எல்லா பாவகங்களுக்கும் கவனிக்க வேண்டிய எட்டாம் பாவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்லா பாவகங்களுக்கும் கவனிக்க வேண்டிய எட்டாம் பாவகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 டிசம்பர், 2020

எந்த ஒரு பாவகத்திற்கும் கவனிக்கப்பட வேண்டிய எட்டாம் பாவகம்...

எந்த ஒரு பாவகத்திற்கும் கவனிக்கப்பட வேண்டிய எட்டாம் பாவகம்...
எந்த ஒரு பாவத்திற்கும்  எட்டாம் பாவகம் தடை, தாமதம், இழப்பு, துன்பம், பிரிவு போன்ற பிரச்சனைகளை தரவல்லது. ஒரு பாவகத்திற்கு எட்டாம் பாவகத்தில் பாபர்கள் இருக்கும்போது மேற்கண்ட பாவகத்தின் பலனை பெறுவதில் தடைகள், பிரச்சினைகள் இருக்கும்.
ஒரு பாவகத்திற்கு எட்டாம் பாவகத்தில் நின்ற பாப கிரகங்களின் தசா புக்தி நடக்கும்போது பிரச்சனைகளை உணர இயலும்.

உதாரணத்திற்கு ஒருவரின் ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு எட்டில் ஒரு பாபகிரகம் இருப்பதாகக் கொண்டால் அந்த பாப கிரகத்தின் தசா புக்தி நடக்கும்போது நாலாம் பாவகம் குறித்த பிரச்சினைகளை ஜாதகர் எதிர்கொள்வார். இதுபோன்ற நிலைகளில் ஒரு பாவகத்தின் உயிர் காரகத்துவ முதலில் பாதிக்கப்படும். அந்த வகையில் ஜாதகரின் தாயார் பாதிக்கப்படுவர் நான்காம் பாவகம் என்பது தாயாரை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் ஜாதகத்தில் நான்காம்  இடத்திற்கு எட்டில் பாபகிரகம்  நின்று தசா புத்தி நடத்தும் போது அவருடைய அன்னையின் ஜாதகத்தில்  மேற்கண்ட பாப கிரகம் மாராகாதிபதியாக இருக்கும் பட்சத்தில் ஜாதகரின் தாயாருக்கு மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். இதைப்போலவே தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் பாவகம், மனைவியை குறிப்பிடும் ஏழாம் பாவகம், குழந்தைகளை குறிப்பிடும் ஐந்தாம் பாவகம், இளைய மற்றும் மூத்த சகோதரர்களை குறிக்கும்  3 மற்றும் 11ம் பாவகம்  போன்றவற்றிற்கு எட்டாம் பாவகத்தில்  பாபகிரகங்கள்  நின்று தசா புக்தி நடக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். ஒரு பாவகத்திற்கு எட்டில் நின்ற பாப கிரகம், குறிப்பிட்ட உறவின் ஜாதகத்தில் மாரகாதிபதியாக  இருக்கும் பட்சத்தில் கூடுதல் எச்சரிக்கை என்பது  மிகவும்தேவையான ஒன்றாகும்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138