சந்திரன் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகம். அதை “மனோகரகன்” என்றும், மனதையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவனாகவும் கருதுகிறோம். இந்தக் கிரகம் நமது எண்ணங்கள், உணர்ச்சி நிலைகள், தாய்மையின் தன்மை, நினைவுத்திறன், மனோநிலை, ஸ்ம்ருதி, வளர்ப்பு மற்றும் பராமரிப்பை குறிக்கிறது.
🌙 சந்திரனின் முக்கிய பங்களிப்பு:
சந்திரன் தாயை குறிக்கிறார். தாயின் பராமரிப்பு, அன்பு, பாதுகாப்பு ஆகியவை சந்திரனின் வலிமையைப் பொறுத்தே அமையும். சந்திரன் மனதை அடையாளப்படுத்துகிறார். மனதின் அமைதி, குழப்பம், கவலை, நெகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவை அனைத்தும் சந்திரன் வலிமையைச் சார்ந்தவை.
சந்திரன் நினைவுத்திறனை, ஞாபக சக்தி (memory power) பிரதிபலிக்கிறார்.
உடனடி தீர்மானம் எடுக்கும் திறன், நுட்பமான மனப்பக்குவம், நேர்த்தியான பாவனை—all are ruled by Moon.
🌑 ஜாதகத்தில் அவரது பங்கு:
பூரண சந்திரன் ஜாதகத்தில் இருந்தால் மனவலிமை, கலைத்திறன், புகழ், மக்கள் ஆதரவு போன்றவைகளில் சிறந்த நிலை அடையும். குறைவான ஒளித்திறன் உடைய சந்திரன், பாபியர் தொடர்பு அல்லது மறைவு ஸ்தானங்களில் பலவீனமான நிலையில் இருந்தால் மனதளவில் சோர்வு, மன அழுத்தம், தாயுடன் பிணைப்பு குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
#Iniyavan
🌊 சந்திரனுடன் தொடர்புடைய துறைகள்:
உணர்ச்சி சார்ந்த தொழில்கள்: கவிதை, இலக்கியம், இசை, சமூகவாழ்க்கை, சமூக சேவை, மனநல ஆலோசனை தரும் மனநல மருத்துவர், விளம்பரத்துறை, ஊடகம், தொலைக்காட்சி. உணவு சார்ந்த தொழில்கள், நீர் சார்ந்த தொழில்கள், தாய் மொழியியல் சார்ந்தவை, போதிக்கும் துறைகள்.
💫 சந்திரன் வலுவாக இருப்பதற்கான அமைப்புகள்: சந்திரன் நன்றாக இருந்தால் மனம் தூய்மையானதாக அமையும்.
முழுமையான ஒளித்திறனுடன் இருப்பதும் (பௌர்ணமி), உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, திக்பலம், வர்க்கோத்தமம் பெறுவது, வலுப்பெற்ற சுபரின் தொடர்பில் இருப்பது சிறப்பு. சனி மற்றும் ராகு-கேது சேர்க்கை இல்லாமல் சந்திரன் இருப்பது நல்லது.
சனியின் பார்வையில் இருப்பதும் நல்லது கிடையாது.இது போன்ற நிலைகளில் வலுப்பெற்ற சுபர் தொடர்பு கிடைத்திருப்பது நல்லது.
செவ்வாயின் தொடர்பினை சந்திரன் பெறுவதைப் பொருத்தவரை அது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் ஒரே நேரத்தில் இயற்கை பாவர்களான சனி மற்றும் செவ்வாயின் தொடர்புகளை சந்திரன் பெறாமல் இருப்பதும் அவசியம்.
நீசம் பெற்ற நிலையில் இருக்கும் போது பௌர்ணமி சந்திரனாக இருப்பதும் வலுப்பெற்ற சுபரின் தொடர்பில் இருப்பதும் நல்லதாகும்.#Iniyavan
🎭 சந்திரன் மற்றும் கலைகள்:
கலைஞர்கள், கவிஞர்கள், இசைஞர்கள் போன்றவர்களுக்கு படைப்பாற்றல் திறன் மற்றும் கற்பனை வளம் அவசியம்.
அத்தகைய கற்பனை வளத்திற்கு காரக கிரகமாகிய சந்திரன் இவருடைய ஜாதகத்தில் பெரும்பாலும் நல்ல நிலையில் இருப்பார்.
திரிகோண பாவகங்களில் பாபர் தொடர்பின்றி இருக்கக்கூடிய சந்திரன் ஜாதகருக்கு நல்ல மனநிலையைத் தருவார்.நல்ல சந்திரன் ஒருவரை மனதளவில் சிறந்தவனாக்கி, மற்ற கிரகங்களின் பலனையும் முழுமையாக்கும்.
