மீன இலக்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன இலக்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மார்ச், 2023

மீன இலக்னத்திற்கு சனி தசா எப்படியிருக்கும்?


இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம்.
ஏற்கனவே மீன லக்னத்திற்கு  சூரியன்,  சந்திரன், செவ்வாய், குருவின் தசாக்காலங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களைக் கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு லக்னத்திற்கு சனி தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு சனி 11 மற்றும் 12  என்ற லாபம் மற்றும் விரைய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார்.அவர் லக்னத்தில் இருப்பதை பொருத்தவரை
விரையஸ்தானதிபதியான சனி லக்னத்தில் இருக்கும் பொழுது ஜாதகரை மிகுந்த சோம்பேறியாக்கி, மந்த சுபாவத்தை தருவார்.எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்து முடிக்காமல் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய சுபாவத்தை ஜாதகருக்கு தந்து ஜாதருடைய முன்னேற்றத்தை தடை செய்வார்.
மீனம் இயற்கைச் சுபரான குருவின் வீடாக இருப்பதால் இங்கே அமரக்கூடிய சனி ஜாதகருக்கு தன்னுடைய தசா காலங்களில் ஆன்மீக எண்ணங்கள், கோவில் வழிபாடு போன்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்த செய்வார்.
மீன லக்கினத்திற்கு லக்னத்தில் சனி அமரும் போது அவர் மூன்று, ஏழு, பத்தாம் இடங்களைப் பார்ப்பதால் சகோதரர் வகையில் கருத்து வேறுபாடுகள், வாழ்க்கைத் துணை வகையில் மன வருத்தங்கள், தொழில் ரீதியான முன்னேற்றத் தடைகளையும் உண்டாக்குவார்.
குருவின் பார்வையில் இருக்கும் பொழுது அல்லது  மீன லக்னத்திற்கு  லக்னத்தில் நின்ற சனி தசா நன்மைகளைச் செய்யும்.

மீன லக்னத்திற்கு இரண்டாம் வீடான மேஷத்தில் சனி இருப்பதைப் பொருத்தவரை அங்கே அவர் நீசம் பெற்ற நிலையில் இருப்பார். லாபாதிபதி தனஸ்தானத்தில் நீசம் பெறுவதால் பணம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்.
இங்கே நீசம்பங்கம் பெறுவதும் நல்லதல்ல, ராகு, செவ்வாய் அமாவாசை சந்திரன், சூரியன் தொடர்பை பெற்று தசாபுத்தி நடத்தும் போது குடும்பத்தை பெரிய அளவில் தன்னுடைய தசாக்காலங்களில் பாதிக்க செய்வதுடன் பார்வை படக்கூடிய இடங்களான நான்காம் பாவகம் வீடு, மனை, தாய், உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும், எட்டாம் பாவக விஷயங்களான  வெளிநாட்டு வாழ்க்கை, ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகளை ஏற்படுத்துவதுடன் 11 ஆம் பாவகத்தை பார்ப்பதால் லாபம் வருவதில், மூத்த சகோதர வகைகளில் பிரச்சனைகளை உண்டாக்குவார். இங்கு இருக்கக்கூடிய சனி குருவின் தொடர்பை பெறும் பொழுது சட்டத்துறையில் ஜாதகருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார். செவ்வாய் உடைய தொடர்பை பெறும் போது இரும்பு, இயந்திரம் சார்ந்த துறைகளிலும் சூரியனுடைய தொடர்பை பெறும் பொழுது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல், மின்சாரம் சார்ந்த துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பார்.

மூன்றாம் பாவகமான ரிஷபத்தில் சனி இருப்பதை பொருத்தவரை அங்கிருந்து தன்னுடைய ஏழாம் பார்வையால் ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் தந்தை வழியில் கிடைக்கக்கூடிய ஆதரவு, தந்தையின் உடல்நலம் போன்ற போன்ற விஷயங்களில் எதிர்மாறான சாதகம் அற்ற பலன்களை செய்து பின்பு நல்ல பலன்களைச் செய்வார்.
தன்னுடைய மூன்றாம் பார்வையால் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளின் உடல்நலம், ஆரோக்கியம் உறவு முறை போன்றவற்றில் சாதகமற்ற மற்றும் பலன்களையும் தரக்கூடும்.
தன்னுடைய பத்தாம் பார்வையால் 12ஆம் வீட்டை பார்ப்பதால் அந்நிய இடங்களுக்குச் சென்று தொழில் புரிய இயலாத நிலையை ஜாதகருக்கு தருவார்.
எனினும் ரிஷபம் இயற்கை சுபரின் வீடு என்பதாலும், சனிக்கு பிடித்த வீடு என்பதாலும் ஒரு உபஜெய ஸ்தான அதிபதி மற்றொரு உபஜெய ஸ்தானத்தில் இருக்கிறார் என்ற அடிப்படையில் பொருளாதார வகையில் ஒரளவு நல்ல பலன்களையும் தருவார். பெரிய அளவில் இங்கு இருக்கக்கூடிய சனி தன்னுடைய தசா காலங்களில் கெடு பலன்களை தர மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீன லக்னத்திற்கு நான்காம் இடமான மிதுனத்தில் சனி இருப்பதை பொருத்தவரை புதன் வலு குறைந்த நிலையில் இருக்கும் போது தாயார் விசயங்களில் உடல்நலக் கேடுகளையும் ஆரோக்கியக் குறைவினையும் தருவார்.
படிக்கக் கூடிய பருவத்தில் நான்கில் நின்ற சனி தசா காலங்கள் வரும்பொழுது நான்காம் பாவகம் கல்விக்குரிய பாவகம் என்பதால் கல்வி மற்றும் மேற்படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகளை ஏற்படுத்துவார்.சுகஸ்தானத்தில் சனி இருக்கும் போது சிறிய அளவில் உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்வார்.எனினும் மிதுனம் சனிக்கு நட்பு வீடு என்பதால் இங்கே அமரக்கூடிய சனி பெரிய பாதிப்புகளைச் செய்ய மாட்டார். நான்காம் வீட்டில் சனி இருக்கும் போது பழைய வீடு, வண்டி, வாகனம் இவற்றை அமைத்துக் கொள்வதில் ஜாதகர் விருப்பம் உடையவராக இருப்பார். பணம் இருந்தாலும் ஜாதகருக்கு பழைய வீடு, வண்டி, வாகனம் இவற்றில் தான் விருப்பம் இருக்கக்கூடும்.

இங்கு இருக்கக்கூடிய சனி பத்தாம் வீட்டை பார்ப்பதால் லாபாதிபதி நட்பு வீட்டில் இருந்து  பார்க்கின்றார் என்ற அடிப்படையில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை கடுமையான உழைப்பாளியாக மாற்றி நல்ல பலன்களை தருவார்.இங்குள்ள சனி புதனுடன் பரிவர்த்தனை (4,11)பெறுவது நல்லது. சனி மற்றும் புதன்  இரண்டுமே நல்ல பலன்களை தரும்.குருவின் தொடர்பினையும் பெறும் பொழுது சனி தசா பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும்.

ஐந்தாம் இடமான கடகத்தில் சனி இருப்பதை பொறுத்த வரை இது அவருக்கு பகைவீடு என்பதால் தன்னுடைய தசா காலங்களில் நல்ல பலன்களை தர மாட்டார்.கடகம் சந்திரனின் ஆட்சி வீடு என்பதால் அங்கு அமரக்கூடிய சனி தாயார் வகையில், உடல் நல குறைபாடுகளையும் அல்லது அவரிடையே  கருத்து வேறுபாடுகளையும் உண்டாக்குவார். சந்திரனின் வீட்டில் அமர்ந்த சனி ஜாதகருக்கு மனம் சார்ந்த பிரச்சினைகளையும் தரக்கூடும்.
பகை வீட்டில் அமர்ந்து சனி பார்க்கக்கூடிய பாவகங்களும் பிரச்சனை தரும் என்பதால் தன்னுடைய மூன்றாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்ப்பதால் நண்பர்கள், வாழ்க்கை துணை, கூட்டுத் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மூத்த சகோதரர் வகையிலும், பணம் வருவதிலும், தனஸ்தானமும் குடும்பஸ்தானமும் ஆன இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணம் வருவதிலும் குடும்ப விஷயங்களிலும் எதிர்மறையான பலன்களைத் தருவார்.

ஆறாம் பாவகமான சிம்மமும் அவருக்கு பகைவீடு என்பதால் இங்கே அமரக்கூடிய சனி சுபர் தொடர்பை பெறாத வகையில் நல்ல பலன்களை தர மாட்டார்.
தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத் திறன், தந்தை வழி ஆதரவு போன்றவற்றை சுட்டிக்காட்டக்கூடிய சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் சனி இருக்கும் போது ஜாதகருக்கு தன்னம்பிக்கை குறைபாட்டையும், தந்தை வகையில் உறவு சார்ந்த சிக்கல்களையும் ஏற்படுத்துவார்.இங்கே இருக்கக்கூடிய சனி வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தொல்லை மற்றும் சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவார்.
11க்கு உடையவர் ஆறில் மறைகின்றார் என்ற அடிப்படையில் மூத்த சகோதர வழியில் ஆதரவற்ற நிலையையும் உண்டாக்குவார்.
பகை வீட்டில் இன்று சனி பார்க்கக்கூடிய பாவகங்கள் பாதிப்படையும் என்பதன் அடிப்படையில் அவர் பார்க்கக்கூடிய எட்டாம் பாவகத்தின் வாயிலாக ஆயுள், வெளிநாடு சார்ந்த விஷயங்களிலும் , 12 ஆம் பாவகத்தின் வாயிலாக தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எதிர்மறையான பலன்களையே தருவார். மூன்றாம் பாவகத்தின் வாயிலாக இளைய சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளையும் தருவார்.சுபரின் தொடர்பில் இருக்கும் பொழுது சனி தரக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கும். இங்ககு இருக்கக்கூடிய சனி ராகுடன் இணைவதோ அல்லது அமாவாசை சந்திரனுடைய தொடர்பை பெறுவதோ நல்லதல்ல.

கன்னியில் சனி இருப்பதை பொருத்தவரை அங்கே அவர் திக்பலம் அடைவதோடு, அது அவருக்கு நட்பு வீடு என்பதால் வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்களை தருவார்.தன்னை விட வயது, அறிவு, தோற்றம் போன்றவற்றில் மாறுபட்டபட்ட வகையில் வாழ்க்கை துணை அமையக்கூடும்.இங்கே சனி அமரும் போது தாமதமான திருமண வாழ்க்கையை தந்தாலும் திருமண வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்புகளை தருவதில்லை.
சனி இங்கே திக்பலம் அடைவதால் லக்னாதிபதி பலவீனமாக இருக்கக்கூடிய பட்சத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதிக்கம் ஜாதகரிடத்தில் மேலோங்கி இருக்கும்.

எட்டாமிடமான துலாத்தில் சனி இருக்கும் பொழுது அங்கே அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சனி இரண்டாம் பாவகத்தை பார்ப்பதால் குடும்ப விஷயங்களிலும் பண விஷயங்களிலும் திருப்தியற்ற பலன்களையே  ஜாதகருக்கு தருவார்.
ஜாதகருடைய முறையற்ற பேச்சால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரியக்கூடிய நிலையையும் உண்டாக்குவார்.
சுபகிரங்களின் தொடர்பில் இருக்கும் பொழுது சனி தரக்கூடிய பாதிப்புகள் குறைவாக இருக்கும்.சனி எட்டாம் பாவகத்திலிருந்து உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் ஜாதகருக்கு நீடித்த ஆயுள் இருக்கும். செவ்வாய், ராகு, அமாவாசை சந்திரன் தொடர்பை பெறுவது நல்லதல்ல.

