நீசமான கிரகங்கள் திக்பலம் அடைவதால் ஏற்படும் நன்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீசமான கிரகங்கள் திக்பலம் அடைவதால் ஏற்படும் நன்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நீசம் + திக்பலம்

கிரகங்கள் நீசம் பெற்றிருந்தாலும் திக்பலத்தில் இருக்கும்போது தரக்கூடிய நன்மைகள்... 

நீசம் பெற்ற கிரகங்கள் திக் பலம் பெறும் போது மீண்டும் பலத்தை பெறும்.
கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு கண்டிப்பாக கிடைக்கவே செய்யும். #Iniyavan 
அந்த கிரகம் சுட்டிக்காட்டக் கூடிய காரகத்துவ மற்றும் ஆதிபத்ய ரீதியான உயிர் காரகத்துவ உறவுகளின் ஆதரவு போன்றவை, பாபர் தொடர்பை பெறாத நிலையில் ஜாதகருக்கு நல்லபடியாகவே இருக்கும்.
அந்த வகையில் மீன லக்னக்காரர்கள் புதன் நீசம் பெறும் போது கவலைப்பட வேண்டியதில்லை
சனி, செவ்வாய், ராகு தொடர்பில்லாத வரை புதனுடைய காரகத்துவ விஷயங்கள் நல்லபடியாகவே இருக்கும் #Iniyavan

புதனே 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு ஆதிபத்திய பொறுப்பு ஏற்பதால் நல்ல குடும்பத்தை வழி நடத்தக்கூடிய திறமையான புத்திசாலித்தனமான தாயார் மற்றும் மனைவியை  ஜாதகர் பெற்றவராக இருப்பார்..

மிதுன இலக்னத்திற்கு 5-க்குடைய சுக்கிரன் 4-ஆம் வீட்டில் நீச நிலையில் இருப்பார்.  இருப்பினும் அங்கே  திக் பலம் பெறுவதால்  பாபர் தொடர்பு இல்லாத நிலையில் சுக்கிரனின் காரகத்துவம் சார்ந்த விஷயங்கள், மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பெறக்கூடிய ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்களான குழந்தை பாக்கியம் போன்றவை ஜாதகருக்கு நல்ல படியாகவே இருக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு சந்திரன் நான்காம் வீட்டில் நீச நிலையில் இருப்பார்.இருப்பினும் அங்கே அவர்  திக்பலம் பெறுவதால் 
சந்திரனுடைய காரகத்துவம் சார்ந்த தாயார், நல்ல மனநிலை 12ஆம் வீட்டிற்கு உரிய ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாக இருக்கும்.

துலா லக்கினத்திற்கு 2 மற்றும் 7 கூடிய செவ்வாய் பத்தாம் வீட்டில் நீசம் பெறுவார். இருப்பினும் அங்கு அவர் திக்பல நிலையில் இருப்பதால், சனி, இராகு தொடர்பை பெறாத நிலையில் ஜாதகர் நல்ல மனைவியை பெற்றவராகவே இருப்பார்.

துலாம் லக்னத்திற்கு 4 மற்றும் 5ஆம் இடத்திற்கு அதிபதியான சனி ஏழாம் வீட்டில் நீசம் பெற்றாலும் திக்பல நிலையில் இருப்பதால் சுபர் தொடர்பினை பெற்ற  நிலையில் நான்கு மற்றும் ஐந்தாம் இட ஆதிபத்யம் சார்ந்த விஷயங்கள் நல்லபடியாகவே இருக்கும்.

மகர லக்கினத்திற்கு அட்டமாதிபதி சூரியன் பத்தாம் வீட்டில் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் அங்கே திக்பல நிலையில் இருப்பதால் ஆயுள் சார்ந்த சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு  பாதிப்புகளை பாபர் தொடர்பு இல்லாத நிலையில் தரமாட்டார்.
மேலும் சூரியனுடைய காரகத்துவ விஷயங்களான  தந்தை, தந்தை வழி, சொந்த பந்தங்கள் ஆதரவு, தலைமைப் பதவி, ஆளுமைத்திறன் போன்றவை பாபர் தொடர்பு இல்லாத நிலையில் நல்லபடியாகவே இருக்கும். Iniyavan Karthikeyan 

மகர லக்கினத்திற்கு, குரு நீசமான நிலையில் இருந்தாலும்  திக்பலம் பெறுவதால் குருவின் முதன்மை காரகத்துவமான புத்திரபாக்யம் சார்ந்த விஷயங்களில் பாபர் தொடர்பு இல்லாத நிலையில்  பாதிப்புகளை தரமாட்டார். #Iniyavan

அந்த வகையில் எந்த ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்தாலும் திக்பலம் நிலையை அடைந்து இருக்கும் போது, பாபர் தொடர்பு இல்லாத நிலையில் அந்த கிரகத்தின் காரகத்துவம் மற்றும் அந்த லக்னத்திற்கு அந்த கிரகம் வகிக்கக்கூடிய ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்கள் போன்றவை  ஜாதகருக்கு நல்லபடியாகவே இருக்கும்.
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N