மனம் வலுவாக இருந்தாலே வாழ்க்கை வெற்றியடையும், அதற்குப் பின் இருக்கின்ற அதிபதி சந்திரனே.
🌗 சந்திரன் – ஒரு “மல்டிபிள்” முகம் கொண்டவன்: பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் பக்கவாட்டிலான ஒரே முகமே தென்படுகிறது.
மற்ற பக்கம் "Dark Side of the Moon" என அழைக்கப்படுகிறது.
இது ஒரு ஆன்மீகத்தன்மை கொண்ட உருவகம்: “நாம் மற்றவர்களின் வெளிப்புறத்தைப் பார்க்கிறோம், அவர்களின் மனதின் இருண்ட பக்கம் எப்போதும் மறைந்தே காணப்படும்.”
ஜாதகத்தில் சந்திரனின் வலுவையும் மனதிற்கு காரண பாவகமான ஐந்தாம் பாவகத்தையும் நன்கு ஆராயும் பொழுதே ஒருவர் மனரீதியாக எப்படிப்பட்டவர் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.#Iniyavan
⚖️ சந்திரன் வலுத்தவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்வதற்கும் சந்திரன் வலுவில்லாதவர் ஒரு பிரச்சனையை எதிர்கொள்வதற்கும் பல வித்தியாசம் இருக்கிறது:
முதல் எதிர்வினை:
வலிமை வாய்ந்தவர் - மன அமைதியுடன் “இது தற்காலிகம்” என்று நம்பிக்கை உடனே உருவாகும். அமைதியாக செயல்படுவார்.
பலஹீனமானவர் - பதட்டம், பயம், எதிர்காலம் பற்றிய சஞ்சலம் ஏற்படும். நம்பிக்கை இழக்கப்படும்.
உணர்வின்படி நடத்தல்:
வலிமை உள்ளவர் - உணர்வுகளை கட்டுப்படுத்தி, சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவார்.
பலஹீனமானவர் - உணர்ச்சியின் உச்சத்தில் சென்று தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு.
தீர்மானம் எடுக்கும் திறன்:
வலுவான சந்திரன் - தெளிவான சிந்தனையுடன் தீர்வு நோக்கி முன்னேறுவார்.
பலஹீன சந்திரன் - குழப்பம், மனதுடைவு, தீர்மானமெடுக்க முடியாத நிலை.
சமூக நிலைமை மற்றும் வெளிப்படையான நடத்தை:
வலுவான சந்திரன் - தன்னை சமாளித்து நம்பிக்கையுடன் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வார்..
பலஹீன சந்திரன் - தனிமைப்படுத்திக் கொள்வார், இவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை அதிகமாக காணப்படும்
முன்னோக்குப் பார்வை:
வலுவான சந்திரன் - எதிர்காலத்தை நோக்கி புதிய வழிகள் தேடி செயல்படுவார்.
பலஹீன சந்திரன் - கடந்ததை மீண்டும் மீண்டும் நினைத்து மனக்கசப்பில் உறைந்திருப்பது.
மனநிலை:
வலுவான சந்திரன் - மன உற்சாகம், இவர்கள் இழப்பின் போது நம்பிக்கை மீண்டு வருவது சுலபம்.
பலஹீன சந்திரன் - மன அழுத்தம், தூக்கக் குறைவு, உள் குழப்பம் ஏற்படும். இவப்பினை நினைத்து வருத்தப்பட்டு கொண்டே இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலையில் இருப்பது.
🕉️ தசாபுத்திகள் சரியில்லாத பொழுதும் கோச்சார நிலைகள் பாதிப்பை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுதும் சந்திரன் நல்ல நிலையில் இருக்கக் கூடியவர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். ஏனெனில் இவர்கள் தங்களது மனநிலையை தெளிவாக வைத்துக்கொள்வதன் வாயிலாக பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்து கடந்து விடுவார்கள்.
அல்லது பிரச்சனைகளின் தீவிரத்தை கடப்பதற்கான உதவிகள் இயல்பாகவே கிடைத்துவிடும்...#Iniyavan
சந்திரனை பலப்படுத்தவதற்கான ஆகச்சிறந்த பரிகாரம் நம்முடைய மனநிலையை போதுமானவரை நேர்மறை எண்ணங்களுடன் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய அளவிற்கான சுயநல எண்ணங்கள் இன்றி மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதுதான், வேறொன்றுமில்லை.
“பதட்டமும் மனச்சோர்வும் இல்லாத மனநிலை தான் சந்திரனை சரியாக செயல்படுத்த உதவும்."
எண்ணங்களை சரி செய்து கொண்டால் எல்லாமே சரியாகிவிடும்...
🙏 நன்றிகள்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
📞 Cell: 9659653138
📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks