நவகிரகங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான். ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷ அமைப்புகள் இருந்தாலும் அந்த தோஷ அமைப்பிற்கு குருவின் பார்வை கிடைக்கும் பட்சத்தில் தோஷத்தினால் மிகப் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்பதே உண்மை. ஒரு குறிப்பிட்ட தோஷ அமைப்பிற்கு குருவின் பார்வை இருந்தும் தோஷத்தின் தாக்கம் குறையவில்லை என்றால் குரு அங்கே வலு குறைந்த நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ராகுவுடன் மிக நெருங்கி நிலையிலும், சூரியனுடன் இரண்டு டிகிரிக்குள் அஸ்தமனம் அடைந்துள்ள நிலையிலும் குருவின் பார்வைக்கான பலன் மிக குறைவே ஆகும். இது போன்ற தருணங்களில் குருவின் பார்வை தோஷம் நீக்குவதில்லை.
குருபகவானின் பார்வையைப் பற்றி பார்க்கையில் அவரின் பொதுவான பார்வையான ஏழாம் பார்வையோடு சிறப்பு பார்வையாக ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையையும் பெறுகிறார். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் பன்னிரு ராசிகளில் அவர் எங்கு இருந்தாலும் அவரின் 3 பார்வைகளில் ஒரு பார்வை சர ராசிக்கும் மற்றொரு பார்வை ஸ்திர ராசிக்கும் மற்றொன்று உபய இராசிக்கும் இருக்கும்.
ஒரே நேரத்தில் ராசிகளின் மூன்று பிரிவுகளான சர, ஸ்திர,உபய ராசிகளைப் பார்த்து புனிதப்படுத்துபவர் குருபகவானே ஆவார். சிறப்பு பார்வை பெற்றுள்ள மற்ற கிரகங்களான சனி மற்றும் செவ்வாய்க்கு இந்த அமைப்பு கிடையாது.
பாரபட்சமின்றி ராசிகளின் மூன்று வகைப் பிரிவுகளையும் பார்த்து புனிதப்படுத்தபவர் குருவே ஆவார்.
ஒரு ஜாதகத்தில் குரு எத்தனை கிரகங்களுடன் தொடா்பு பெற்றுள்ளார் என்பதை பொருத்து அந்த ஜாதகத்தின் சிறப்பு அமையும்.
எந்த ஒரு நல்ல ஜாதகத்திலும் குருவானவர் போதுமானவரை நிறைய கிரகங்ளுடன் தொடர்பில் இருப்பார் என்பது உண்மை. பாபக்கிரகங்கள் பாதிப்பினை தரக்கூடிய வகையில் இருந்தாலும் அந்த கிரகங்களுக்கு குருவின் பார்வை இருக்கும் பட்சத்தில் அவர்களின் கைகள் கட்டப்படும் என்பதே உண்மை. அதாவது அவர்களை கெடுதல்களைச் செய்ய இயலாமல் தடுத்து நிறுத்துபவர் குரு ஆவார்.
ஒருவரின் ஜாதகத்தில் குருவானவர் எந்த அளவுக்கு வலுப்பெற்று உள்ளாரோ அந்த அளவிற்கு அவர் விட்டுக்கொடுக்கும் தன்மை உடையவராக இருப்பார். ஒரு மனிதனை சுய ஒழுக்கம், கட்டுப்பாடு நிறைந்தவராக, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் நிறைந்தவராக,நெறிமுறைகளின் படி வாழ வைப்பவராக இருப்பவர் லக்னத்தோடு பெற்ற குரு ஆவார்.
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138
ஜோதிடம், விரதங்கள் குறித்த தகவல்களுக்கு இணைந்திருங்கள்....
https://chat.whatsapp.com/IwylcXBPt0QJU5BFqKyHKB