ஆயுளை அறிவதில் கண்டறிய வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுளை அறிவதில் கண்டறிய வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மே, 2021

ஆயுள் பலம் இருக்கின்றதா?

எந்த ஒரு ஜாதகத்திலும் பலன் சொல்வதற்கு முன்னர் ஆயுள் பற்றி கண்டிப்பாக தெளிந்துணர்ந்த பின்னரே பலன் சொல்ல வேண்டும். ஏனெனில் எத்தனை யோகங்கள் இருப்பினும் அந்த யோகங்களை அனுபவிப்பதற்கு இறைவன் "ஆயுள்" என்ற மகா யோகத்தினை தந்திருக்கவேண்டும். ஆயுளைப் பற்றி அறிவதற்கு ஆயுர்த்தாய கணித முறைகள் என பல்வேறு முறைகள் இருக்கின்றன.

இவை சிக்கலான சூழ்நிலையில் ஆயுள் பற்றி தெளிவாக தெளிந்துணர உதவும். இன்றைய பதிவினில் நல்லதொரு ஆயுள் அமைப்பிற்கான எளிமையான அமைப்புகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள முற்படுவோம்.

முதன்முதலில் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் வலிமை,ஏனெனில் லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும்.

1.இலக்னம் வர்கோத்தமம் பெறுவது, லக்னாதிபதி ஆட்சி, உச்சம், திக்பலம், வர்க்கோத்தமம் அடைவது .

2.இலக்னாதிபதி சுபர் என்றால் திரிகோணத்தில், அசுபர் என்றால் கேந்திரத்திலும் வலுப்பெறுவது .
3. எட்டாம் இடத்து அதிபதியும் அதற்கு எட்டான மூன்றாம் இடத்து அதிபதியும் சுபர்களின் பார்வையில் இருப்பது.
4.சந்திராதியோகத்தில் எட்டாம் இடத்து அதிபதி இருப்பது
5.பொதுவான ஆயுள் காரகனான சனி சந்திராதியோகத்தில் இருப்பது.

6.எட்டில் சனி பகவான் வலுப்பெற்று இருப்பது

7.பொதுவான ஆயுள்காரகன் சனி பகவான் சுபர்களின் பார்வையில் இருப்பது

8.இலக்னாதிபதி,எட்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெறுவது

9. 5,9 ஆம் அதிபதிகள் வலுப்பெற்று லக்னத்தோடு தொடர்பு பெறுவது

10.சுப கிரகங்கள் வலுப்பெற்று எட்டில் இருப்பது, சுபர்களின் பார்வை எட்டாம் இடத்திற்கு கிடைப்பது,

இது போன்ற அமைப்புகள் நல்லாயுளுக்கு ஏற்றவையே.

கடந்த பதிவில் நல்ல ஆயுளுக்கான அமைப்புகள் என்னென்ன என்று பார்த்தோம். இன்றைய பதிவில் ஆயுளை பாதிக்கும் திசாபுத்திகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. இலக்னாதிபதியின் திசாவினில் மாரகாதிபதிகளின் புத்திகளில் கவனம் தேவை.

2.சர லக்னங்களுக்கு 2 மற்றும் ஏழாம் இடத்து அதிபதியும்,ஸ்திர லக்னங்களுக்கு 3 மற்றும் எட்டாம் இடத்து அதிபதியும், உபய லக்னங்களுக்கு 7 மற்றும் 11ம் இடத்ததிபதியும் மாரகாதிபதிகள்.

3.சர, ஸ்திர, உபய இலக்னங்களைப் பொறுத்து மாரகாதிபதிகள் மாறினாலும் எல்லா இலக்கனங்களுக்கும் பொதுவான மாரகாதிபதிகளான 2 மற்றும் 7க்குரியவர்களின் திசா புத்திகள் கவனமானவையே.

4.மாராக வீடுகளில் நின்ற கிரகங்களும் மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தினை தரவல்லது என்பதால் அது தொடர்புடைய திசா புத்திகள்.

5.மாரக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களும் மாறாக ஸ்தானாதிபதிகளும் தங்களுக்குள் 6,8 சாஷ்டாஷக அமைப்பில் இருக்கும் பொழுது அது தொடர்புடைய திசாபுத்தி காலகட்டத்தில் அதீத கவனம் அவசியம்.*
உதாரணமாக துலாம் லக்னத்திற்கு மாரகாதிபதியான செவ்வாயின் வீட்டில் ஒரு கிரகம் திசா அல்லது புத்தி நடத்தும்ம பட்சத்தில் அந்த கிரகம் செவ்வாய்க்கு 6,8 ஆக இருக்கும் பட்சத்தில் அது தொடர்புடைய திசா புத்திகள்

6.மாரகாதிபதி, அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி திசாபத்திகளின் கூட்டு நிலை கவனிக்கத்தக்கதாகும்.

7.அதாவது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி திசா நடத்தும் பட்சத்தில் மாரகாதிபதி புத்தியில் அதிக கவனம் அவசியம்.

8.அதேபோல் அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி திசா நடத்தும் போது மாரகாதிபதி புத்தியிலும் கவனம் தேவை

அடுத்த பதிவில் ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகாதிபதிகளில் யார் அதிக பாதிப்பை செய்வார் என்பதை பார்ப்போம்.
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138