ஒன்பதாம் பாவகமான விருச்சகத்தில் சனி இருப்பதை பொருத்தவரை சனிக்கு அது பகைவீடு என்பதால் இங்கு இருக்கக்கூடிய சனி நல்ல பலன்களை தர மாட்டார்.பாப கிரகங்கள் திரிகோணத்தில் இருக்கும் பொழுது அந்த பாவகத்தை கெடுக்கும் என்பதன் அடிப்படையில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் போது தந்தை வழியில் ஏற்படக்கூடிய ஆதரவுகளை கெடுத்து தந்தை வழி உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துவார்.
அவர் பார்வை படக்கூடிய பாவகங்கள் வாயிலாகவும் ஜாதகருக்கு பிரச்சனைகளை தரவே செய்வார். இங்கே அமரக்கூடிய சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் பதினொன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையால் மூன்றாம் வீட்டையும் பார்ப்பதால் இளைய மற்றும் மூத்த சகோதர வகையில் ஆதரவற்ற நிலையையே உண்டாக்குவார்.பத்தாம் பார்வையால் சிம்மத்தை பார்ப்பதால் அரசு வேலை கிடைப்பதிலும் தடைகளை ஏற்படுத்துவார். இங்குள்ள சனி குருவின் நட்சத்திரமான விசாகத்தில் இருக்கும் பொழுது ஓரளவு நல்ல பலன்களைச் செய்வார்.பொதுவாக பகைவீடுகளில் சனி இருக்கும் பொழுது வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பில் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க கூடிய பட்சத்தில் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

பத்தாம் இடமான தனுசுவில் சனி இருப்பதை பொருத்தவரை அது இயற்கை சுபரின் வீடு என்பதாலும், பாப கிரகம் கேந்திரத்தில் இருக்கும் போது நன்மையைச் செய்யும் என்பதன் அடிப்படையிலும் லாபாதிபதி ஜீவனஸ்தானத்தில் இருக்கிறார் என்பதன் அடிப்படையிலும் நல்ல பலன்களைச் செய்வார்.கூடுதலாக சுபகிரங்களின் தொடர்பில் இருப்பது மேற்கொண்டு நல்ல பலன்களை தரும்.

11ஆம் வீட்டில் சனி இருக்கும் பொழுது லாப ஸ்தான அதிபதி லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கின்றார் என்பதன் அடிப்படையில் மேற்கொண்டு சுபகிரகங்களின் தொடர்பை பெரும் பட்சத்தில் மிக நல்ல பலன்களை தருவார்.சுபத் தொடர்பில்லாத நிலையில் அவர் பார்க்கக்கூடிய பாவகங்கள் வாயிலாக ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கவே செய்யும்.
செவ்வாய், ராகு இணைவையோ, அமாவாசை சந்திரன் தொடர்பையோ பெறாமல் இருப்பது நல்லது.

பன்னிரண்டாம் இடமான கும்பத்தில் சனி இருப்பதை பொருத்தவரை சுபர் தொடர்பை பெறாத வரை நன்மைகளைச் செய்ய மாட்டார்.12 ல் இருக்கக்கூடிய சனி வெளிநாடு சென்று தொழில் மற்றும் வேலை செய்வதில் ஜாதகருக்கு தடைகளை உண்டாக்குவார்.
தன்னுடைய மூன்றாம் பார்வையால் வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் ஜாதகரை பொய் பேசுவோராக மாற்றுவார். தன்னுடைய ஏழாம் பார்வையால் சிம்மத்தை பார்வையால் ஜாதகருடைய தன்னம்பிக்கை, தைரியம், தகப்பன் வழியில் ஏற்படக்கூடிய ஆதரவுகளை கெடுக்கவே செய்வார்.சுபர் தொடர்பின்றி     ஏழாம் பார்வையால் சிம்மத்தையும், பத்தாம் பார்வையால் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கும் பொழுது தந்தை வழி ஆதரவு, சொத்து பத்துக்களை கேள்விக்குறியாக்குவார்.

சனி தசா அதிக பாதிப்புகளை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுது சனிக்கிழமை தோறும் காலபைரவர் வழிபாட்டையும், அனுதினமும் அனுமன் வழிபாட்டையும் வழக்கப்படுத்திக் கொள்வது பாதிப்புகளை வெகுவாக குறைக்கும். வாழ்வியல் பரிகாரங்களைப் பொறுத்தவரை கடுமையாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக் கூடியவர்களுக்கு நம்மால் முடிந்த பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து வருவதும் நல்லதாகும்.
அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு புதன் தசா எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பற்றி பார்ப்போம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, 
MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741

செவ்வாய், 26 ஜூலை, 2022

மீன இலக்னத்திற்கு குரு தசா எப்படியிருக்கும்?


இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம்.
ஏற்கனவே மீன லக்னத்திற்கு சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் தசா காலங்கள்  எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு லக்னத்திற்கு லக்னாதிபதி குருவின் தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு லக்னாதிபதி குரு லக்னத்தில் இருக்கும் போது  ஆட்சி மற்றும் திக்பலத்தினை அடைவார்.
ஜாதகர் இயல்பிலேயே நேர்மையானவராக, நல்ல எண்ணங்கள், நல்ல நடத்தை கொண்டவராக இருப்பார்.
கடவுள் நம்பிக்கை, ஆச்சார அனுஷ்டானங்களில் அதிகப்படியான விருப்பம், பெரியோர்களை மதித்து பணிவுடன் நடப்பது, அதே நேரத்தில் சுயமரியாதை மற்றும் கெளரவமாக நடந்து கொள்வார்.
லக்னத்தில் இருக்கக்கூடிய குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வதால் குழந்தைகள் வகையிலும், வாழ்க்கைத்துனை  வகையிலும் தந்தை வகையிலும் நல்ல பலன்களைப் பெறுவார்.

லக்னத்தில் இருக்கக்கூடிய குரு பகவானின் தசா ஜாதகருக்கு தொழில் ரீதியாகவும் நன்மை தரும்.
இரண்டாம் இடமான மேஷத்தில் குரு இருப்பதை பொருத்தவரை குருவிற்கு அது நட்பு வீடாகும். தன்னுடைய 9-ஆம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி, நீதித்துறை, தங்கம், வங்கித்துறை போன்றவற்றில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குரு இருப்பதை பொருத்தவரை அது அவருக்கு பகை வீடு என்றாலும், ரிஷபம் இயற்கை சுபர் வீடு என்ற வகையில் நல்லதாகும்.
மூன்றாம் இடம் குறிக்கக்கூடிய ஆதிபத்தியம் சார்ந்த பலன்கள் நல்ல வகையிலேயே இருக்கும்.

மூன்றாம் வீட்டில் இருக்கக்கூடிய குரு தனது ஏழாம் பார்வையால் 9ம் வீட்டை பார்ப்பதால் பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டை பார்க்கிறார் என்ற அடிப்படையில் ஒரு வகையில் தொழில் ரீதியான நல்ல பலன்களை ஜாதகருக்கு தன்னுடைய தசா காலங்களில் தருவார்.

 நான்காமிடத்தில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் புதனுடைய வலுவிற்கு ஏற்ப தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்களைத் தருவார்.
தனது 9ம் பார்வையால் லக்னத்திற்கு 12ம் வீட்டை பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே நல்ல தர்மவுணர்வு மிக்கவராக இருப்பார்.

5-ல் இருக்கக்கூடிய குரு உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். உச்சம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய குரு 9 மற்றும் 11ஆம் வீடு மற்றும் இலக்னத்தினை பார்ப்பது ஒரு வகையில் நல்ல பலன்களைத் தரும்.
இருப்பினும் தனித்த நிலையில் உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பது ஜாதகரை அதிகப்படியான இரக்க சிந்தனை உள்ளவராகவும் ஏமாளியாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இந்த இடத்தில் நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து இருப்பது, அல்லது கேதுவுடன் இணைந்து கேள யோகத்தில் இருப்பது போன்றவை நல்ல பலன்களைத் தன்னுடைய தசா காலங்களில் தரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆறாம் இடமான சிம்மத்தில் குரு இருப்பதை பொருத்தவரை நண்பருடைய வீடாக இருப்பது சிறப்பு.
ஆறாம் குறிக்கக்கூடிய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு.
 
சூரியன் வலுத்து இருக்கக்கூடிய பட்சத்தில் உயர்பதவிகள் மற்றும் தந்தை வகையில் மேன்மையான பலன்களை ஜாதகர் பெறுவார்.
ஆறில் இருக்கக்கூடிய குரு தனது ஐந்தாம் பார்வையால் 10-ஆம் இடத்தையும் 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் 9-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும் பார்ப்பார்.
அந்த வகையில் தொழில், குடும்பம்,வருமானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் இருக்கும். 12ஆம் வீட்டை வலுப்பெற்ற குரு பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே கொடையாளியாக இருப்பார்.
ஆறாம் இடம் குறிக்கக்கூடிய கடன், நோய், எதிரி சார்ந்த பிரச்சினையும் ஆறில் இருக்கக்கூடிய குருவின் தசா தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
ஏழாமிடத்தில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் இயல்பிலேயே நேர்மையானவராக இருப்பார். 

பொதுஜன தகவல்தொடர்பு நண்பர்கள் கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிக்கக்கூடிய ஏழாம் இடத்தில் இருப்பதால் மேற்கண்ட விஷயங்கள் வாயிலாக ஜாதகர் நல்ல பலன்களை பெறக்கூடியவராக இருப்பார்.
வாழ்க்கைத்துணை வாயிலாகவும் நல்ல பலன்களை ஜாதகர் பெறுவார்.

தன்னுடைய பார்வை படக்கூடிய 11ம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வாயிலாகவும் நல்ல பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.

எட்டாம் இடமான துலாத்தில் குரு இருப்பதை பொருத்தவரை ஜாதகரை தூர தேசங்களுக்கு நகர்த்தி  பிழைக்கச் செய்வார். பூர்விகத்தில் இருக்க இயலாத நிலையை தருவார். சனி ராகு போன்ற பாவிகள் உடைய தொடர்பினை பெறுவது நல்லதல்ல.
 ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குரு இருப்பதை பொறுத்தவரை 5-ஆம் பார்வையால் லக்னத்தை பார்ப்பார். தன்னுடைய 7-ஆம் பார்வையாக 3-ஆம் வீட்டைப் பார்ப்பார் .தன்னுடைய 9-ஆம் பார்வையால் 5-ஆம் இடத்தைப் பார்ப்பார்.
அந்தவகையில் மூன்றாம் இடம் மற்றும் ஐந்தாம் இடம் குறிக்கக் கூடிய ஆதிபத்தியம் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்களைத் தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.
 
10-க்குடையவர் ஒன்பதில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பாகும் . தொழில் ரீதியாக மிக மேன்மையான பலன் தருவார். இந்த இடத்தில் செவ்வாயுடன் (9,10) பரிவர்த்தனை பெற்றிருப்பதும் மிக மேலான பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தொழில் ரீதியாக தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாமிடமான தனுசில் குரு ஆட்சி பெற்று நிலையில் இருப்பார் கேந்திராதிபதி கேந்திர ஸ்தானத்தில் ஆட்சிபெற்று நிலையில் இருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இவ்விடத்தில் இருக்கக்கூடிய குரு  செவ்வாயின் இணைவு அல்லது பார்வையோ பெறுவது நல்லது. கேதுவுடன் இணையலாம். சூரியனுடன் இருப்பதும் சிறப்பானதாகும்.
தன்னுடைய ஏழாம் பார்வையால் லக்னத்திற்கு நான்காம் இடத்தையும், தன்னுடைய 9-ஆம் பார்வையால் லக்னத்திற்கு 6-ஆம் இடத்தையும் பார்ப்பதால் 4-ஆம் இடம் குறிக்கக்கூடிய நிலம், பூமி, வீடு, மனை, தாயார் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஆறாமிடம் குறிக்கக்கூடிய வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நல்ல பலன்களை தன்னுடைய தசா காலங்களில் ஜாதகருக்கு தருவார்.

குருவின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வேலை பார்ப்பதற்கான  வாய்ப்புகள் 
உண்டு. பத்தில் இருக்கக்கூடிய குரு தனது ஐந்தாம் பார்வையால் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் பெரும்பாலோர் ஆசிரியர் பணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பதினோராம் இடமான மகரத்தில் குரு இருப்பது பொருத்தவரை நீசம் பெற்ற நிலையில் இருப்பார். ஆகவே இந்த இடத்தில் செவ்வாயுடன் இணைந்து இருப்பது அல்லது வீடு கொடுத்த சனி உச்சம் பெறவது அல்லது சந்திரகேந்திரத்தில் இருப்பது அவசியம்.
 வளர்பிறைச் சந்திரனாக இருந்து, சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பதை பொருத்தவரை இந்த இடத்தில் குருவை நீச நிலை எடுக்க வேண்டியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீசம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய குரு இந்த இடத்தில் சனியுடன் இணைந்து இருப்பது அல்லது சனியின் பார்வையைப் பெறுவதும் குருவின் காரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஆம் இடமான கும்பத்தில் குரு இருப்பதை பொருத்தவரை ஜாதகரை ஆன்மீகவாதியாக,தர்ம உணர்வு  மிக்கவராக மாற்றுவார்.
ஆறாம் இடமான சிம்மத்தை பார்ப்பதால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள், தந்தை வகையிலும் நல்ல பலன்களைத் தருவார். தனது ஐந்தாம் பார்வையால் நான்காம் இடத்தைப் பார்ப்பதால் நிலம், பூமி, வீடு, தாயார், வாகனம்,கல்வி வகையில் நல்ல பலன்களைத் தருவார்.
இவை அனைத்தும் பொது பலன்களே.. இணைந்துள்ள மற்றும் பார்த்துள்ள கிரகங்கள் அடிப்படையிலும், வீடு கொடுத்தவரின் பலம், பலவீனம் அடிப்படையில் பலன்கள் மாறுபடலாம்.
சனியின் சமசப்த பார்வையைப் பெற்ற குரு அல்லது சனியுடன் மிக நெருங்கிய குரு, ராகுவுடன் மிக நெருங்கி இருக்கக் கூடிய குரு தன்னுடைய தசா காலங்களில் நல்ல பலன்களைத் தரமாட்டார்.
இவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தொடர்ச்சியாக வழிபட்டு வருவது நல்லதாகும்.
அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு சனி தசா எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்ப்போம்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks


புதன், 20 ஜூலை, 2022

மீன லக்னத்திற்கு புதன் தசா எப்படியிருக்கும்?

இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்ததெந்த  இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகின்றோம். ஏற்கனவே மீன லக்னத்திற்கு சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன், செவ்வாய் குருவினுடைய தசா காலங்கள்  எந்தெந்த இடங்களில் இருக்கும் பொழுது எது மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று மீன லக்னத்திற்கு புதன் தசா எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்பதை பார்ப்போம்.

மீன லக்னத்திற்கு புதன்,  தாயார், நிலம், பூமி, வீடு,மனை, வாகனம், கல்வி போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய நான்காம் வீட்டு அதிபதியாகவும் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், கூட்டு தொழில் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய ஏழாம் வீட்டு அதிபதியாகவும் வருவார்.
மீன லக்னத்திற்கு லக்னத்தில் புதன் இருப்பதை பொருத்தவரையில் நீசம் பெற்ற நிலையில் இருப்பார். நீசம் பெற்றிருந்தாலும் லக்னத்தில் அவர் திக்பலம் அடைவது சிறப்பான அமைப்பு. மேற்கொண்டு சனி ராகு போன்ற பாபர்களின்  தொடர்பினை பெறாத வரை மீன லக்னத்திற்கு லக்னத்தில் நின்றுள்ள புதன் தொடர்புடைய தசாபுத்திகள் நல்ல பலனைத் தரும்.
லக்னத்தில் புதன் இருக்கும்போது ஜாதகர் இயல்பாகவே நல்ல புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் ஜாதகர் மீது பிரியம் உடையவராக இருப்பார். சுபர் வீட்டில் புதன் திக்பலம் பெற்ற நிலையில் இருப்பதால் ஜாதகர் என்றுமே இளமையான தோற்றத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் ஜாதகரை விட புத்திசாலித்தனம் மிக்கவராக இருப்பார்.

வீடு கொடுத்த குரு வலுவாக இருத்தல், சந்திரனுக்கு கேந்திரத்தில்  புதன் இருப்பது போன்ற நிலைகள் மேற்கொண்டு புதனுக்கு வலுவை அளிக்கும் என்பதால் நல்ல பலன்களை ஜாதகர் பெறுவார்.
சனி ராகு போன்ற பாவிகளின்  தொடர்பு பெரும்பொழுது புதனுடைய காரகத்துவ ஆதிபத்ய விஷயங்களில் சற்று குறைபாடுகள் இருக்கும்.

இரண்டாம் இடமான மேஷத்தில் புதன் இருப்பதை பொருத்தவரை அது அவருக்கு பகை வீடு.வரக்கூடிய வாழ்க்கைத் துணை சற்று பிடிவாதம் நிறைந்தவராக இருப்பார். சுபர்களுடைய தொடர்பை இரண்டில் இருக்கக்கூடிய புதன் பெரும் பொழுதும், வீடு கொடுத்த செவ்வாய் வலுப்பெற்று நிலையில் இருக்கும் போதும் நல்ல பலன்களே நடக்கும். புதன் ஏழாம் அதிபதியாகி இரண்டில் இருக்கும் காரணத்தினால் திருமணத்திற்கு பின்பு ஜாதகர் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை பெறுவார்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் புதன் இருப்பது மிக அருமையான பலன்களை தரும். ஏனெனில் புதனுக்கு இவ்விடம் நட்பு வீடாகும். ஜாதகர் எழுத்து, இசை, ஓவியம், தகவல் தொடர்பு, கணிதம் போன்ற விஷயங்களில் திறமை உள்ளவராக இருப்பார்.வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் பொழுது சிறப்பான பலன்களை ஜாதகர் மனைவி வழியில் பெறக் கூடியவராக இருப்பார்.

நான்காம் இடமான மிதுனத்தில் அவர் ஆட்சி பெற்று நிலையில் இருப்பார். தனித்த நிலையில் ஆட்சி பெற்று இருந்தாலும் சுபர் தொடர்பு பெரும் பொழுது மட்டுமே தன்னுடைய தசா புத்திகளில் கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார். மேலும் இது அரிதிலும் அரிதான ஒன்றாகவே இருக்கும். சந்திரனுடைய நிலைமையை பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.  இங்கே சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெறுவது சிறப்பான அமைப்பைத் தரும். வீடு, வாகனம், நிலம், சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மையான பலனைத் தருவார்.நான்கில் இருக்கக்கூடிய புதன், சனி மற்றும் செவ்வாய் பார்வை அல்லது இணைவினை பெறும் பொழுது கேந்திராதிபத்திய தோஷத்தை செய்யமாட்டார்.
நான்காம் வீட்டில் புதன் இருக்கும் போது தன்னுடைய ஏழாம் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ( தகவல் தொடர்பு, பத்திரம், கணிதம், வியாபாரம்) ஜாதகருக்கு தொழில் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த புத்திசாலியாக இருப்பார்.

ஐந்தாம் இடமான கடகத்தில் புதன் இருப்பதை பொறுத்தவரை அங்கு அவர் பகை பெற்ற நிலையில் இருப்பார்.பரிவர்த்தனை பெறுவது, மேற்கொண்டு குரு சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை பெறுவது சிறப்பான பலனைத் தரும்.
வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் மனைவி வகையிலும், தாயார் வகையிலும் மேன்மையான பலன்களை தருவார்.

ஆறாம் இடமான சிம்மத்தில் புதன் இருக்கும்பொழுது ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் மறைகின்றார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதம் ஆவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் தன்னுடைய பாதக, கேந்திர, மாராக வீட்டிற்கு மறைவு ஸ்தானத்தில் இருப்பதாலும் சிம்மம் புதனுக்கு நட்பு வீடு என்பதாலும் மனைவி வகையில் நல்ல பலன்களையே தருவார்.
ஆறில் இருக்கக்கூடிய புதன் மேற்கொண்டு சுபர்களின் தொடர்பு பெறுவது சிறப்பான அமைப்பாகும். கடன், எதிரகள் தொல்லை இருக்க வாய்ப்புண்டு.

ஏழாம் இடமான கன்னியில் இருப்பதை பொருத்தவரை அங்கே அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார்.மேற்கொண்டு சுபர்களின் தொடர்பினை  பெற்று, புதன் தசாவும் நடைமுறையில் வரக்கூடிய பட்சத்தில் அரிதினும் அரிதான நிலைகளில் மட்டுமே கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார்.
வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதன் தசா புத்திகளில் பாதிப்பினை தருவார்.
பாப கிரகங்களின்  பார்வையை பெற்று இருக்கும் பொழுதும் அல்லது  பாபர்களுடன்  இங்கே இணைந்து இருக்கக்கூடிய பட்சத்திலும், வக்கிரம் பெற்ற நிலையில் புதன் இருக்கும் போதும் கேந்திராதிபத்திய தோஷத்தை செய்யமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார அடிப்படையில் சந்திரன் மற்றும் செவ்வாய் சாரம் பெற்றிருப்பது சிறப்பு. நீச சுக்ரனுடைய இணைவினை  பெற்றிருப்பதும் பெரிய பாதிப்பினை தராது.
பாபர்களின்  தொடர்பின்றி லக்னாதிபதி குருவினுடைய பார்வை அல்லது இணைவினை பெறும்போது புதன் தசா புக்திகளில் வாழ்க்கைத் துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லதாகும்.
புதன் ஏழில் உச்சம் பெற்ற நிலையில் இருந்து லக்னத்தைப் பார்ப்பதால் ஜாதகரும் சரி, ஜாதகருக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணையும் சரி, மிகுந்த புத்திசாலித்தனம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

எட்டாம் இடமான துலாத்தில் இருப்பதை பொருத்தவரை ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் மறைகின்றார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் இங்கே அவர் நட்பு பெற்ற நிலையில் இருப்பதால், பாபர்களின் தொடர்பை பெறாத நிலையில் நல்ல வாழ்க்கைத்துணையை  ஜாதகருக்கு தருவார். இங்கே பரிவர்த்தனை(7 மற்றும் 8 ) பெற்ற நிலையில் இருப்பதும் சிறப்பான அமைப்பு.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் இருப்பதை பொருத்தவரையில் புதன் இங்கே பகை வீட்டில் இருப்பார். 
தனித்த நிலையில் ஒன்பதாமிடத்தில் இருக்கும்பொழுது பெரிய பாதிப்பை தரமாட்டார். ஆனால் இங்கே ஆறாம் அதிபதியான  சூரியனுடன் சேரும்போது பாப கிரகமான ஆறாம் வீட்டு அதிபதி உடன் இணைகின்றார் என்ற அடிப்படையில் வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறுசிறு பாதிப்புகளைத் தருவார்.ஒன்பதில் இருக்கக்கூடிய புதன் சுபர்களின் தொடர்பை பெறுவது நல்லது.

