந்திரன் பார்வையில் இருப்பது, நட்பு வீடுகளான தனுசு விருச்சிகம், மீனம் போன்ற வீடுகளில் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
ரிஷபத்தில் இருப்பதை பொறுத்தவரை அவர் தன்னுடைய வீட்டுக்கு பத்தில் இருக்கிறார் என்ற அடிப்படையில் அங்கு இருப்பதும் நல்லதே. #Iniyavan 

சூரியன் நிழல் கிரகமான ராகு கேதுவுடன் இணைந்து இருப்பது, வலுப்பெற்ற சனியின் பார்வையில் சூரியன் இருப்பது, சனி பகவானுடன் இணைந்து இருப்பது, சூரியனும் சந்திரனும் இணைந்து அமாவாசை நிலையில் இருக்கும் பொழுது வலுப்பெற்ற சனியின் தொடர்பு அல்லது ராகுவின் தொடர்பிலிருப்பது,
அதேபோல் ஒருவருடைய ஜாதகத்தில் காலபுருஷ லக்கினத்திற்கு பாக்கியாதிபதியான குரு ராகுவுடன் இணைந்து இருப்பது,
மேற்கண்ட அமைப்பிற்கு எவ்வித சுபர் தொடர்புமின்றி இருப்பது பித்ரு தோஷ அமைப்புகளாக சொல்லப்படுகின்றன.
அதேபோல் ஒருவடைய ஜாதகத்தில் காலபுருஷ லக்கினத்திற்கு பாக்கியாதிபதியான குரு ராகுவுடன் இணைந்து இருப்பது,
5 மற்றும் 9 ஆம் வீடுகளில் ராகு கேதுக்கள் நின்று அந்த வீட்டின் அதிபதி முற்றிலுமாக பலம் குறைந்த நிலையில் இருப்பது, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான ஐந்தாம் வீட்டு அதிபதியும், பாக்கியாதிபதியான ஒன்பதாம் வீட்டு அதிபதியும் முற்றிலும் பலம் குறைந்த நிலைகளில் இருப்பது,
பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடம் போன்றவை சுபர்களின்  தொடர்பின்றி வலுப்பெற்ற பாப கிரகங்களின் தொடர்பில் இருப்பதும் பித்ரு தோஷத்தை உணர்த்தக் கூடிய அமைப்புகளாக சொல்லப்படுகின்றன.
Iniyavan Karthikeyan 

பித்ரு தோஷ அமைப்புகள் இருந்தும், சுய ஜாதகத்தில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன்  போன்ற கிரகங்கள் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது தோஷம் பெரியளவில் பாதிப்புகளைத் தராது என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். #Iniyavan

பொதுவாக பித்ரு தோஷம் என்பது நம்முடைய முன்னோர்கள் செய்த அதீத பாவ கர்ம வினைகளின் தொகுப்புக்களின் மிச்சம், நமக்கு பலாபலன்களாக வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக நாம் முந்தைய ஜென்மங்களில் நம்முடைய முன்னோர்களை வயோதிக காலங்களில் சரிவர கவனிக்காததால் ஏற்பட்ட பாவங்களின் தொகுப்பாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இவையே எதிர்மறை ஆற்றலாக, எண்ணங்களாக ஜாதகருக்கு இப்பிறவியில் செயல்பட்டு ஏதேனும் ஒருவகையில் பாதிப்பினைத் தரும்.

நம்முடைய முன் ஜென்மங்களில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கக்கூடிய நம்முடைய முன்னோர்களை நாம் சரிவர கவனிக்காமல் விட்டு விடுவது, அதனால் அவர்கள் அடைந்த உடல் மற்றும் மன வேதனை போன்றவை நமக்கு இந்த ஜென்மத்தில் பித்ரு தோஷமாக வெளிப்படும். #Iniyavan

பித்ரு தோஷத்தை சுட்டிக்காட்டக் கூடிய அமைப்புகள் சுய ஜாதகத்தில் இருந்து எவ்வித சுபர் தொடர்பும் மேற்கண்ட அமைப்பிற்கு இல்லாமல் இருந்து, தொடர்புடைய தசாபுத்திகளும் நடைமுறைக்கு வரக்கூடிய பட்சத்தில் பாதிப்புகள் உண்டாகும்.

ஜாதகருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நற்பலன்கள், தங்கு தடையாகி அதிக காலங்கள் கடந்த பின்னர் தாமதாமாக  கிடைப்பது அல்லது கிடைக்காமல் போவது, உழைப்பிற்கேற்ற ஊதியம், உயர்வு கிட்டாது போவது,
ஜாதகருக்கு நடைபெறவேண்டிய திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் அதீதமான, தொடர்ச்சியான தடை தாமதங்கள், திருமண வாழ்வினில் மகிழ்ச்சியின்மை,
புத்திர பாக்கியம் தடை படுவது புத்திரர்கள் இருந்தும் அவற்றால் பலனில்லாது போவது,உடல் மற்றும் மனரீதியாக குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது, தொடர்ச்சியாக குழந்தைகள் பிறந்து, இறந்து போதல்,
குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்க கூடிய பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவுகள் ஏற்படுதல்,அதிகப்படியான வறுமையான சூழல், தொடர்ச்சியாக இருக்கும் கடன் தொல்லைகள், வீட்டில் அவ்வப்போது கொள்ளை சம்பவங்கள், தீப்பிடித்தல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பது,  குடும்பத்தில் தொடர்ச்சியான துர்மரணங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றன.

