குருவின் பார்வையில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருவின் பார்வையில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 பிப்ரவரி, 2025

குருவும் புதனும் இணைந்திருந்தால் அல்லது குருவின் பார்வையில் புதன் இருந்தால்...

இயல்பிலேயே நல்ல ஞானத்தினையும், நல்லறிவையும் தரக்கூடிய கிரகமான குரு, ஒருவருடைய புத்திசாலித்தனம், சமயோசித புத்தி இவற்றிற்கு காரக கிரகமான  புதனைப் பார்த்தால் அல்லது புதனுடன் இணைந்திருந்தால் என்ன பலன்களை தரும் என்பதை பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம். #Iniyavan 

புத்திசாலித்தனத்திற்கு காரக கிரகமான புதனை, குரு பார்ப்பது அல்லது குருவும் புதனும் இணைந்திருப்பது இரு கிரகங்களின் காரக ரீதியாகவும் ஜாதகருக்கு சிறப்பான பலன்களை தரும்.

ஜாதகர் நல்ல தெய்வம், அனுக்கிரகம் பெற்றவராக கிருஷ்ணர், பெருமாள், மகாலட்சுமி போன்ற வழிபாடுகளில் விருப்பம் கொண்டவராக இருப்பார்.

ஜாதகருக்கு போதுமானவரை  தான் சார்ந்த எல்லா விஷயங்களிலும் நல்ல ஞானம் இருக்கும். தன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவராகவே ஜாதகர் இருப்பார்.#Iniyavan

இவருடைய புத்திசாலித்தனம் இவருக்கு மட்டுமின்றி இவரை சார்ந்த எல்லோருக்கும் பயன்படக்கூடிய காரணத்தினால் இருப்பதால் எல்லோருக்கும் நல்ல வழிகாட்டியாக, ஒரு குருவின் நிலையில் இருக்கக்கூடியவராக ஜாதகர் இருப்பார்.
எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும், இவரிடம் ஆலோசனை கேட்டால் சிறப்பான தீர்வை தருவார் என சுற்றியுள்ளவர்கள் சொல்லக்கூடிய அளவிற்கு ஜாதகருடைய புத்திசாலித்தனம் இருக்கும்.

ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு நல்ல ஈடுபாடு இருக்கும். ஜோதிடத்தில் நல்ல பரிட்சயம் இருக்கும்.இவருடைய உள்ளுணர்வு (Indution power) மிகச் சிறப்பான வகையில் ஆச்சர்யம் படும்படியான பலன் தரக்கூடியதாக இருக்கும்.

எதையும் ஆராய்ந்தரையும் திறன் பெற்றவராக ஜாதகர் இருப்பார். கல்விக்கு காரக கிரகமான புதனுடன் குரு இணையும் போது அல்லது புதனை, குரு பார்க்கும் போது ஜாதகர் கல்வி சார்ந்த விஷயங்களை நல்ல திறமை உடையவராக, ஒன்றிற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு படித்தவராக, சில நிலைகளில் முனைவர் பட்டம் வரை படித்தவராக இருக்க கூடும்.#Iniyavan

இவர்கள் இயல்பிலேயே நுட்பமான நிர்வாகத்திறனை பெற்றுள்ள காரணத்தினால், வேலை பார்க்கும் இடத்தில் பெரும்பாலும் தலைமை பொறுப்பில் இருப்பார்கள். அல்லது அந்த நிலைக்கு விரைவில் முன்னேறுவார்கள்.

புதன் எழுத்திற்கு காரக கிரகம் என்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் நல்ல படைப்பாற்றல் இவர்களுக்கு உண்டு.சினிமா துறையில் இருக்கும் பொழுது நல்ல பாடல் ஆசிரியர்களாகவும், வசனகர்த்தாக்களாகவும் சிறந்து விளங்கும் தன்மை இவர்களிடத்தில் உண்டு.

Software, Communication, Technology, IT,   Media, News readers, செய்தி வடிவமைப்பாளர், Computer சார்ந்த துறைகள் போன்ற புதனுடைய காரகம் சார்ந்த தொழில்களில் இருக்கும் பொழுது மிகச் சிறப்பான முறையில் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.மேற்கண்ட துறைகளில் மற்றவர்களுக்கு  நன்கு போதிக்கக்கூடிய நிலையில் இருப்பவராகவும் இருக்கலாம்

குருவின் காரகமான Teaching துறையில் இருக்கும் போது எந்த ஒரு  Subject ஐயும் மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும்படி சொல்லித் தருபவராக, சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றவராக  ஜாதகர் இருப்பார். கல்வியின் காரகனான புதனுடன், குரு இணைந்திருப்பது அல்லது புதனை, குரு பார்ப்பது கல்வி சார்ந்த தொழில்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்யும். கல்வி நிறுவனங்களை பெரிய அளவில் நடத்தக்கூடிய வாய்ப்பையும் இந்த இணைவு ஏற்படுத்தித் தரும்.#Iniyavan

குருவின் காரகமான பனம் சார்ந்த விஷயங்களில் பணத்தை பெருக்குவதில் இவர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கும். பங்குச்சந்தை, தங்கத்தில் முதலீடு (Digital Gold) போன்றவற்றில் ஜாதகர் விருப்பம் உடையவராக இருப்பார்.

எந்தத் துறையில் முதலீடு செய்தால் அதன் மதிப்பு உயரும் என்பதை அறிந்து நன்கு திட்டமிட்டு அதன்படி செயலாற்றுபவராக ஜாதகர் இருப்பார்.

பணத்திற்கு காரக கிரகமான குருவுடன், புத்திசாலித்தனத்திற்கு காரக கிரகமான புதன் இணைவதால் நிதி மேலாண்மையில் சிறப்பாக செயல்படக்கூடிய திறன்கள் இவர்களிடத்தில் உண்டு.
செலவுகளை குறைத்து வருமானத்தை பெருக்கும் வழி அறிந்தவர்கள். பண விஷயங்களில் இயல்பிலேயே சிக்கன குணத்தை பெற்றிருப்பார்கள்.
பணத்தை செலவு செய்வதில் நியாயமான விஷயங்கள் என்னும் பொழுது எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் அதற்காக செலவு செய்வார்கள். ஆனால் தேவையற்ற விஷயங்கள் எனும்போது செலவு ஒரு ரூபாய் என்றாலும் அதற்காக இவர்கள் அதிகம் யோசிப்பார்கள்.ஒவ்வொரு நாளுக்கான வரவு செலவுகளை எழுதி வைத்து, அதற்கு ஏற்ப தனது பொருளாதார நிலையை சீர் செய்து கொள்வதில் கவனமுடையவர்களாக இருப்பார்கள்.#Iniyavan

பிறப்பில் சாதாரண நிலையில் இருந்தாலும் தனது புத்திசாலித்தனத்தின் துணைகொண்டு பொருளாதார ரீதியாக பெரிய அளவிற்கு முன்னேறி விடுவார்கள். பெரும்பாலும் தான் இருக்கும் துறையில் நிபுணத்துவம்
(Specialist) நிறைந்தவர்களாக இருப்பார்கள்.இவர்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.

சில நிலைகளில் படிப்பறிவே இல்லாவிட்டாலும் கூட இருக்கும் துறையில் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம், இவர்களுக்கு தேடுதல்கள் அதிகம். தானாகவே எதையும் கற்றுக்கொள்வார்கள். கற்றுக் கொண்டதை பிறர் ஆச்சரியப்படும் படி போதிக்கக்கூடிய திறன்களையும் பெற்றிருப்பார்கள். நல்ல அனுபவ ஞானம் உடையவர்கள்.

நல்ல ஞாபக சக்தி உடையவர்கள் எளிதில் எதையும் மறக்க மாட்டார்கள்.
தொழில் ரீதியாக எடுத்துக் கொள்ளும் பொழுது பெரும்பாலும் உடலுழைப்பற்ற தன்னுடைய புத்திசாலித்தனத்தின் உதவி கொண்டு செய்யக்கூடிய தொழில்களிலேயே இருப்பார்கள்.

நட்பிற்கு காரக கிரகமான புதனுடன் முழு சுபரான குரு இணைவதால் பெரும்பாலும் இவர்கள் எல்லோருடன் நட்பாக பழகுவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பார்கள். நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக, நண்பர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவராகவும் ஜாதகர் இருப்பார். #Iniyavan

புதன் காதலுக்கு காரக கிரகம் என்பதால் எளிதில் காதல் வயப்படுவார்கள் காதல் சார்ந்த விஷயங்களில் மனவருத்தங்களை சந்தித்தவர்களும் உண்டு.

இளமைக்கு காரக கிரகமான புதனை முழு சுபரான குரு பார்ப்பதால் பெரும்பாலும் இளமையான தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். வயதானாலும், வயதான தோற்றம் இவர்களுக்கு தெரிவதில்லை.பெரும்பாலும் மூக்கு அழகாக,எடுப்பாக  இருக்கும் ஏறு நெற்றி மற்றும் முன் வழுக்கை விழுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
நாடி ஜோதிடத்தில் குருவை மையமாக வைத்தே பலன் எடுப்பார்கள் அவ்வகையில் இளமைக்கு காரக கிரகமான புதனுடன் குரு இணைந்திருக்கும் பொழுது பெரும்பாலும் இவர்களே வீட்டில் கடைசி குழந்தைகளாக இருப்பார்கள்.#Iniyavan

புத்திரக் காரகனான குரு, புத்திசாலித்தனத்திற்கு காரண கிரகமான புதனுடன் இணைவதால் இவருடைய குழந்தைகளும் நல்ல புத்திசாலிகளாகவே இருப்பார்கள்.
இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கேரளாவில், குழந்தை வடிவில் காட்சி தரும் குருவாயூர் கண்ணனை வழிபட்டு வருவது நலம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலகிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட அனைத்து கிருஷ்ண ஆலயங்களிலும் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.#Iniyavan
தன்னுடைய மேம்பட்ட புத்திசாலித்தனம், அறிவாற்றலால் ஏற்படக்கூடிய வித்யா கர்வம் இன்றி நடந்து கொள்வதோடு,  பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு கல்வி ரீதியாக உதவுவது, அறியாமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்களை, நல்ல வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி அவர்களை கடைத்தேற்ற வழி செய்வது 
எல்லா நிலைகளிலும் இவர்களுக்கும் சரி   அவர்களுக்கும் ( அறியாமையின் காரணமாக நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தவர்கள்) நலத்தினை நல்கும்.

(பிற கிரகங்களின் பார்வைகள், தனிப்பட்ட முறையில் புதனுக்கும்,குருவுக்கும் கிடைத்துள்ள ஸ்தான பலம், வீடு கொடுத்த கிரகத்தின் நிலை இவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடக்கூடும்.)

நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks