சூரியன் சந்திரன் சேர்க்கையும்| சனி மற்றும் இராகு, கேது தொடர்பும்...
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சூரியன், சந்திரன் சேர்க்கை அமாவாசையாக
எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இருவரில் ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் தொடர்பு இருக்க வேண்டும். சுபர் தொடர்பு இருப்பது நல்லதாகும்.
குறிப்பாக சூரியன், சந்திரன் இணைவில் ராகு கேதுக்களின் இணைவு கண்டிப்பாக நல்லதல்ல. அதேபோல் மேற்கண்ட அமைப்பிற்கு சனியின் தொடர்பும் இருக்கக் கூடாது. #Iniyavan
இருக்கக்கூடிய பட்சத்தில், சுபர் தொடர்பு இல்லாத நிலையில் இணைந்துள்ள பாவகம் இலக்னத்திற்கு எத்தனையாவது பாவமாக உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களால் ஜாதகருக்கு பாதிப்புகள் சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் வர வாய்ப்புண்டு.
இதுமட்டுமின்றி காரகத்துவ ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் பெற்றோர்களுக்கு பொறுப்பினை ஏற்பதால் சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் தாய், தந்தை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
இலக்னத்தில் இந்த அமைப்பு உள்ள போது ஜாதகருடைய குணநலன்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.
சந்திரன் மனோகாரகன் என்பதால் ஜாதகர் மனரீதியாக சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் பாதிக்கப்படுவார்.
சூரியன் ஆத்ம காரகன் என்பதாலும் லக்னத்திற்கு காரக பொறுப்பினை ஏற்பதாலும் ஜாதகர் சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் தன்னம்பிக்கை குறைவினை எதிர்கொள்ள நேரிடும்.
இது போன்ற அமைப்புகளில் லக்னாதிபதி கண்டிப்பாக பலம் பெற்றிருக்க வேண்டும். இலக்னத்திற்கு சுபர் தொடர்பு அவசியம் இருக்க வேண்டும்.
2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது சுபர் தொடர்பு இல்லாத நிலையில் ஜாதகர் பேச்சில், குடும்பம், தனவரவு போன்ற விஷயங்களில் பாதிப்பினை பெறுவார்.
கண் சார்ந்த பாதிப்புகளையும் இந்த அமைப்பு இரண்டாமிடத்தில் ஏற்படுத்தும்.
ஜாதகர் சிறுவயதுடையவர் எனில் அடிப்படைக் கல்வி சம்பந்தப்பட்ட தசா புத்தியில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. #Iniyavan
மூன்றாம் இடத்தில் இந்த அமைப்பு இருந்து சுபர் தொடர்பு இல்லாத நிலையில் ஜாதகருடைய தைரியம், வீரியம், இளைய சகோதரம் போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஜாதகர் தன்னம்பிக்கை அற்றவராக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.
3-ஆம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் ஜாதகர் தாம்பத்திய ரீதியான குறைபாடுகளையும் எதிர்கொள்ள நேரிடும். #Iniyavan
நான்காம் பாவகத்தினில் இந்த அமைப்பு இருக்கும் போது ஜாதகருடைய வீடு பிரச்சினைக்கு உரியதாக இருக்கலாம். வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறவினர்கள் மூலமாக ஜாதகர் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜாதகருடைய சுகம், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படும்.குறிப்பாக தாயாருக்கு உடல் ரீதியாக பாதிப்புகளை சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் இந்த அமைப்பு ஏற்படுத்தும்.
நான்காமிடம் குறிக்கக்கூடிய நிலம், பூமி, வாகனம்,கல்வி போன்ற விஷயங்களிலும் ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படலாம்.
ஐந்தாம் இடமான புத்திரர்களை குறிக்கக் கூடிய இடத்தில் இந்த அமைப்பு இருக்கும் போது சம்பந்தப்பட்ட திசா புத்திகளில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
ஐந்தாமிடம் ஆழ்மன ஸ்தானம் என்பதால் ஜாதகர் மன ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். #Iniyavan
ஆறாம் இடத்திலும் அமைப்பு இருக்கும் பொழுது ஜாதகருடைய வேலைவாய்ப்பு, தாய்மாமன் உறவுகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
ஏழாமிடத்தில் இந்த இணைவு இருக்கும்பொழுது ஜாதகருடைய மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் பாதிக்கப்படும்.