பத்தாமிடமான தனுசில் புதன் இருப்பது சிறப்பான அமைப்பு. தன்னுடைய இரு வீட்டிற்கும் கேந்திர ஸ்தானத்தில் இருப்பதும், சுபரின் வீட்டில் இருப்பதாலும் ஜாதகருக்கு தொழில் ரீதியாக நல்ல பலன்களைத் தருவார்.
புதனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்புண்டு. ஜாதகர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த புத்திசாலித்தனம் உடையவராக செயல்படுவார்.
பதினொன்றாம் இடமான மகரத்தில் புதன் இருப்பது சிறப்பான அமைப்பு. தன்னுடைய நான்காம் வீட்டிற்கு எட்டில் மறைந்தாலும், ஏழாம் வீட்டிற்கு திரிகோணத்தில் இருப்பது நல்ல அமைப்பே.
மேலும் புதனுக்கு மகரம் நட்பு வீடாக, சர ராசியாக இருப்பது சிறப்பு. அவயோக கிரகங்கள் பொதுவாக 3, 6, 10, 11 ஆம் இடங்களில் நட்பு நிலையில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். அந்த வகையில் வாழ்க்கைத்துணை அமைந்த பிறகு ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர்வைத் தருவார். சுபகிரகங்களான குரு,சுக்கிரன் போன்றவர்களின்  தொடர்பை இங்கே பெற்றிருப்பதும் மிகுந்த மேன்மையான பலன்களை தரும்.
புதன் இங்கே நான்காம் வீட்டிற்கு எட்டில் மறைந்தாலும் சந்திரனுடைய நிலையை கவனத்தில் கொண்டே  ஜாதகருடைய  தாயாருடைய நிலையை கவனிக்க வேண்டும்.

12ஆம் இடமான கும்பத்தில் புதன் இருப்பதை பொருத்தவரை ஏழாம் அதிபதி 12ல் மறைவார். மேலும் தன்னுடைய ஏழாம் வீட்டிற்கு ஆறில் மறைவார் என்ற அடிப்படையில் திருமணம் தாமதமாக நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனினும் கும்பம் புதனுக்கு நட்பு வீடாக  இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு சுக்கிர தசா எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது எது மாதிரியான தரும் என்பதை பார்ப்போம்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

புதன், 6 ஏப்ரல், 2022

மீன லக்னத்திற்கு செவ்வாய் தசா எப்படியிருக்கும்?

மீன லக்னத்திற்கு செவ்வாய் தசா எப்படி இருக்கும்?

நவக்கிரகங்களில் செவ்வாயானவர் இயற்கை பாபராக கருதப்பட்டாலும் மீன லக்னத்திற்கு நன்மை செய்யக் கடமைப்பட்டவர் ஆவார். #Iniyavan 

தனம், குடும்பம், பொருளாதாரம், பேச்சு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய இரண்டாம் வீட்டு அதிபதியாகவும் 
அதிர்ஷ்டம், நல்லவாய்ப்புகள், தந்தை ஸ்தானம் போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய ஒன்பதாம் வீட்டு அதிபதியாகவும் வரக் கூடியவர் செவ்வாய் ஆவார்.

இலக்னத்தில் செவ்வாய் இருப்பது ஓரளவு நல்ல அமைப்பே. தன்னுடைய இரண்டாம் வீட்டுக்கு பன்னிரண்டிலும் ஒன்பதாம் வீட்டிற்கு ஐந்திலும் இருக்கின்றார். அந்த வகையில் ஜாதகரை சற்று கோபக்காரராக, நல்ல துடிப்பு மிக்கவராக, நேர்மையானவராக, சற்று அவசரபுத்தி கொண்டவராக வைத்திருப்பார்.#Iniyavan

பாப கிரகங்கள் இலக்னத்தில் இருப்பது நல்லதல்ல என்றாலும், 
இலக்னம் இயற்கை சுபரின் வீடாக இருப்பதால் லக்னத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் தசா கெடுதல்களை ஜாதகருக்கு செய்துவிடவில்லை.
லக்னாதிபதி குருவின் தொடர்பினை பெற்ற லக்னத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் தசா ஜாதகருக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை தரும்.
லக்னத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் தசா ஆன்மீக விஷயங்களில் சற்று ஈடுபாடு, இரக்க சுபாவம், பொதுநல மனப்பான்மை போன்ற குணங்களையும்  தரும்.
#Iniyavan
இரண்டாம் இடமான மேஷத்தில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை அங்கே அவர் ஆட்சி பெற்று நிலையில் இருக்கிறார். பாபகிரகங்கள் இரண்டாம் வீட்டில்  இருப்பது நல்லதல்ல என்ற அடிப்படையில் இரண்டாம் வீட்டில் ஆட்சி வலுவில் இருக்கக்கூடிய செவ்வாய் தசா இரண்டாம் இடம் குறிக்கக் கூடிய தனம் பேச்சு, குடும்பம் போன்ற விஷயங்களில் பாதிப்புகளைத் தரும்.மேலும் பாக்கிய ஸ்தானத்திற்கு 6ஆம் வீட்டில் மறைவதால் ஒன்பதாமிட நற்பலன்களை குறைத்தே செய்வார்.

பொதுவாக இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருக்கும் பொழுது குடும்பம் அமைவதில் தடை தாமதத்தை தருவார். அந்த வகையில் திருமணம் தாமதமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
சுப கிரகங்களான சுக்கிரன், குரு, வளர்பிறை சந்திரன் தொடர்பினைப் பெறும் போது இரண்டாம்  வீட்டில் இருக்கும்  செவ்வாய் பொருளாதார வகையில் நன்மைகளைச் செய்வார்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் இருப்பது நல்லதாகும். ஏனெனில் அது இயற்கை சுபர் வீடு. அங்கே இருக்கும் செவ்வாய் தன்னுடைய ஏழாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும், தன்னுடைய எட்டாம் பார்வையால் பத்தாம் வீட்டையும் பார்ப்பார்.
ஒன்பதாம் வீட்டிற்குரிய கிரகம் பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொள்வது ஒரு வகையில் தர்மகர்மாதிபதி யோகம். அந்தவகையில் செவ்வாய் தசா ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.#Iniyavan

4-ஆம் இடமான மிதுனத்தில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை அங்கு அவர் பகை பெற்று நிலையில் இருப்பார். மேலும் அங்கே அவர் திக் பலத்தினை இழப்பார். அதோடு தன்னுடைய ஒன்பதாம் வீட்டிற்கு எட்டில் மறைவதால் ஒன்பதாமிடம் நற்பலன்களை பெரிய அளவில் செய்யமாட்டார். இருப்பினும் தன்னுடைய பார்வையால் 10, 11ஆம் வீடுகளை தொடர்பு கொள்வதால் ஓரளவு நன்மைகளையும் செய்யக் கடமைப்பட்டவர் ஆவார்.
சுக ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் நான்காமிடம் குறிக்கக்கூடிய நிலம், பூமி, வீடு, மனை, வாகனம் போன்றவற்றின் வாயிலாக ஜாதகர் சுகத்தினை பெறுவார்.

நான்கில் இருக்கக்கூடிய செவ்வாய் பத்தாம் வீட்டை பார்ப்பதால் செவ்வாயின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்புண்டு.#Iniyavan

ஐந்தாம் இடமான கடகத்தில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை அங்கு  நீசம் பெற்று நிலையில் இருப்பார். பாக்கியாதிபதி நீசம் பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல. மேலும் பாப கிரகம் ஐந்தாம் வீட்டில் இருப்பதும் நல்லதல்ல.
லக்னாதிபதி குருவின் தொடர்பை ஐந்தாம் வீட்டினில் உள்ள செவ்வாய் பெரும்பொழுது ஒரளவு நன்மைகளைச் செய்வார்.
ஆறாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் இருப்பது மிகுந்த நன்மைகளை தரக்கூடிய அமைப்பாகும் ஏனெனில் அது செவ்வாயுக்கு அதிநட்பு வீடாகும். அதுமட்டுமின்றி தன்னுடைய இரண்டாம் வீட்டிற்கும் கோணத்திலும் ஒன்பதாம் வீட்டிற்கு கேந்திரத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். 
தன்னுடைய நான்காம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், எட்டாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதும் சிறப்பான அமைப்பு.
தன்னுடைய தசாபுத்தி காலகட்டங்களில் ஆறாமிடம் குறிக்கக்கூடிய வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.
அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாக்குவார்.
ஆறாம் வீட்டினிலுள்ள செவ்வாய், பாப கிரகங்களான சனி,ராகு, அமாவாசை சந்திரன் போன்ற கிரகங்களின் தொடர்பினை பெறுவது நல்லதல்ல.

ஏழாம் இடமான கன்னியில் செவ்வாய் பகை பெற்று நிலையில் இருப்பார். ஒரு பாபக் கிரகம் கேந்திரத்தில் இருக்கலாம் என்ற அடிப்படையில் பெரிய கெடுதல்களை இங்கே இருக்கக்கூடிய செவ்வாய் செய்து விடுவதில்லை. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று தாமதத்தினை தருவார்.
லக்னத்தோடு செவ்வாய் தொடர்பு கொள்வதால் ஜாதகர் சற்று கோபக்காரராக இருப்பார்.
வரக்கூடிய வாழ்க்கைத்துணையும் சற்று பிடிவாதம் கொண்டவராக இருப்பார்.
பாக்கியாதிபதி ஏழாம் வீட்டில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் ஏழாம் இடம் குறிக்கக்கூடிய வாழ்க்கைத் துணை சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல படியாகவே இருக்கும்.
இருப்பினும் சனி, ராகு,அமாவாசை சந்திரன் போன்ற பாபர்களின் தொடர்பினை பெறுவது நல்லதல்ல.

எட்டாம் இடமான துலாத்தில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை தன்னுடைய பாக்கிய ஸ்தானத்திற்கு 12 ஆம் வீட்டில் மறைவதால் ஒன்பதாமிடம் நற்பலன்களை குறைப்பார்.
அங்கே இருக்கக்கூடிய செவ்வாய் தன்னுடைய ஏழாம் பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பம், பொருளாதாரம், பேச்சு, திருமண தாமதம், வாழ்க்கைத்துணை சம்பந்தப்பட்ட விஷயங்களில் செவ்வாய் தசாவில் சற்று பாதிப்புகளை தருவார்.
இருப்பினும் அது சுபர் வீடாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் செவ்வாய் இருப்பதை பொருத்தவரையில் அங்கே அவர் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பார். பாக்கியாதிபதி வலுப்பெற்ற நிலையில் இருப்பது நல்லது என்றாலும் பாபகிரகங்கள் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது நல்லதல்ல என்ற அடிப்படையில் தந்தை சம்பந்தப்பட்ட விஷயங்கள், பூர்வ புண்ணியம், சொத்து பத்துக்கள், சகோதரம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு சற்று பாதிப்புகளை கொடுப்பார்.

லக்னாதிபதி குருவின் தொடர்பு, வளர்பிறை சந்திரன் அல்லது சுக்கிரனின் தொடர்பினை ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாய் பெரும்பொழுது பெரிய பாதிப்பை தரமாட்டார்.

பத்தாமிடமான தனுசில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை அது சிறப்பிற்குரிய அமைப்பு .ஒன்பதாம் வீட்டு அதிபதி, பத்தாம் வீட்டில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் தர்மகர்மாதிபதி யோக பலன்களை இங்கே தருவார்.
மேலும் பத்தாம் வீட்டில் இருக்கக்கூடிய செவ்வாய் திக் பலத்தினை பெறுவதால்
செவ்வாயின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில்களை ஜாதகரை மேற்கொள்ளச் செய்வார்.
இங்கே செவ்வாய் 9, 10 என்ற பரிவர்த்தனை அமைப்பில் இருப்பது சிறப்பிற்குரிய அமைப்பாகும். ஏனெனில் அவர் பரிவர்த்தனை பெற்ற அமைப்பில் இருக்கும் பொழுது விருட்சகத்தில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய 5ம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பார்.
10 ஆம் வீட்டில் நிற்கக்கூடிய செவ்வாய் தன்னுடைய நான்காம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பார். 9 10-க்குடைய லக்னத்தை தொடர்பு கொள்வது மற்ற லக்னங்களுக்கு இல்லாத சிறப்பினை மீன லக்கினத்திற்கு இங்கே தரும்.#Iniyavan

11-ஆம் இடமான மகரத்தில் செவ்வாய் இருப்பதை பொறுத்தவரை அங்கே அவர் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார்.
இரண்டாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டடுடன் தொடர்பு பெறுகின்றார் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தருவார்.
இருப்பினும் பாப கிரகங்கள் கேந்திர, திரிகோணங்களில் தனித்து உச்சம் பெறுவது நல்லதல்ல என்ற அடிப்படையில் இந்த இடத்தில் கேதுவுடன் இணைந்து இருப்பதோ அல்லது இயற்கை சுபரான குரு  வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரனுடைய தொடர்பினை பெறுவது நல்ல அமைப்பாகும்.
சுபர் தொடர்பின்றி தனித்த நிலையில் இருக்கும் நிலையில்  தன்னுடைய நான்காம் பார்வையால் தன ஸ்தானத்தை பார்ப்பார். அந்தவகையில் குடும்பம், பேச்சு, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன்னுடைய செவ்வாய் தசாவினில் பாதிப்புகளையும் செய்வார்.
சுபர்களின் தொடர்பினை பெற்றிருக்கும் போது பிரச்சினை இல்லை.

12ஆம் இடமான கும்பத்தில் செவ்வாய் இருப்பது நல்லதல்ல. பாக்கியாதிபதி மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் பாக்கியங்கள் தடைபடும்.
தன ஸ்தான அதிபதி 12ஆம் வீட்டில் மறைவதால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஜாதகருக்கு அவ்வப்போது பிரச்சனைகள் இருக்கும்.
விரையச் செலவுகள் அதிகமிருக்கும்.
12 ஆம் வீட்டில் இருக்கக்கூடிய செவ்வாய் ஜாதகரை மிகுந்த சிக்கனமாக, கஞ்சனாக இருக்க வைப்பார். பணம் வருவதில் பிரச்சினை இருப்பதால் செலவு செய்வதற்கு மனமில்லாமல் ஜாதகர் இருப்பார்.
சுபகிரகங்களின் தொடர்பினை  
பெரும்போது பெரிய பாதிப்பை தரமாட்டார்.
மீன லக்கினத்திற்கு செவ்வாய் பாதிப்பைத் தரக் கூடிய வகையிலிருந்து தசா நடத்தக்கூடிய காலகட்டங்களில் தொடர்ச்சியான முருக பெருமான் வழிபாடுகள், பாதிப்புகளை குறைத்து ஓரளவு நலத்தினை நல்கும்.#Iniyavan

அடுத்த பதிவில் மீன லக்னத்திற்கு புதன் தசா எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதை பற்றி பார்ப்போம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

செவ்வாய், 29 மார்ச், 2022

மீன லக்னத்திற்கு சந்திர தசா எப்படியிருக்கும்?

இலக்ன ரீதியாக ஒன்பது கிரகங்களின் தசா புத்தி காலங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கும் போது எது மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே மீன லக்னத்திற்கு சுக்கிரன் மற்றும் சூரியனுடைய தசா காலங்கள் எந்தெந்த இடங்களில் இருக்கும் போது எது மாதிரியான பலன்களை கொடுப்பார்கள் என்பதை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று  மீன லக்னத்திற்கு சந்திர தசா எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்பதை பார்ப்போம். #Iniyavan 
மீன லக்னத்திற்கு சந்திரன் குழந்தைப்பேறு,ஆழ்மன ஸ்தானம், அதிர்ஷ்ட வாய்ப்புகள்  போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டக்கூடிய பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படக்கூடிய ஐந்தாம் வீட்டு அதிபதியாக வருவார்.

மீன லக்னத்திற்கு சந்திரன் போதுமானவரை நல்ல பலன்களையே செய்வார். சந்திரன் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பாபகிரகங்களால் சூழப்பட்டுஇருக்கும் போது மட்டுமே பெரிய அளவில் நன்மைகளை செய்ய மாட்டார். இருப்பினும் பெரிய கெடுதல்களையும் சந்திர தசா தந்து விடுவதில்லை.

இலக்னத்தில் அவர் இருப்பதை பொருத்தவரை வளர்பிறைச் சந்திரனாக இருப்பது சிறப்பு.
மீன இலக்னத்தைப் பொறுத்தவரை இலக்னத்தில் சந்திரன் இருக்கும் பொழுது ஜாதகர் மிகவும் மென்மையான சுபாவம் உடையவராக, நல்லவராக, நல்ல குணங்களை கொண்டவராக இருப்பார்.
வீடு கொடுத்திருக்கக் கூடிய குரு வலுப்பெற்றிருக்கும் பட்சத்தில் சந்திரனுடைய தசா புத்தி காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.

சந்திரனுடைய தசா புத்தி காலங்களில் குழந்தைகள் வகையில் மேன்மையான பலன்கள் மற்றும் ஜாதகர் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற கூடியவராக இருப்பார். #Iniyavan

இரண்டாம் வீடான மேஷத்தில் சந்திரன் இருப்பதும் சிறப்பிற்குரியதே. வளர்பிறை சந்திரனாக இருக்கும் பொழுது தன்னுடைய தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு நல்ல பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுப்பார்.
அமாவாசையை நெருங்குகின்ற சந்திரனாக இருந்து சனி ராகு போன்ற பாப கிரகங்களின் தொடர்பு பெரும்பொழுது மனம் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தனம்,குடும்பம்  போன்ற விஷயங்களில் பிரச்சனைகளை தர வாய்ப்புண்டு.

மீன லக்கினத்திற்கு சந்திரன் மூன்றாம் வீடான ரிஷபத்தில் இருப்பது சிறப்பிற்குரிய அமைப்பாகும். எஏனெனில் இங்கே சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். மேலும் திக்பலத்திற்கு நெருங்கிய நிலையில் இருப்பார்.
ஜாதகர் தெளிவான தீர்க்கமான திடமான மன நிலையை பெற்றவராக இருப்பார்.
தாயார் வகையில் முழுமையான ஆதரவு பெற்றவராக, தாயார் மீது அதிக பிரியம் கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
ஐந்தாம் அதிபதி சந்திரன் உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் ஜாதகருக்கு நல்ல நினைவாற்றல் திறன், நல்ல ஞாபக சக்தி திறன், நல்ல புத்திசாலித்தனம் இருக்கும்.

ஐந்தாம் அதிபதியான அவர் உச்சம் பெற்ற நிலையில் ஒன்பதாம் வீட்டினை பார்ப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பாக இருக்கும். ஜாதகர் தெய்வ காரியங்களை முன்னின்று நடத்துவதாக, தெய்வ அனுகூலம் பெற்றவராக இருப்பார்.
சார அடிப்படையில் அவர் தனது சுய சாரமான ரோகிணி மற்றும் செவ்வாய் சாரங்களில் இருப்பது சிறப்பிற்குரிய இருக்கும். ஆறாம் அதிபதி சூரியனின் சாரமான கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது தன்னுடைய தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.
#Iniyavan
நான்காம் இடமான மிதுனத்தில் சந்திரன் இருப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பே தன்னுடைய ஐந்தாம் வீட்டிற்கு 12ல் மறைந்தாலும் இங்கே அவர் திக்பலம் என்ற நிலையை பெற்றிருப்பார். அந்த வகையில் சந்திரனால் கிடைக்கக்கூடிய விஷயங்கள் கிடைக்கவே செய்யும்.
இங்கே ஐந்தாம் வீட்டு அதிபதியான சந்திரன் ஐந்தாம் வீட்டிற்கு 12-ல் மறைவதால் ஆண்வாரிசு தாமதத்தினை உண்டாக்குவார். இருப்பினும் புத்திரக்காரகனான குருவின் நிலையைப் பொறுத்து ஆண்வாரிசு கிடைப்பதற்கும் வாய்ப்புண்டு.

நான்கில் இருக்கக்கூடிய சந்திரன் பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் தன்னுடைய தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு உயர்வினைத் தருவார்.

மீன இலக்கனத்திற்கு ஐந்தாம் இடமான கடகத்தில் தன்னுடைய சொந்த ஆட்சி வீட்டில் சந்திரன் இருப்பது சிறப்பான அமைப்பாகும் .வளர்பிறைச் சந்திரன் இருக்கும்போது தன்னுடைய தசா புத்தி காலகட்டங்களில் மிக மேன்மையான பலன்களைத் ஜாதகருக்கு தருவார்.
ஐந்தில் இருக்கக்கூடிய சந்திரன் 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தன்னுடைய தசா புத்தி காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக உயர்வினை ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். குரு சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை பெறுவது மேற்கொண்டு நல்ல பலன்களைத் தரும்.
இங்கே புதனுடைய தொடர்பு நல்லதல்ல.#Iniyavan

சார அடிப்படையில் குருவின் சாரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் வர்க்கோத்தமம் பெறுவது சிறப்பிற்குரிய அமைப்பாகும்.
பத்தாம் வீட்டுடன் பரிவர்த்தனை பெற்று கூடிய பட்சத்தில் தன்னுடைய தசா புத்தி காலங்களில் தொழில் ரீதியாக முன்னேற்றத்தினை ஜாதகருக்குத் தருவார்.
#Iniyavan
ஆறாம் இடமான சிம்மத்தில் சந்திரன் இருப்பதை பொருத்தவரை அவர் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் பொழுது வேலை சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றத்தை தருவார். இருப்பினும் ஒளி கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது என்ற விதியின் அடிப்படையில் இங்கே சந்திரன் இருப்பது அவ்வளவு தூரம் சிறப்பிற்குரிய அல்ல.
ஆறில் நின்று சந்திரன் தசா புத்தி நடத்தும் போது சற்று சில சறுக்கல்களை கொடுத்து பின்பு ஒரளவு நல்ல பலன்களைத் தருவார்.
ஐந்தாம் அதிபதியான சந்திரன் ஆறாம் வீட்டில் இருப்பதால், ஐந்தாம் வீட்டின் பலன்களை ஆறாம் வீட்டின் வழியாக தரக்கூடும்.அந்தவகையில் முறைகேடான வழிகளில் பணம் சம்பாதிக்க கூடிய எண்ணத்தை ஜாதகருக்கு தருவார்.

அடுத்ததாக ஏழாம் இடமான கன்னியில் இருப்பதை பொறுத்தவரையில் அவர் வளர்பிறைச் சந்திரனாக இருப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும்.
ஐந்தாம் அதிபதி சந்திரன்,  ஒளி பொருந்திய நிலையில் ஏழாம் இடத்தில் இருக்கும் பொழுது நல்ல பொறுப்பான, அழகான, அக்கறையுள்ள வாழ்க்கைத்துணையை ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்.

வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் போது 5-க்குடையவர் லக்னத்தைப் பார்க்கிறார் என்ற அடிப்படையில் ஜாதகருக்கும் தன்னுடைய தசா புத்தி காலகட்டங்களில் நல்ல நன்மைகளை செய்வார். ஜாதகரை பொதுமக்கள், வெகுஜன தொடர்பு போன்ற விஷயங்களில் பிரபலம் அடையச் செய்வார்.
#Iniyavan
எட்டாம் இடமான துலாத்தில் சந்திரன் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் பொதுவாக ஒளிக் கிரகங்கள் எட்டாம் வீட்டில் மறைய கூடாது. மேற்கொண்டு இங்கே பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக இருந்து எட்டாம் வீட்டில் மறைவதால் ஜாதகரை தூர இடங்களுக்கு நகர்த்தி பிழைக்க வைப்பார்.
அமாவாசை சந்திரனாக இருந்து சனி ராகு போன்ற பாபர்களின் தொடர்பு பெறும்பொழுது குழந்தைகள் வகையில் தேவையற்ற மன அழுத்தத்தைத் ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்.
வளர்பிறை சந்திரனாக இருக்கக்கூடிய பட்சத்தில் அவர் எட்டாம் வீட்டில் இருக்கும் போது தன ஸ்தானமான 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் ஜாதகர் ஏற்படுத்தி கொடுப்பார்.#Iniyavan

அடுத்ததாக மீன லக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் சந்திரன் இருக்கும்போது அவர் நீசம் என்ற நிலையை பெறுவார். அவர் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்பொழுது நீசம் என எடுத்துக் கொள்ள வேண்டியதே கிடையாது.

