உயிராபத்தினை தரும் தசாபுத்திகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிராபத்தினை தரும் தசாபுத்திகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 டிசம்பர், 2021

உயிராபத்தினை உணர்த்தும் தசாபுத்திகள்_எச்சரிக்கையான காலகட்டங்கள்....

உயிர் காரகத்துவங்களை குறிக்கும் இடங்களான 3,4, 5, 7, 9 ,11 ஆம்அதிபதிகள் அந்த வீட்டிற்கு மறைவு பெற்று, மேற்கண்ட உயிர் காரகத்துவ இடங்களை சனி செவ்வாய் சேர்ந்து பார்க்கும்போது குறிப்பிட்ட தசா புத்திகளில், மேற்கண்ட உயிர் காரகத்துவ உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட   வாய்ப்பு...

சமீபத்தில் பார்த்த ஜாதகத்தில் தனுசு லக்னம். ஏழாம் வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைவு.. அதாவது லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார்..

லக்கினத்தில் சூரியனுடன் இணைந்து இருக்கக்கூடிய சனி தன்னுடைய ஏழாம் பார்வையால் லக்னத்திற்கு ஏழாம் வீட்டைப் பார்க்கின்றார். 12ஆம் இடமான விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கக்கூடிய செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ஏழாம் வீட்டைப் பார்க்கின்றார்.

செவ்வாய் திசை சுக்கிர புத்தியில் கணவர் இறப்பு..
பொதுவான களத்திரகாரகனான சுக்கிரன் ,ஏழாம் வீட்டு அதிபதி புதனுடன் இணைந்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது...
மேலும் டிகிரி அடிப்படையில் சனியுடன் களத்திக்காரகன் சுக்கிரன்  நெருங்கிய நிலையில் இணைவு..
சுய ஜாதகத்தில் உயிர் காரகத்துவ  அதிபதிகள் பலவீனமான நிலையில் இருந்து, அவ்விடங்களுக்கு சனி, செவ்வாய், ராகு தொடர்பு இருப்பின் சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் ஆத்மார்த்தமான இறைபக்தி, இறைவனே கதி என சரணாகதி அடைதல் இவற்றுடன் கூடுதல் கவனமாக நடந்து கொள்வது நல்லதாகும்.

நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.ED
Cell 9659653138