புத்திர தோஷ பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் பரிகாரங்களை பொருத்தவரை நாம் இந்த ஜென்மத்தில் எக்காரணத்தைக் கொண்டும் முன்னோர்களிடம், நம்மை விட வயது முதிர்ந்தவர்களின்  மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. #Iniyavan

நம்முடைய தாத்தா பாட்டிகள், நம்முடைய வயதான பெற்றோர்கள்  உடல்நிலை சரியில்லாத இருக்கக்கூடிய தருணங்களில் அவர்களை அக்கறையோடு கவனித்து கொள்வது, கனிவுடன் நடந்து கொள்வது நம்முடைய கடமை உணர்வாகும்.
அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்களிடம் பேசி வருவது, முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, அவர்களிடம் கலந்தாலோசிப்பது, அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளையும் எவ்வித குறைபாடும் இன்றி நிறைவேற்றி தருவது போன்றவற்றில்  ஜாதகர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் அமைப்பில் உள்ளவர்கள் அவ்வப்போது அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ள முதியோர்களுக்கு உணவளிப்பது,
அவர்களுக்கு தேவையான படுக்கை, தலையணை போன்றவற்றை வாங்கி தருவது, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வது போன்றவை நல்லதாகும்.
இது போன்ற தொடர் முயற்சிகள் கண்டிப்பாக தோசத்தின் பாதிப்பினை வெகுவாக குறைக்கும். #Iniyavan

வழிபாடுகளைப் பொருத்தவரை ஜோதிட சாஸ்திரத்தில் பித்ருக்களுக்கு காரகம்  வகிக்கக்கூடிய சூரிய பகவானை அனுதினமும் ஆதித்ய ஹ்ருதயம் அல்லது சூரிய காய்த்ரி போன்ற மந்திரங்களை உச்சரித்து ஆத்மார்த்தமாக வழிபடுதல் போன்றவை மேன்மைக்குரியதாகும்.
மந்திரங்களை சொல்ல இயலாதவர்கள் மந்திரங்களை வீட்டில் ஒலிக்கச் செய்து வரலாம்.
ஞாயிறு தோறும் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வதும் நலம் பயக்கும்.
ஒவ்வொரு  அமாவாசைகளின் போதும் அல்லது முதியோர்கள் இறந்த திதி நாட்களில் தர்ப்பணத்தை செய்வது வரும் நல்லதாகும். #Iniyavan
திங்கள் தோறும் சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜித்து வருவது, பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில்  அல்லது சிரவண மாதமான ஆவணி மாதத்தில் சிவாலயங்களில் அரசு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடர்ச்சியாக பராமரித்து வருவது  போன்றவை சிறப்பானதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று ராமேஸ்வரம் சென்று, அங்கு கடற்கரை மணலில் சிவபெருமானை லிங்க வடிவில் அமைத்து பால், பன்னீர், வில்வம், பல்வேறு விதமான மலர்கள், வாசனைத் திரவியங்கள் இவற்றால் அர்ச்சித்து வழிபட்ட பின்பு, மீண்டும் கடலில் குளித்து, அங்குள்ள நாழிக் கிணற்றின் நீரைத் தெளித்த பின்னர் ராம பிரானைஆத்மார்த்த உணர்வோடு வணங்கி, பின்பு அங்கே அருள் பாலிக்கும் இராம நாத ஈஷ்வரரை, பித்ரு சாபம் நீங்கும் பொருட்டு சிரத்தையுடன் பிரார்த்தித்து வருவது நல்லதாகும்
இவை மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் ஜாதகர் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு  சென்று ஆலயங்களை தூய்மை செய்வது, இறைவனிடம் மனமுருகி மன்றாடுவது, நம் முன்னோர்களிடத்தில் நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி மன்றாடுதல் போன்றவை நல்லதாகும். #Iniyavan

இன்று இளைஞர்களாக இருக்கக்கூடிய நாம்,  
இன்று நல்ல  உடல் பலத்தோடு இருக்கக்கூடிய நாம்,
கண்டிப்பாக வயோதிகர்களாக  மாறுவோம் என்பதையுணர்ந்து, முதுமை மற்றுமொரு மழலைப் பருவம்  என்பதையும் உணர்ந்து முதியோர்களிடத்தினில் மதிப்பாகவும், கனிவாகவும், நம்முடைய தாத்தாபாட்டி என்ற அக்கறையுணர்வுடனும்
நடந்து கொள்வதே எக்காலத்திற்கும் நன்மையளிக்கும்...
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74