ஐந்தாம் வீட்டு அதிபதி மற்றொரு திரிகோணத்தில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் தன்னுடைய தசா புத்தி காலகட்டங்களில் ஜாதகருக்கு நல்ல உயர்வைத் தருவார்.
இங்கே செவ்வாயுடன் இணைந்து இருப்பதும் சிறப்பானதே.
 அமாவாசையை நெருங்கிக் கொண்டுள்ள தேய்பிறை சந்திரனாக இங்கே இருக்கும்பொழுது கண்டிப்பாக நீசம் என எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் செவ்வாயுடன் இணைந்து இருப்பதும் அங்கே நீசபங்கம் என எடுத்துக்கொள்ள முடியாது.#Iniyavan

தன்னுடைய தசாபுக்தி காலகட்டங்களில் ஒன்பதாமிடம் குறிக்கக்கூடிய தந்தை, பாக்கியங்கள் மற்றும் 
 சந்திரனுடைய ஆதிபத்தியம் காரகத்துவம் சார்ந்த குழந்தைகள் சார்ந்த விஷயங்கள், அதிர்ஷ்டம் இழப்பு மற்றும் தாயார் வகையில் ஜாதகருக்கு பிரச்சனைகளைத் தரக்கூடும்.

அடுத்ததாக பத்தாமிடமான தனுசில் சந்திரன் இருப்பதும் சிறப்பிற்குரிய அமைப்பே. ஒரு கோண அதிபதி, கேந்திரத்தில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் தொழில்ரீதியாக நல்ல பலன்களை ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுப்பார்.
பத்தில் இருக்கக்கூடிய சந்திரன் நான்காம் வீட்டை பார்ப்பதால் 4-ஆம் இடம் குறிக்கக்கூடிய தாயார் ஆதரவு, நிலம், பூமி,வீடு, மனை, கல்வி போன்றவற்றின் வாயிலாகவும் நல்ல பலன்களை ஜாதகருக்கு தருவார்.#Iniyavan

அடுத்ததாக 11-ஆம் இடமான மகரத்தில் இருப்பதை பொறுத்தவரை தன்னுடைய வீட்டிற்கு கேந்திரத்தில் இருக்கின்றார். என்று அடிப்படையிலும், தன்னுடைய வீட்டைத் தானே பார்க்கிறார் என்ற அடிப்படையில் சிறப்பிற்குரிய அமைப்பே. வளர்பிறை சந்திரனாக இருக்கும்போது தனது தசாபுத்தி காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக உயர்வினை தருவார். குழந்தைகள் வழியில் நல்ல மன மகிழ்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி கொடுப்பார்.#Iniyavan

அடுத்ததாக 12ஆம் இடமான கும்பம். பொதுவாக ஒளிக் கிரகங்கள் 6,8, 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் இருப்பது நல்லதல்ல என்ற அடிப்படையில் பெரிய நன்மைகளை சந்திரன் இங்கே செய்வதில்லை.
இருப்பினும் இங்கே இருக்கக்கூடிய சந்திரன், உத்யோக ஸ்தானமான 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்பொழுது வேலை சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு ஓரளவு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.
பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் ஜாதகரை பூர்வீக இடங்களில் வாழ விடாமல் தொலை தூரங்களுக்கு நகர்த்தி பிழைக்க வைப்பார்.
#Iniyavan
மீன லக்கனத்தினை பொருத்தவரையில் சந்திரன் 5-க்குடைய திரிகோண அதிபதியாக வருவதால், எங்கிருந்தாலும் போதுமானவரை மிகப்பெரிய கெடுதல்களை செய்து விடுவதில்லை.
அமாவாசை நெருங்கக் கூடிய சந்திரனாக இருந்து சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு பெரும் போது மட்டுமே தீமைகளை செய்வார்.

மீன லக்கினத்திற்கு சந்திரன் வலுப்பெறுவது சிறப்பிற்குரிய அமைப்பாகும்.
சந்திரன் வலு குறைந்து நிலையில் இருக்கக்கூடியவர்கள் திங்கள்தோறும் வரக்கூடிய பிரதோச வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும். பெளர்ணமி தோறும் தவறாது அம்பாளிடம் சரணடைந்து விடுவது, மூன்றாம்பிறை தரிசனம் காண்பது, சங்கடகரசதுர்த்தி விரதம் இருப்பது போன்றவை சந்திரனை  வலுப்படுத்த உதவும்.
#Iniyavan
வாழ்வியல் பரிகாரங்களாக தாயார் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தாயாரை ஆதரவாக  கவனித்து கொள்வது, கனிவுடன் நடந்து கொள்வது, தாயாரை ஒத்த வயது உடையவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்வது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்றவை சிறப்பிற்குரிய பரிகாரங்கள் ஆகும்.#Iniyavan
அடுத்த பதிவில் மீன லக்கினத்திற்கு செவ்வாய் தசா எது மாதிரியான பலன்களை தரும் என்பதைப் பார்ப்போம்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL- 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

திங்கள், 7 பிப்ரவரி, 2022

மீன லக்னத்திற்கு சூரிய தசா எப்படியிருக்கும்?

மீன லக்னத்திற்கு சூரிய தசா எதுபோன்ற நிலைகளில் நன்மையைச் செய்யும்?

மீன லக்னத்திற்கு சூரியன் கடன், நோய்,அடிமை வேலை, எதிரி, வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக் காட்டக்கூடிய ஆறாம் வீட்டு அதிபதியாக வரக்கூடியவர் ஆவார்.
பெரும்பாலான இலக்னங்களுக்கு ஆறாம் வீட்டு அதிபதி, லக்னாதிபதிக்கு பகை தன்மை கொண்ட கிரகமாக வரும்பொழுது மீன லக்கினத்திற்கு  ஆறாம் வீட்டு அதிபதி சூரியன், லக்னாதிபதிக்கு நட்புக் கிரகமாக வருவார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அந்த வகையில் 6-க்குடையவர் என்றாலும் மீன லக்கினத்திற்கு சூரிய தசா பெரிய அளவில் கெடுதல் செய்யாது. Iniyavan Karthikeyan 
இருப்பினும் லக்னாதிபதிக்கு நட்பு கிரகமே ஆறாம் வீட்டு அதிபதியாக வரக்கூடிய காரணத்தினால் நண்பர்களே எதிரிகளாக மாறக்கூடியகூடிய சூழ்நிலை மீன லக்கின அன்பர்களுக்கு பெருமளவில் பொருந்தும்.

மீன லக்னத்திற்கு ஆறுக்குடைய சூரியன் லக்னத்தில் இருப்பதை பொறுத்தவரையில் ஆறாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் மறைகிறார் என்ற வகையில் ஆறாமிட கெடுபலன்கள் பெரிய அளவில் இருக்காது. #Iniyavan 

மீனம் சுபர் வீடு என்பதால் ஆளுமைத் திறனுக்கு காரகத்துவம் பெற்ற சூரியன் லக்னத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு ஆளுமைத் திறனையும்  கொடுப்பார்.

அதே நேரத்தில் சூரியன் 6-க்குடையவராக இருப்பதால் முன்கோபம், முன்னெச்சரிக்கை இன்றி பேசி விடுதல், தன் மீது தவறில்லாத போது எவரையும் எதிர்க்கக் கூடிய தன்மை,அதீதமான தன்னம்பிக்கை திறன் போன்ற பலன்களையும் சேர்த்தே தருவார். 
அரை பாபர் என்ற வகையில் லக்னத்தில் இருக்கக்கூடிய சூரியன் ஜாதகருக்கு அவ்வப்போது தலை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவார். 
லக்னத்தில் இருக்க கூடிய சூரியன் சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது ஜாதகருக்கு நல்ல ஆளுமைத் திறன், சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை, நல்ல வேலை, வேலையில் திறமை போன்ற பலன்களைத் தருவார்.
ஆறாம் அதிபதி 6-க்கு 8-ல் மறைந்து சுபரின் வீட்டில் இருப்பதால் கடன்,நோய்,வறுமை, எதிரி  சார்ந்த பிரச்சனைகளை  ஜாதகருக்கு பெரிய அளவில் தரமாட்டார். #Iniyavan

அடுத்ததாக இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதை பொறுத்தவரை சூரியன் அங்கே உச்சம் பெற்ற நிலையில் இருப்பார். ஆறாம் வீட்டு அதிபதி தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல.

ஜாதகருடைய பேச்சே பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். இரண்டாமிடம் குறிக்கக் கூடிய விஷயங்களான தனம், குடும்பம் ,வாக்கு, பணவரவு போன்றவற்றில் அவ்வப்போது ஜாதகருக்கு பிரச்சனைகள் வரலாம். 
பெரும்பாலும் சூரியன் இங்கே உச்சம் பெற்றவர்களுக்கு கண் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காரக வழியில் நல்ல சுறு சுறுப்பு, நல்ல ஆளுமைத் திறன், அதிகார குணமுடைய தந்தை போன்ற பலன்களையும் இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியன் ஜாதகருக்கு தருவார்.#Iniyavan

மூன்றாம் இடமான ரிஷபத்தில் சூரியன் இருப்பதை பொறுத்தவரை அது சுபருடைய வீடு என்பதாலும் தன்னுடைய வீட்டிற்கு பத்தாம் வீட்டில் இருக்கின்றார் என்ற அடிப்படையில் ஓரளவு நல்ல பலன்களை செய்வார்.
மேற்கண்ட சூரியன் சுபக்கிரகங்களின் தொடர்பில் இருக்கும் போது நல்ல தன்னம்பிக்கை, நல்ல தைரியம், சுறுசுறுப்பாக செயல்பட கூடிய தன்மை புகழ் பெறக்கூடிய தன்மை போன்றவற்றை உருவாக்குவார். 

சனி ராகு போன்ற பாவகிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது இளைய சகோதர வகையில் அவ்வப்போது ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்.

நான்காம் வீட்டில் சூரியன் இருப்பதை பொருத்தவரை பாபகிரகங்கள் கேந்திரங்களில் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஓரளவு நல்ல பலன்களையே செய்வார்.
நான்காம் வீட்டில் இருக்கக் கூடிய சூரியன் பத்தாம் வீட்டை பார்ப்பார் என்ற அடிப்படையில் சூரியனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தந்தையுடைய தொழில் போன்றவை அமைவதற்கு வாய்ப்புண்டு. 

ஆறாம் வீட்டு அதிபதியான சூரியன் தன்னுடைய வீட்டிற்கு லாபஸ்தானத்தில் புத்திக்காரன் புதனுடைய வீட்டில் இருப்பதால் ஜாதகர் வேலையில் அதிக ஈடுபாடு காட்டக் கூடியவராக, நல்ல திறமை உடையவராக இருப்பார். 

பாவ கிரகங்கள் தொடர்பினை பெரும்பொழுது நான்காமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நிலம்,பூமி, வீடு,மனை,வாகனம்,  தாயார் போன்றவற்றில் பிரச்சனையை தருவார். ஆறாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருப்பதால் கடன் வாங்கி வீடு கட்டக்கூடிய சூழ்நிலைகளை உண்டாக்குவார்.#Iniyavan

ஐந்தாம் வீட்டில் சூரியன் இருப்பது பொதுவாக நல்லதல்ல.
ஏனெனில் பாபகிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் இருக்கக் கூடாது. 
இங்கே ஆறாம் வீட்டு அதிபதியாகி சூரியன் புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டில் இருப்பதால் சூரிய தசாவில் குழந்தைகள் வழியில் ஜாதகருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார். தன்னுடைய குறுக்கு புத்தி தவறான சிந்தனை, செயல்பாடு,எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் அவ்வப்போது பிரச்சனைகளை உண்டாக்குவார்.
உடல்நலத்திலும் அவ்வப்போது வயிறு சார்ந்த பாதிப்புகளை செய்வார். 
வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது  பாதிப்புகள் இருக்காது.
ஆறாம் வீட்டு அதிபதி தன்னுடைய வீட்டிற்கு 12ல் மறைகிறார் என்ற அடிப்படையில் ஆறாமிடம் குறிக்கக் கூடிய வேலை அமைவதில் ஜாதகருக்கு தாமதம் இருக்கும்.#Iniyavan

ஆறாம் வீட்டில் சூரியன் இருப்பதை பொருத்த வரை அங்கேயே சூரியன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பார்.அந்த வகையில் சூரியன், ஜாதகரை கடுமையான உழைப்பாளியாகவும், வேலையில் அதிக தீவிரம் காட்ட கூடியவராகவும் உண்டாக்குவார். 
பாபக் கிரகமான சனி மற்றும் ராகு தொடர்பினை பெறும்போது வம்பு வழக்கு மற்றும் நோய் சார்ந்த பாதிப்புகளை தருவார்.
பொதுவாக ஆறாம் வீட்டதிபதி ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும்போது வேலையில்  முன்னேற்றத்திற்காக தொடர்ந்து அதிகம் எனக் உழைக்கக்கூடிய சூழ்நிலையும் அதிகமான முன்னேற்றத் தடைகளையும் உண்டாக்கும்.
ஆறாம் வீட்டில் நின்ற சூரியன், குரு சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்களின் தொடர்பினை பெரும் பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வேலையில் தனக்கான அங்கீகாரம்,கெளரவம்
போன்றவற்றை கிடைக்கச் செய்வார்.
சூரியனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை, அரசு வேலை, தந்தை வழித் தொழில் போன்றவை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.#Iniyavan

அடுத்ததாக ஏழாம் இடமான கன்னியில் சூரியன் இருப்பதை பொருத்தவரை அது நட்பு வீடு என்றாலும் பாபகிரகம் ஏழில் இருப்பது நல்லதல்ல என்ற அடிப்படையில் கெடுபலன்கள் இருக்கும்.
தாமதத் திருமணம், முரண்பாடான குணம் கொண்ட கண்டிப்பான வாழ்க்கைத்துனை, திருப்தியில்லாத மண வாழ்க்கை, உதவும் குணமற்ற நண்பர்கள் போன்ற கெடுபலன்கள் இருக்கும்.
இருப்பினும் லக்னாதிபதிக்கு நண்பர் என்ற அடிப்படையில் பெரிய அளவில் கெடுதல் இருக்காது. சூரிய தசா வரவில்லை என்றால் பெரிய பாதிப்பில்லை.
ஏழில் இருக்கக்கூடிய சூரியன் சுபக்கிரக தொடர்பில் இருக்கும் போது முற்றிலுமாகவே கெடுதல் இருக்காது.

எட்டாம் இடமான துலாத்தில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல. சூரியன் நீசமாகும் போது ஒருவருடைய தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத்திறன் தகப்பன் ஆதரவு போன்றவை குறைவதற்கான வாய்ப்பு உண்டு.
ஒளிக் கிரகமான சூரியன் எட்டில் மறைந்து நீசம் பெற்ற நிலையில் இருக்கும்போது சூரியனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு அதிக பாதிப்புகள் இருக்கும்.
வேலை பார்க்கக் கூடிய இடம், மேலதிகாரிகள், அரசு வழியில் வகையில் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் இடையூறுகள், தொல்லைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
பாபக் கிரகமான சனி ராகு தொடர்பினை இங்கே இருக்கக்கூடிய சூரியன் பெறும் பொழுது வம்பு,வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கி ஜாதகரை தண்டனைக்கு உள்ளாக்குவார்.
சூரிய தசா நடைமுறைக்கு வரக்கூடிய பட்சத்தில் மட்டுமே பாதிப்புகள் இருக்கும் என்பதால் சூரிய தசா வராத பொழுது ஜாதகர் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. சுபர்களின் தொடர்பில் சூரியன் இருக்கும் போதும் பாதிப்புகள் பெரியளவில்  இருக்காது.#Iniyavan

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை பாபகிரகங்கள் திரிகோணத்தில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பொதுவாக இது நல்ல அமைப்பு கிடையாது. இங்கே அவருக்கு நட்பு வீடு என்றாலும் ஆறாம் அதிபதியாகி ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் பாக்கியங்களை கெடுக்கக்கூடிய அமைப்பிலே இருப்பார்.

பொதுவாக சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில் மேற்கொண்டு அவர் சனி, ராகு போன்ற பாபர் தொடர்பினை பெரும்பொழுது சூரியதசாவினில் ஜாதகருடைய தந்தையைப் பாதிப்பார்.
இதை கவனிப்பதற்கு முன்பு வீடு கொடுத்த செவ்வாய் நிலையையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
ஒன்பதிலே இருக்கக்கூடிய சூரியன் சுபக்கிரக தொடர்பினை பெரும் பொழுது கண்டிப்பாக அவர் காரகோ பாவ நாஸ்தி அமைப்பை செய்யமாட்டார்.
ஆறாம் வீட்டு அதிபதியாகி சூரியன், ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தந்தையை விரோதமாக நினைக்கக் கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கும் .ஜாதகனை கடவுள் நம்பிக்கை அற்றவராக, ஆன்மீக நாட்டம் குறைவானவராக மாற்றும். 
அதிக அலைச்சல், வெளியூர்களில் வேலை பார்க்கக் கூடிய அமைப்பு போன்றவற்றை உண்டாக்கும்.#Iniyavan

அடுத்ததாக பத்தாமிடமான தனுசில் சூரியன் இருப்பதை பொருத்தவரை அது சுபர் வீடு என்பதாலும், சூரியன் பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவார் என்ற அடிப்படையில் மிக நல்ல பலன்களையே தன்னுடைய தசா காலங்களில் செய்வார். 
வீடு கொடுத்த குருவும் வலுப்பெறும் போது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல தலைமைப் பதவி, நீடித்த நிலையான வருமானம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.

11 ஆம் வீடான மகரத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய ஆறாம் வீட்டிற்கு ஆறில் மறைவார் என்ற அடிப்படையில் ஆறாமிட கெடுபலன்களை செய்ய மாட்டார். பாப கிரகமான சனி ராகு தொடர்பினை பெரும் பொழுது மூத்த சகோதர வகையில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள், பிரிவு, வருமானம் வருவதில் பிரச்சனைகள், தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதில் குறுக்கு புத்தி, வெற்றிக்கு அதிகம் முயற்சிக்க வைப்பது போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.
ஆறாம் வீட்டில் இருக்கக் கூடிய  சூரியன் சுபர்களின் தொடர்பினை பெரும்பொழுது நல்ல பலன்களைச் செய்வார்.#Iniyavan
.
அடுத்ததாக 12ஆம் இடமான கும்பத்தில் சூரியன் இருப்பதை பொருத்தவரை ஒளிக் கிரகங்கள் பன்னிரண்டில் மறைய கூடாது என்ற அடிப்படையில் நல்லதல்ல. தன்னுடைய 6-ஆம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவார் என்ற அடிப்படையில் மேற்கொண்டு பாபர் தொடர்பினை பெறும் போது ஆறாமிட கெடுபலன்களான கடன், நோய், எதிரி, வறுமை,வம்பு, வழக்கு சார்ந்த பிரச்சினைகளையும், சுபர் தொடர்பினை பெறும் போது நல்ல பலன்களையும் செய்வார்.
அடிமை உத்யோகத்தினை சுட்டிக் காட்டக்கூடிய ஆறாம் வீட்டு அதிபதி தொலைதூர இடங்களை சுட்டிக் காட்டக்கூடிய 12ஆம் வீட்டில் இருக்கிறார் என்ற அடிப்படையில் ஜாதகரை வெளியிடங்களில் பணி புரிய வைப்பார்.#Iniyavan

இவை அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். சூரியனுடன் இணைந்துள்ள பார்த்துள்ள கிரகங்களை பொருத்தும் வீடு கொடுத்தவரின் நிலையினைப் பொருத்தும் பெற்றுள்ள சாரம், சாரநாதன் நிற்கின்ற இடத்தினைப் பொறுத்தும் பலன்கள் மாறுபட வாய்ப்புண்டு.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74

மீன லக்னத்திற்கு சுக்கிர தசா எப்படியிருக்கும்?


பொதுவாக வாழ்க்கையில் நல்ல வீடு, மனை, வாகனம், நல்ல அழகான வாழ்க்கைத்துனை போன்ற அமைப்புகளோடு வாழ்பவர்களை பார்த்து அவனுக்கு என்ன சுக்கிரதசை நடக்கிறது என்று சொல்லுவோம்.
மனித வாழ்க்கைக்கு சந்தோஷம், இன்பம் தருகின்ற நிகழ்வுகள் அனைத்தும் இவருடைய காரகத்திற்கு உட்பட்டது என்றால் மிகையல்ல.
இப்படிப்பட்ட சுக்கிரதசை எல்லா லக்னங்களுக்கும் நன்மையைச் செய்யுமா என்று கேட்டால் கிடையாது.
தனுசு மற்றும் மீன லக்னத்திற்கு சுக்கிரன் அவயோகியாக வரக்கூடிய ஒரு கிரகம். அவயோகிய வரக்கூடிய சுக்கிரன் துர்ஸ்தானங்களுடன் தொடர்புபெற்று தசா புக்தி நடத்தும் போது பாதிப்புகளை தந்து முன்னேற்றத் தடைகளைத் தருவார். #Iniyavan

அவயோகியாக இருக்கக்கூடிய சுக்கிரன் குறிப்பிட்ட சில நிலைகளில் இருப்பதை தவிர மற்ற இடங்களில் இருக்கும் பொழுது பெரிய அளவில் முன்னேற்றத்தையும் செய்யமாட்டார்.

அந்தவகையில் குருவின் இலக்கனமான மீனத்திற்கு சுக்கிரன் எந்தெந்த இடங்களில் இருக்கும்போது தசாக்காலங்களில்  நன்மையே செய்வார். எந்தெந்த இடங்களில் இருக்கும் போது  தசா காலங்களில் ஜாதகர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பதை இப்பதிவின் வாயிலாக பார்ப்போம். Iniyavan Karthikeyan



மீன லக்னத்திற்கு சுக்கிரன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். அவர் எட்டாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து உச்சம் பெறுவதால் எட்டாம் வீட்டின் கெடுபலன்களை ஒரளவு குறைத்தே செய்வார்.
இருப்பினும் இதே சுக்கிரன், சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் இணைவினை இவ்விடத்தில் பெறும்பொழுது கடுமையான பாதிப்புகளையும் செய்வார் என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும். #Iniyavan 

பாப கிரங்களின் தொடர்பின்றி தனித்த நிலையில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் பொழுது ஜாதகர் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கக் கூடியவராக இருப்பார். காதலுக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடிய அளவிற்கு ஜாதகர் நல்லவராக இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை மீது அதிக பாசம் உடையவராகவும், வரக்கூடிய வாழ்க்கைத் துணைக்கு ஜாதகர் உண்மையாக செயல்படவேண்டும் என்ற எண்ணம் உடையவராகவும் இருப்பார்.

சுக்கிரனுடைய காரகத்துவங்களான வீடு, மனை, வாகன யோகம்,  தாம்பத்யம் போன்றவற்றினை தன்னுடைய தசா காலங்களில் தருவார். இருப்பினும் சுக்கிர திசை ஜாதகருக்கு பெரிய அளவில் யோகம் செய்யாது. காரணம் அவர் எட்டாம் வீட்டுக்குரியவராகவும் இலக்னாதிபதிக்கு முற்றிலும் பகை தன்மையுடைய கிரகமாக இருப்பதாலும் ஆகும்.
8-க்குடையவர் உச்சம் பெறுகிறார் என்ற வகையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தையும் தருவார். #Iniyavan

பொதுவாக இங்கே குருவின் சாரத்தில் இருப்பது நல்ல அமைப்பாகும். ரேவதி நான்காம் பாதத்தில் இருக்கும் போது உச்ச வர்கோத்தமம் பெறுவார்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில் பெரிய நன்மைகளை செய்ய மாட்டார்.

சனி மற்றும் புதன் சாரத்தில் இருக்கும் பொழுது சாரநாதன் அமர்ந்து நிலையை பொருத்து பலன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பார் என்ற வகையில் எட்டாம் வீட்டின்  பலன்களையே அதிகம் செய்வார்.
ஜாதகரை பூர்வீக இடத்தில் இருந்து தூர இடங்களுக்கு நகர்த்தி வாழ வைப்பார்.
இருப்பினும் சுபகிரகம் இரண்டில் இருக்கின்றது என்ற வகையில் ஓரளவு ஜாதகருக்கு நல்ல குடும்பத்தையும் மிதமானபணவரவையும் தர கடமைப்பட்டவர் ஆவார். #Iniyavan

அவ்வப்போது ஜாதகருடைய பேச்சால் ஜாதகருக்கு முன்னேற்ற தடைகளையும் வீண் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளையும்  உண்டாக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபகிரகம் எட்டினைப் பார்க்கிறது என்ற வகையில் ஆயுள் பலத்தை தந்தாலும் பெரியளவில் ஜாதகரை தன்னுடைய தசாவில் முன்னேற விடமாட்டார்.

கேதுவின் சாரத்தில் இருக்கும்பொழுது கேது நின்ற வீட்டிற்கு ஏற்ப, நம் பலனை கவனித்துக்கொள்ள வேண்டும். ஆறாம் அதிபதி சூரியன் சாரம் பெறுவது  அல்லது தன்னுடைய சுய சாரமான பரணி சாரத்தில் இருப்பதோ பெரிய அளவில் ஜாதகருக்கு நன்மை செய்யாது.

மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதை பொருத்தவரை தன்னுடைய எட்டாம் வீட்டிற்கு எட்டில் மறைவதால் மூன்றாமிடம் பலன்களையே செய்வார். எட்டாமிட பலன்களை செய்ய மாட்டார்.
ஜாதகருக்கு தன்னுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாட்டை தருவார்.
மூன்றாமிடம் வெற்றி, கீர்த்தி, புகழ் போன்ற விஷயங்களை சுட்டிக் காட்டுவதால் அவருடைய தசா காலங்களில் ஜாதகரை ஏதேனும் ஒரு வகையில் புகழ் பெறச் செய்வார். #Iniyavan

நான்காம் வீட்டில் இருப்பதைப் பொறுத்தவரை  நட்பு வீட்டில் திக்பலம் பெற்ற அமைப்பில் இருப்பார்.
அந்த வகையில் 4-ஆம் வீட்டில் இருக்கும்போது நான்காமிட நல்ல பலன்களைச் செய்வார். தாயார் வகையில் மேன்மையான பலன்களை கொடுக்கக் கூடியவராக இருப்பார்.

நல்ல தாய் மற்றும் நான்காமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நிலம், பூமி, வீடு, மனை போன்றவற்றை லக்னாதிபதியின் வலுவிற்கு ஏற்ப தரக்கூடியவராக இருப்பார்.

நான்கில் திக்பலம் பெற்ற நிலையில் வலுவுடன் இருக்கும் பொழுது அவர் பத்தாம் வீட்டை பார்ப்பார் என்ற வகையில் சுக்கிரனுடைய காரகத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம் மூலமாகவும் ஜாதகருக்கு வருமானத்தை தர வாய்ப்புண்டு.
அட்டமாதிபதி திக்பலம் பெறுகிறார் என்ற அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தை தருவார்.

ஐந்தில் சுக்கிரன் இருப்பதை பொறுத்தவரை அது அவருக்கு பகை வீடு இருந்தாலும் இயற்கைச் சுபக்கிரகங்கள் 5ல் இருக்கும்பொழுது நன்மையைச் செய்யும் என்ற வகையில் நல்ல பலன்களே நடக்கும்.
அட்டமாதிபதி ஐந்தில் இருக்கின்றார் என்ற வகையில் ஆண் வாரிசை தராமல் பெண் வாரிசுகளைத் தருவார்.
புத்திரகாரகன் குரு வலுப்பெற்ற நிலையில் இருக்கும் போது ஆண் வாரிசை எதிர்பார்க்கலாம். #Iniyavan

வீடு கொடுத்த சந்திரன் வலுப்பெற்ற நிலையில் ஒளி தன்மையுடன் இருக்கும் பொழுது பூர்வபுண்ணியம், அதிர்ஷ்டம், நல்ல குழந்தைகள் போன்ற வகையில் நல்லபலனைச் செய்வார்.

கடன் நோய் எதிரி வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் சுட்டிக் காட்டக்கூடிய ஆறாமிடத்தில் 8-க்குடையவர் இருப்பது நல்லதல்ல. இங்கே சுக்கிரன் பகை தன்மையுடன் இருப்பார்.

ஆறாம் வீட்டில் நின்று சுபகிரகங்கள் தொடர்பை பெறாத நிலையில் கடன் சார்ந்த பிரச்சினைகளையும் நோய் சார்ந்த பிரச்சினைகளும் ஜாதகருக்கு தரக்கூடிய அமைப்பிலேயே இருப்பார். குரு பகவானுடைய தொடர்பு அல்லது புதனுடன் இணைந்து இருக்கும் போது கடன்களால் பிழைக்கக் கூடிய சூழ்நிலையை ஜாதகருக்கு உண்டாக்குவார்.
சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் இணைவினை பெரும் பொழுது வழக்கு வம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்க வைத்து அதன் மூலம் தண்டனையை தரக்கூடிய அமைப்பையும் உண்டாக்குவார். #Iniyavan

அடுத்ததாக ஏழாம் இடத்தை பொறுத்தவரை ஏழாமிடத்தில் இங்கே சுக்கிரன் நீசம் பெற்ற நிலையில் இருப்பார்.
தனித்த நிலையில் பாபக் கிரகங்களின் இணைவினை பெறாத நிலையில் நீசம் பெற்று இருக்கும் பொழுது பெரிய பாதிப்புகளை செய்யமாட்டார்.
புதனுடன் இணைந்து நீசபங்கம் பெற்று இருப்பது அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது போன்றவை சிறப்பான அமைப்பு.
ஏழாமிடம் குறிக்கக்கூடிய விஷயங்களான நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல நண்பர்கள், கூட்டு தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு நன்மைகளைத் தருவார்.

சனி, ராகு, அமாவாசை சந்திரன், செவ்வாய் போன்ற பாவிகளின்  இணைவினை நீசம் பெற்ற நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன் பெறக்கூடாது. பெறும்பொழுது அதற்கு ஏற்ப தாம்பத்யம்,மண வாழ்க்கையில் சில குறைபாடுகளையும் தரக்கூடிய நிலையில் இருப்பார்.

8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது வரை அட்டமாதிபதி ஆட்சி பெறுகிறார் என்ற வகையில் ஜாதகருக்கு நல்ல ஆயுள் பலத்தை தருவார். ஆனால் எட்டாம் இடத்தில் இருப்பதால் தூர இடங்களுக்கு நகர்த்தி ஜாதகரை பிழைக்க வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களின் வாயிலாக ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும்.
இருப்பினும் ஆதிபத்திய சிறப்பில்லாத கிரகம் என்பதால் பெரிய அளவில் முன்னேற்றங்களை தரமாட்டார்.
அவ்வப்போது வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகளையும் உண்டாக்குவார். வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானத்தினை தருவார்.
பாபத்துவம் அடையாத நிலையில் எட்டாம் இடத்தில் இருக்கும்போது சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்கள் மூலம் நல்ல பலன்கள் நடக்கும். சனி ராகு போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெரும்பொழுது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகரை அவமானப்பட வைப்பார். #Iniyavan

ஒன்பதாம் இடத்தில் பொறுத்தவரை விருச்சிகம் அவருக்கு பகை வீடு என்றாலும் இயற்கை சுபர் ஒன்பதில் இருக்கலாம் என்ற அடிப்படையில் 9 ஆம் இடத்தில் நல்ல பலன்களைச் செய்வார்.

வீடு கொடுத்த செவ்வாய் வலுப்பெற்று நிலையில் இருக்கும் பொழுது நல்ல தந்தை நல்ல பூர்வீகம் முன்னோர் வகையில்
சொத்துகள் கிடைக்கும் அமைப்பு  போன்ற பலன்களையும் உண்டாக்குவார்.

அடுத்ததாக பத்தாம் வீட்டில் சுக்கிரன் விருப்பத்தைப் பொறுத்த வரை தன்னுடைய மூன்றாம் வீட்டிற்கு எட்டில் மறைவதால் மூன்றாமிடம் குறிக்கக்கூடிய விஷயமான தைரியம்,வீர்யம் இளைய சகோதர ஆதரவு போன்ற வகையில் நல்ல பலன்களைச் செய்ய மாட்டார்.
அதே நேரத்தில் அட்டமாதிபதி சுபராகி பத்தாம் வீட்டில் இருப்பதால் எளிமையான வழிகளில் பணம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு, மற்றவருடைய அறியாமையை பயன்படுத்தி பொருள் ஈட்டக்கூடிய தன்மைகளை உண்டாக்குவார். ஆதிபத்திய ரீதியாக சிறப்பு இல்லாத நிலையில் இருப்பதால் பெரிய யோகங்களையும் செய்துவிட மாட்டார்.
அட்டமாதிபதியான சுக்கிரன்,தொழில் ஸ்தானத்தில் இருப்பதைப் பொருத்தளவில் சனி ராகு போன்ற பாவ கிரக தொடர்பினை இங்கே பெரும்பொழுது, தசாக்காலங்களில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகர் பெரிய அளவில் முதலீடுகளை செய்யக்கூடாது.

11 ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பது சிறப்பான அமைப்பு. இங்கே அவர் நட்பு நிலையில் இருப்பார். அவயோக கிரகங்கள்  3 6 10 11 ஆம் வீடுகளில் நட்பு நிலையில் இருக்கும்போது நல்ல பலன்களைச் செய்யுமென்று அடிப்படையில் நல்ல பலன்களைத் தருவார்.
தன்னுடைய மூன்றாம் வீட்டிற்க்கு திரிகோண அமைப்பில் இருப்பதாலும் எட்டாம் வீட்டிற்கு கேந்திர அமைப்பில்  இருப்பதாலும் ஆதிபத்திய மற்றும் காரகத்துவ பலன்களை நல்ல முறையிலேயே செய்வார்.
இந்த இடத்தில் புதனுடன் இணைவது சிறப்பான பலனைத் தரும். சனி செவ்வாய் ராகு போன்ற பாவர்களின் இணைவினை பெறக்கூடாது.
ஆறாம் அதிபதி சூரியனுடைய சாரத்தில் இருக்கும் பொழுது சூரியன் நின்ற நிலையைப் பொருத்து பலன் மாறுபடும். #Iniyavan

பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதை பொறுத்தவரை அதை மறைவாக எடுத்து.க் கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் காலபுருஷ லக்னத்திற்கு 12 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
12-ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கும் பொழுது ஜாதகர் பெருந்தன்மை உணர்வுடன் பொருளாதார ரீதியாக மற்றவர்களுக்கு உதவும் குணம் கொடை வள்ளலாக இருக்க வைப்பார்.
அதற்கேற்ற வகையில் ஜாதகருக்கு நல்ல பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்குவார்.
தன்னுடைய தசா காலங்களில் ஜாதகரை பூர்வீக இடத்தில் இருந்து தொலை தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிய வைப்பார்.
இவை அனைத்தும் பொதுவான பலன்களே..
இணைந்துள்ள மற்றும் பார்த்துள்ள கிரகங்களை பொருத்தும், பெற்ற சாரத்தின் அடிப்படையில் சாரநாதன் நிற்கின்ற வீட்டின் நிலையைப் பொறுத்து பலன்கள் மாறுபாடும்.

நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74