சிலருடைய ஜாதகத்தில் நிழற்கிரகமான ராகுவுடன் எல்லா கிரகங்களும் ஏதாவது ஒரு தொடர்பில் இருக்கும். அதாவது ராகுவுடன் இணைந்து இருக்கும் அல்லது ராகுவின் நட்சத்திரங்களில் பெரும்பாலான கிரகங்கள் இருக்கும் அல்லது ராகுவிற்கு கேந்திரங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும். அப்படி இருக்கும் நிலையையே ராகுவுடன் தொடர்பு பெற்ற கிரகங்கள் என்று கருதுகிறோம்.
பொதுவாகவே ராகுவானவர் தான் நின்ற வீட்டின் அதிபதியைப் போலவும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களை போலவும், தன்னைப் பார்த்த கிரகங்களின் பலனையும், தன்னுடைய சார நாதனின் பலனையும், தன்னுடைய சொந்த நட்சத்திர சாரங்களில் இருக்கின்ற கிரகங்களின் பலனையும் எடுத்துச் செய்வார்.
ராகுவின் நட்சத்திரங்களில் பெரும்பாலான கிரகங்கள் இருந்து அந்த கிரகங்களின் தசா நடக்கும் போது பலன் எப்படி இருக்கும்?
கண்டிப்பாக அங்கே ராகு சுபர்களின் பார்வயால் புனிதத்துவம் அடைந்திருக்க வேண்டும்.
இராகுவிற்கு ஏற்ற இடங்களான மேஷம், ரிஷபம், கடகம், கன்னியில் இராகு தனித்து இருக்க வேண்டும்.
அந்த வீட்டு அதிபதிகளும் பலம் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக ராகுவானவர் சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்களின் தொடர்பினை பெறாதிருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுவின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்த, ராகுவுடன் தொடர்பு கிரகங்களின் தசா புத்திகளும் நன்றாகவே இருக்கும்.
ராகுவின் திசை எப்பொழுது ஒருவருக்கு அதிக நன்மையைத் தரும்?
ராகுவிற்கு ஏற்ற இடங்களான மேஷம் ரிஷபம், கடகம்,கன்னி,மகரம் போன்றவற்றில் ராகு இருந்து
அந்த வீட்டு அதிபதியும் உச்சம் பெற்று, மேற்கண்ட ராகுவிற்கு குரு, சுக்கிரன், தனித்த நிலையில் உள்ள புதன்,வளர்பிறைச் சந்திரன் போன்றவர்களின் தொடர்பில் இருக்கும் பொழுது ராகுவின் தசா அதிக நன்மைகளை வழங்கும்.
ஜாதகர் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் பிரம்மாண்டமான பலனை ராகுவானவர் ஏற்படுத்திக் கொடுப்பார்.
ராகு திசை எப்போதும் அதிக கடுமையான பலன்களைத் தரும்?
செவ்வாய் மற்றும் சனியின் பார்வை, இணைவு இவற்றைப் பெற்று, எந்த ஒரு சுபரின் தொடர்பினையும் பெறாத ராகுவின் தசா அதிக கெடு பலன்களைச் செய்யும்.
அதிலும் மேற்கண்ட அமைப்பு சர ராசிகளில் இல்லாமல், ஸ்திர ராசிகளான விருச்சிகம், கும்பத்தில் இருந்து சனி, செவ்வாயின் பார்வை, தொடர்பை பெற்று தசா புக்தி நடத்தும்போது ராகு ஜாதகரை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாக்குவார்.
இந்த அமைப்புகளில் இருந்து ராகு தசா நடக்கும் போது அதற்குரிய பரிகாரம் என்னவென்றால் ஞாயிறு தோறும் துர்க்கை அன்னையின் வழிபாடு,
நவக்கிரகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள காலபைரவர் வழிபாடு போன்றவை வளம் மற்றும் பலம் தருவன என்றால் மிகையில்லை.
நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
CELL 9659653138
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks