சுக்கிரன் மனித வாழ்வின் சந்தோஷங்கள் அத்தனையையும் தன்னகத்தே கொண்ட கிரகம், ஆடம்பர விஷயங்கள் அனைத்திற்கும் சுக்கிரனே காரகத்துவம் வகிக்கிறார். #Iniyavan எதிர்பாலினத்தவரிடமிருந்து கிடைக்கும் ஆதரவு, அரவணைப்பு,காமம் என யாவற்றிற்கும் காரகத்துவம் பெற்ற கிரகம் சுக்கிரன்.
ஆடை அணிகலன்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், மனதிற்கு பிடித்த காதலி, காதலன் வாழ்க்கை துணை என யாவற்றிற்கும் காரகவத்துவம் பெற்ற கிரகம் சுக்கிரன்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு சந்தோஷங்களை அனுபவிக்கிறான்,எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்பது அவனுடைய ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்தது என்றால் மிகையல்ல. #Iniyavan
அந்த வகையில் சுக்கிரன் பிற கிரகங்களுடன் இணையும் போது ஏற்படக்கூடிய பொதுவான பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம்.
சுக்கிரன் சூரியன் இணைவு- சந்தோசம், மகிழ்ச்சி இவற்றுக்குக் காரணமான நீர்த் தன்மை கொண்ட கிரகமான சுக்கிரன் முற்றிலும் அக்னித்தத்துவத்தில் உள்ள சூரியனுடன் இணைவது என்பது அவ்வளவு சிறப்பல்ல.
சுக்கிரனுடன் சூரியன் மிக நெருங்கி இருக்கும் நிலைகளில் சூரிய தசா நன்மையை தந்தாலும் ஆண்களுக்கு சுக்கிலம், பெண்களுக்கு சுரோணிதம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பினைத் தருகின்றனர்.
சூரியன் சுக்கிரன் இணைவு பெற்றவர்களுக்கு கண் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இவர்களுக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணை, சூரியன் முதன்மை காரகத்துவமான ஆதிக்க மனோபாவத்தை துணையிடம் வெளிப்படுத்துவார் இதனால் மண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
சூரியனை விட்டு டிகிரி அடிப்படையில் ஓரளவு விலகி இருக்கும் பொழுது பெரிய அளவில் பாதிப்பில்லை.
சுக்கிரன் சந்திரன் இணைவு- அன்பு, பரிவு,பாசம் தியாகம் ,எதிர்பார்ப்பற்ற நல்லுறவு ஆகியவற்றிற்குக் காரகத்துவம் பெற்ற தாய்மைத் தன்மை உடைய கிரகமான சந்திரன், சுக்கிரனுடன் இணையும் பொழுது எளிதில் காதல் வயப்படுவராக, அன்பிற்கு ஏங்கக்கூடியவராக இருக்க வாய்ப்புண்டு.
இந்த இணைவு நல்ல மனோபாவத்தை ஜாதகரிடத்தில் ஏற்படுத்தும்.
சாதகர் நல்ல புறத் தோற்றத்தை உடையவராக,
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் உடையவராக, நீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் புரிபவர்களாக (கால்நடை வளர்ப்பு, விவசாயம்) இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த இணைவு ஜாதகருடைய தாயாருக்கும், வாழ்க்கை துணைக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும்.கலை சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு தரும்.
சுக்கிரன் செவ்வாய் இணைவு:- காதல், காமம் இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகமான சுக்கிரன்,வீரியம்,துணிவு, உடல் பலம், பராக்கிரமம் வைராக்கியம் இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயுடன் இணையும் போது சுக்கிரனின் காரகத்துவங்களில் ஜாதகருக்கு அதிக ஈடுபாட்டினைத் தரும். நல்ல உடல் பலத்தைத் தரும்.
இளைய சகோதரம் எதிர் பாலின ரீதியாக நல்ல ஆதரவான பலன்களைத் தரும்.
வாழ்க்கை துணையைப் பொருத்தவரை செவ்வாயுடன் சுக்கிரன் இணைவதால் வரக்கூடிய வாழ்க்கைத் துணை கடும் வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி ஜாதகரை வழிநடத்தக்கூடியவராக இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
சுக்கிரன் புதன் இணைவு:- பொதுவாக இந்த இணைவு மதனகோபால யோகம் என்று அழைக்கப்படுகிறது ஜாதகருக்கு நல்ல வியாபார யுக்தி, புத்திசாலித்தனம், இளமையான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். சுக்கிரன் புதன் இரண்டுமே முற்றிலும் நட்புத்தன்மை கொண்ட சுப கிரகங்கள் என்பதால் இந்த இணைவு எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நல்லபடியாக இருக்கும். அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் திறமையானவராக இருப்பார்.
வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டோடு இந்த இணைவு தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் நன்கு பேசக் கூடியவராக, பேச்சால் காரியங்களை சாதிக்க கூடியவராக, பேச்சால் பிறரை கவர்ந்து இழுப்பவராக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.கவிதைகள், கலை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு, எப்போதும் சிரித்த முகம், போன்ற நற்பலன்கள் இந்த இணைவு தரும். ஆறு மற்றும் பத்தாம் பாவகங்களுடன் தொடர்பு பெறும் போது படித்த படிப்பிற்கேற்ற வேலையை இந்த இணைவு ஏற்படுத்திக் கொடுக்கும். சுக்கிரன், புதன் இணைவு பெற்ற உள்ளவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நன்கு புத்திசாலித்தனம் உடையவராக இருப்பார்.
சுக்கிரன் சனி இணைவு:
அன்பு, மகிழ்ச்சி, காதல், காமம் இவற்றிற்கு காரகரத்துவம் பெற்ற கிரகமான சுக்கிரன், சோம்பல், மந்தத் தன்மை இவற்றிற்கு காரகம் பெற்ற கிரகமான சனியுடன் இணைவது நல்லதல்ல. சுக்கிரனின் காரகத்துவங்கள் ஜாதகருக்கு குறைபாடுகளைத் தரும். அல்லது முறையற்ற ஈடுபாட்டை தரும். மற்றவகையில் வியாபாரம், தொழில் சார்ந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு, உழைப்பினைத் தரும்.
தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல வருமானத்தையும் இந்த இணைவு தரும்.
நல்ல நிதானமான வாழ்க்கை துணை மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடிய வாழ்க்கைத் துணையை இந்த இணைவு ஏற்படுத்திக் கொடுக்கும். ஜாதகருக்கு நல்ல பொருளாதார வளர்ச்சி இந்த இணைவு தரும் என்று நாடிகிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுக்கிரன் குரு இணைவு: பொதுவாக இந்த இணைவு 2,9 11 ஆம் பாவங்களுடன் தொடர்பு கூறும்போது ஜாதகருக்கு நல்ல பொருளாதார வளர்ச்சியை கொடுத்து விடும். வாழ்க்கை துணையைப் பொறுத்தவரை குருவின் காரகத்துவங்களான விட்டுக்கொடுக்கும் தன்மை, பொறுப்புணர்வு, கண்ணியமான வாழ்க்கை துணையை இந்த இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.
ஜாதகர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் உடையவராக, பிறரை கவரக் கூடிய தோற்றமும் செயல்பாடுகளும் உடையவராக இருப்பார். அதனால்எதிர் பாலின ரீதியாக தொந்தரவு, தானாக வந்து பிரச்சனை தரக்கூடிய அமைப்பையும் இந்த இணைவு ஏற்படுத்துகின்றது.
சுக்கிரன் ராகு இணைவு: ஜாதகருக்கு சுகபோகங்களை அனுபவிப்பதில் எவ்வித கட்டுப்பாட்டையோ, வரைமுறையையோ எதிர்பார்க்க இயலாது.
சில தருணங்களில் சுக்கிரன் காரகத்துவம் சார்ந்த விஷயங்களில் ஜாதகரை தன்னையே தொலைப்பதும் உண்டு.
சுக்கிரனுடன் ராகு மிக நெருங்கிய நிலையில் இருக்கும் பொழுது ராகு தசா சுக்கிரனுடைய காரகத்துவங்களை ஜாதகருக்கு அளவற்ற முறையில் தரும்.
ஆனால் சுக்கிர தசா நடப்பில் இருக்கும்போது ஜாதகருக்கு சுக்கிரனின் காரகத்துவங்களைப் பெறுவதில் ஜாதகருக்கு தடைகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் இருக்கக்கூடும்.
வாழ்க்கை துணையை பொறுத்தவரை எதிலும் அதிக எதிர்பார்ப்புகள், எதையும் பிரம்மாண்டமாக செய்யக் கூடியவராக, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்பவராக எதிலும் அவ்வளவாக திருப்தி அடையதவராக இருப்பதற்கு வாய்ப்புண்டு.
சுக்கிரன் கேது இணைவு: - சந்தோசம், மகிழ்ச்சி, காமம் காதல் வெற்றிக்கு காரகம் பெற்ற கிரகமான சுக்கிரன், தனிமை, சலிப்பு, விரக்தி, விருப்பம் அற்ற பற்றற்ற நிலை, எதிலும் மாயையை விலக்கி உண்மையை யதார்த்தத்தை புரியவைக்கும் கிரகமான கேதுவுடன் இணைவது நல்லதல்ல.
சுக்கிரனின் காரகத்துவங்கள் கிடைக்கப் பெறுவதில் ஜாதகருக்கு ஏமாற்றங்கள், தடைகள், ஏக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.
திருமண வாழ்க்கையில் சிக்கல், தாம்பத்தியத்தில் நாட்டம் குறைவு, நெருங்கிய உறவுகளால் வஞ்சிக்கப்படுதல், தன் நெருங்கிய உறவுகளின் துரோகத்தினை உணர்தல்,அதனால் ஏற்படும் அதீத புலம்பல் நிலை, நாளடைவில் எதிலும் பற்றற்ற நிலை, எதிலும் ஈடுபாடற்ற தன்மையை இந்த இணைவு ஏற்படுத்தக்கூடும்.
சுபர் பார்வையில் இருக்கும் பொழுதும், சுபர் வீட்டில் இந்த இணைவு இருக்கும் போதும், சுக்கிரனுக்கு வலுப்பெற்ற இடங்களில் இந்த இணைவு இருக்கும் பொழுதும் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
பாதிப்பினை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுது வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீ ரங்கநாதர் வழிபாடு, அனுதினமும் விநாயகப் பெருமான் வழிபாடு பாதிப்பைப் போக்கும்.
இவை அனைத்தும் பொதுப் பலன்களே ஆகும். பார்த்த கிரகங்களை பொருத்தும், அந்த வீட்டு அதிபதியின் நிலையினைப் பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும். #Iniyavan
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT
https://t.me/Astrologytamiltricks