என்ன படிக்க வைக்கலாம்?
பிறந்த நாள் 06-11-2006
நேரம் 01:38pm
கும்ப லக்னம், ரிஷப ராசியில் ஜாதகர் பிறந்துள்ளார்.
பொதுவாக என்ன படிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழும்போது ஜாதகனுடைய ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலுப்பெற்றுள்ளன? எந்த கிரகங்கள் நன்மை தரக்கூடிய பட்சத்தில் அமைந்துள்ளன? எந்த கிரகங்கள் ராசி லக்னத்திற்கு 6 மற்றும் பத்தாம் இடங்களுடன் வலுப்பெற்ற நிலையில் தொடர்பு கொண்டுள்ளன என்பதை பார்த்து முடிவு செய்து அடுத்து வரக்கூடிய தசா புத்திகளையும் ஆராய்ந்து சொல்வது நல்லதாகும்.
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது அடிமை உத்தியோகம், அதாவது வேலை பார்ப்பதை சுட்டிக்காட்டக் கூடிய ஒன்று. பத்தாமிடம் என்பது சுய தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சுட்டிக் காட்டக் கூடிய ஒன்றாகும்.
இவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் 2 மற்றும் 11-க்குடைய தன லாபாதிபதியான குரு இருக்கின்றார்..
அதில் இருக்கக்கூடிய குரு தன்னுடைய 5ம் பார்வையால் வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்துடன் தொடர்பு கொள்கிறார்.
அந்த வகையில் வாக்கினை முதன்மையாகக் கொண்ட தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஜாதகனுடைய ஜாதகத்தில் உள்ளன. குருவின் காரகத்துவ தொழிலான வாக்கு தொழில், பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல்-வாங்கல் தொடர்புடைய தொழில்களான வங்கிப்பணி அது சம்பந்தப்பட்ட படிப்புகள் படிப்பது நல்லது.
அதோடு இவருடைய ஜாதகத்தில் அடிமை உத்யோகத்தை சுட்டிக் காட்டக்கூடிய ஆறாம் வீட்டு அதிபதியான சந்திரன் கல்வி ஸ்தானமான 4-ஆம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் திக் பலத்துடன் இருக்கின்றார்.
நான்காம் வீட்டில் இருக்கக்கூடிய ஆறாம் அதிபதி சந்திரன், பத்தாம் வீட்டில் இருக்கக்கூடிய குருவால் பார்க்கப்படுகிறார்.
ஆறாம் அதிபதியான சந்திரன், தன லாபதியான குருவின் பார்வையில் உள்ளதால் சந்திரன் சுட்டிக்காட்டக்கூடிய உணவுத் தொழில் சம்பந்தப்பட்ட படிப்புகளை கூடுதலாக கற்றுக்கொள்ள வைப்பதும் பின் நாட்களில் நன்மையத் தரும்.
இவருடைய ஜாதகத்தை பொறுத்தமட்டில் மூன்றாம் பாவகம் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் கம்யூனிகேஷன் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் இயல்பாகவே ஆர்வம் உடையவராக இருப்பார். அந்த வகையில் உணவு சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் ஆரம்பிப்பதும் ஜாதகருக்கு நாளடைவில் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அடுத்து வரக்கூடிய ராகு தசாவை பொறுத்தவரையில் ராகுவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருக்கின்றார்.
உத்யோகத்தினை தரும் ஆறாம் அதிபதியான சந்திரன் பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொள்கிறார் என்பதன் அடிப்படையில் கூடுதலாக உணவு சம்பந்தப்பட்ட படிப்புகள், தொழில்களை கற்றுக்கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138