ஜாதகருக்கும், ஜாதகருடைய மனைவிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள்,பிரிவினை, தாம்பத்யம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஏழாமிடம் பொது ஜன தொடர்புகளையும் நண்பர்களையும் சுட்டிக்காட்டக் கூடிய இடம் என்பதால் பொதுஜன தொடர்புகளால் ஜாதகருடைய பெயர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், நண்பர்களால் ஏமாற்றம் வருவதற்கும் வாய்ப்புண்டு.
எட்டாம் இடத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது எட்டாம் அதிபதி பலவீனமாக இருக்க கூடிய பட்சத்தில் (லக்னாதிபதியின் நிலையையும் கவனத்தில் கொள்க) ஜாதகருக்கு ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு.
ஒன்பதாம் இடத்தில் இந்த அமைப்பு இருக்கும் போது குறிப்பாக உயிர் காரகத்துவ ரீதியாக ஜாதகனுடைய தந்தையார் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாதகருக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது ஜாதகருக்கு சொந்த தொழில் செய்வது பெரிய அளவில் கை கொடுக்காது.தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாதகருக்கு ஏமாற்றங்கள், நஷ்டங்கள் இருக்கலாம்.
11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த அமைப்பு இருக்கும் போது ஜாதகருக்கு பணவரவில் பிரச்சினை இருக்கலாம். ஜாதகருடைய மூத்த சகோதர உறவுகள்(பதினொன்றாம் அதிபதியின் நிலையினைப் பொருத்து) சம்பந்தப்பட்ட தசா புத்திகளில் பாதிக்கப்படலாம்..
ஜாதகர் தன்னுடைய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பிரச்சினைக்குரியவராக இருப்பார். #Iniyavan
12ஆம் இடத்தில் இந்த அமைப்பு இருக்கும் பொழுது ஜாதகருக்கு தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பு ஏற்படலாம். தூக்கம் வருவதில் பிரச்சனைகள் இருக்கலாம்.
மேற்கண்ட இணைவில் ராகு கேதுக்கள் தொடர்பு பெற்று சனியின் தொடர்பும் இருக்கும் போது பிரச்சனையின் பாதிப்புகள் சம்பந்தப்பட்ட திசா புத்திகளில் பெரிய அளவில் இருக்கும். வலுப்பெற்ற சுபர்களின் தொடர்பு இருக்கும் போது பிரச்சனை பெரிய அளவில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
பாதிப்புகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை அந்த வீட்டு அதிபதியின் நிலை யையும் கவனத்தில் கொண்டே கணித்தாக வேண்டும்.
கிரகங்கள் பாதிப்பினை தரக்கூடிய நிலையில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தசா புத்தியில் மட்டுமே பாவகம் சார்ந்த பாதிப்புகளை ஜாதகர் சந்திக்கக்கூடும் என்பதால் தசா புத்திகள் வராத நிலையில் ஜாதகர் கவலை கொள்ள வேண்டியதில்லை.
வலுப்பெற்ற சுபகிரகங்களான குரு மற்றும் சுக்கிரனின் பார்வை, இணைவு மேற்கண்ட அமைப்பு இருக்கும் பொழுது ஜாதகருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
பாதிப்பைத் தரக் கூடியதாக இருக்கும் போது எந்த பாவகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உறுதி செய்து அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் முன்னெச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது, இலக்னாதிபதியை பலம் கூட்ட செய்யக்கூடிய வழிபாடுகளில் கவனத்தை செலுத்துவது பாதிப்பின் வீரியத்தை குறைக்க உதவும்..
சூரியன், சந்திரன் சுய ஜாதகத்தில் வலுவிழந்து இருக்கக்கூடிய நிலைகளில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோச வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லதாகும்.
அதேபோல் மாதந்தோறும் வரக்கூடிய பௌர்ணமிகளில் ஜாதகர் சக்தியின் வடிவமாக திகழ்கின்ற அம்பாள் வழிபாட்டை கடைப்பிடித்து வருவது நல்லதாகும்.
அதேபோல் அனுதினமும் சூரியன் உதயமான 20 நிமிடத்திற்குள் சூரிய காயத்ரி அல்லது ஆதித்யா ஹிருதயம் மந்திரம் சொல்லி சூரிய பகவானை வழிபட்டு வருவது ஜாதகருடைய ஆத்மபலத்தை, தன்னம்பிக்கையை பெருக்க உதவும்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/G5TYdiqIlflFmfuSiTrr7N