அரசியலில் செல்வாக்கு பெற... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியலில் செல்வாக்கு பெற... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2022

உயர்பதவி கிடைக்க பின்பற்ற வேண்டிய வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் பரிகாரங்கள்

அரசியல் ரீதியாக உயர்பதவிகளுக்கு செல்ல விரும்புபவர்கள், அரசு வேலை கிடைப்பதில் தொடர்ச்சியான தடை தாமதங்களை சந்திப்பவர்கள்,அரசியல் ரீதியாக இன்னல்கள், இடர்பாடுகளை சந்திப்பவர்கள் செய்ய வேண்டிய பலன்தரும் பரிகாரங்கள்:- 

ஜோதிட ரீதியாக அரசாங்கம், அரசு வேலை, அரசியல் ரீதியான செல்வாக்குகள், அதிகாரமிக்க பதவிகள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய கிரகம் கண்களுக்குப் புலப்படும் கடவுளான சாட்சாத் சூரிய பகவானாவார். #Iniyavan 


சுய ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் போன்ற நிலையில் இருக்கக் கூடிய அமைப்பு,
சூரியன் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பில் இருக்கக்கூடிய அமைப்பு, சனி, இராகு போன்ற பாபர்களின் தொடர்பின்றி திக்பலம், வர்க்கோத்தமம் போன்ற நிலையில் இருக்கும் பொழுது சூரியனுடைய காரகத்துவ விஷயங்கள் ஜாதகருக்கு நல்ல படியாக கிடைக்கும். 

சூரிய பகவானே ஒருவருடைய அதிகாரம் ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை, பெயர், புகழ், செல்வாக்கு, போன்றவற்றிற்கு காரகம் வகிக்கக்கூடிய  கிரகம். அந்த வகையில் சூரியன் வலுப்பெற்ற நிலையில் சுபர்களின் தொடர்பில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு நல்லபடியான அதிகாரம்,ஆளுமை திறன் போன்றவை கிடைக்கும். #Iniyavan

சூரியனும் ஒரு வகையில் அரைப்பாபர் என்பதால் சுபகிரகங்களின் தொடர்பில் இருப்பது நல்ல அமைப்பாகும். சுபர்களின் தொடர்பின்றி தனித்த நிலையில் ஆட்சி அல்லது உச்சம் பெறும்பொழுது
ஜாதகருக்கு அதீதமான தன்னம்பிக்கை தான் என்ற அகங்கார உணர்வு, மிகுந்த கண்டிப்பான சுபாவம், முன்கோபம் போன்றவை வெளிப்படுவதையும் காண இயலும். அந்தவகையில் சூரியன் சுபர்களின் பார்வையில் அல்லது இணைவில் இருப்பதே சிறப்பு.

பாபகிரகமான  சனியின் பார்வையில் அல்லது இணைவில் இருப்பது, ராகு கேதுக்களுடன் மிக நெருங்கிய நிலையில் இணைந்து கிரகணம் போன்ற நிலையில் இருக்கும்போது சூரியனுடைய காரகத்துவங்கள் கிடைப்பதில்   ஜாதகருக்கு தடைகள்,தாமதங்கள், ஏமாற்றங்கள், இன்னல்கள் இருக்கலாம். சூரியனுடைய காரகத்துவ விஷயங்கள் மூலமாக ஜாதகருக்கு பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. பொறுப்பற்ற தந்தை, வேலை பார்க்கும் இடத்தில் உயரதிகாரிகள் வழியில் பிரச்சினை, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் அதீதமான காரியத்தடைகள், 
அரசு வேலை கிடைப்பதில் தொடர்ச்சியான தோல்விகள் ஏற்பட வாய்ப்பு. Iniyavan Karthikeyan 
 
இதுபோன்ற சூரியனுடைய காரகத்துவ விஷயங்களில் தொடர்ச்சியாக தடை தாமதங்கள், இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் தொடர்ச்சியாக ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்திரி மந்திரம் சொல்லி அனுதினமும் சூரிய உதயத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் சூரிய பகவானை மனமுருகி வழிபட்டு வரவேண்டும்.

சூரிய பகவான் உச்சம் அடையும் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தன்று கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வருவதும் மேன்மைக்குரியதாகும்.
அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அரசியல், அரசாங்கம், அரசு வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகள் மேற்கொள்வது தடைகளை நீக்குவதற்கு உதவும்.

சூரியன் உச்சம் அடைய கூடிய நட்சத்திரமான அசுவினி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் சிவபெருமானை வழிபட்டு வருவதும் அரசு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் செல்வாக்கினை பெற உதவும்.

ஞாயிறு தோறும் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொள்வதும் ஜாதகருடைய ஆளுமைத் திறனையும் ஆத்ம பலத்தையும் பெருக்கும்.

அரசியல் ரீதியாக உயர் பதவியை அடைய முயற்சிப்பவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரமிக்க பதவிக்கு செல்ல விரும்புபவர்கள், புகழ், பெயர், அந்தஸ்து செல்வாக்கு போன்றவற்றை அடைய விரும்புவர்கள், சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை சென்று வழிபட்டு வருவது சிறப்பிற்குரியதாகும்.
முக்கியமாக இந்த வழிபாட்டை சூரியன் உச்சம் அடையக் கூடிய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக ஆறு மாத காலம், அஸ்வினி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் திருவண்ணாமலை சென்று சிவபெருமானை மனமுருகி சிரத்தையுடன் வேண்டும் பொழுது உயர்பதவி கனவுகள்  நனவாகும் என்பது சாஸ்திரம் நமக்குச்  சொல்வதாகும்.

வாழ்வியல் பரிகாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் அசைவத்தை தவிர்ப்பது நல்லதாகும்.  ஜாதகரின் தந்தை எப்படிப்பட்டவராயினும் தந்தை இடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வது,
தந்தை செல்லக் கூடிய வேலைகளை தட்டாமல் செய்வது, தந்தையைக் ஒத்த வயதினர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்றவை நல்லதாகும்.
Iniyavan Karthikeyan 
சூரியன் சுறுசுறுப்பு, நேரம் தவறாமை ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம்.
அந்த வகையில் சோம்பேறித்தனம் இன்றி எப்போதும் சுறுசுறுப்பாக  செயல்படுவதும், எல்லா செயல்பாடுகளிலும் நேர ஒழுங்கினை கடைபிடிப்பது அவசியமாகும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/I9sRO6ovX733Dp1DFNxT74