சந்திர கேந்திரத்தில் நின்ற ஒரு நீச கிரகம், நீச்ச பங்கம் பெறுவதில் கவனிக்க வேண்டிய விஷயம்:-
பொதுவாகவே நீசம் பெற்ற கிரகத்தைப் பொறுத்தவரை அந்த கிரகத்தின் காரகத்துவம் உறவுகள் போன்ற விஷயங்களில் ஜாதகருக்கு எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்கள் அதிகம் இருக்கும்.
ஆனால் அவற்றைப் பெறுவதில் தடை, தாமதம் இருக்கும். #Iniyavan
ஒரு கிரகம் நீச்ச பங்கத்தை அடைவதற்கு என்று கிட்டத்தட்ட பத்து விதிகள் உள்ளன. இந்த பத்து விதிகளில் எத்தனை விதிகளில் ஒரு கிரகம் நீச்ச பங்கத்தை அடைந்து இருக்கின்றதோ அந்த அளவிற்கு அந்த கிரகத்தின் காரகத்துவம் ஜாதகருக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.
நீச்சம் பெற்ற கிரகம் அல்லது நீசம் பெற்ற கிரகத்தின் ராசி அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும்போது ஒரு கிரகம் நீசம் அடையும் என்பது முக்கிய விதியாகும்.
சில நிலைகளில் சந்திரனுக்கு கேந்திரத்தில் நீச கிரகம் இருந்து நீச்ச பங்கம் பெற்ற போதும் அந்த கிரக காரகத்துவங்களில் பல ஜாதகருக்கு பிரச்சனையாகவே இருக்கும். #Iniyavan
அதற்கான காரணம் என்னவெனில் சந்திரன் அந்த ஜாதகத்தில் முழு ஒளி அளவுடன் இருக்க மாட்டார்.
இங்கே சந்திரனின் ஒளி திறனை நாம் திதி அடிப்படையில் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்பிறை தசமியில் இருந்து தேய்பிறை பஞ்சமி திதி வரை உள்ள சந்திரன் நல்ல பலனை செய்யக்கூடியவர் ஆவார். இப்படிப்பட்ட நிலையில் சந்திரன் இருந்து சந்திரனுக்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் நீசம் பெறும் போது அந்த கிரகத்தின் காரகத்துவம் நல்லபடியாகவே இருக்கும்.
சுய ஜாதகத்தில் சந்திரன் தேய்பிறை நெருங்கி இருக்கும் போதோ அல்லது அமாவாசை சந்திரனாக இருக்கும்போதோ சனியுடன் இணைந்து இருக்கக்கூடிய போதோ சந்திர கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் நீசபங்கம் பெற்று விட்டது என்று பலன் எடுப்பது தவறாகும்.
இப்படிப்பட்ட நிலைகளில் நாம் கணிப்பதற்கு மாறான ஒரு விஷயம் நடக்க வாய்ப்புகள் அதிகம்.. #Iniyavan
அந்த வகையில் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஒரு நீச கிரகம் இருக்கும் போது சந்திரன் பூரண ஒளித்திறனுடன் இருக்கிறாரா? என்பதை பார்த்தே அந்த கிரகம் நீச பங்கத்தினை ஒரளவு பெற்றிருக்கிறது அல்லது மிகவும் குறைவாக பெற்றுள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நன்றிகள்...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N