உங்களுடைய தன ஸ்தானம் எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்களுடைய தன ஸ்தானம் எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஏப்ரல், 2021

உங்களுடைய இரண்டாம் வீடு உணர்த்தும் விஷயங்கள்...

இரண்டாமிடம் முக்கியத்துவங்கள்:- ஒருவரின் அடிப்படை கல்வி, பண இருப்பு, நாணயமிக்க பேச்சு, குடும்பம் போன்றவற்றை இரண்டாம் பாவகம் சுட்டிக்காட்டும். இரண்டாம் வீட்டில் நின்ற, பார்த்த கிரகங்களின் இயல்பிற்கேற்ப ஜாதகரின் பேச்சு இருக்கும். பொதுவாகவே இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருக்கக் கூடிய ஜாதகர்கள் பிறரிடம் சண்டையிடும் போது தன்னையும் அறியாமல் மனம் புண்படும்படி பேசக் கூடியவர்கள். இரண்டாம் வீட்டில் நின்ற கிரகத்தின் வலுவிற்கு ஏற்ப அந்த கிரகம் குறிக்கக்கூடிய காரகத்துவ உறவுகள் மூலம் ஜாதகனுக்குப் பணவரவுகள் சம்பந்தப்பட்ட தசாபுக்தி காலகட்டங்கள் கிடைக்கக்கூடும்.

பொதுவாகவே இரண்டாம் வீட்டில் ராகு, கேதுக்கள் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் இரண்டில் ராகு கேதுக்கள் நின்று அந்த வீட்டு அதிபதியும் பலம் இழக்கும் போது ஜாதகருக்கு குடும்பம், பணவரவு, பேச்சு என இரண்டாம் இடம் குறிக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் பாதிப்புகள் உண்டாகக் கூடும். 2 ஆம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன் போன்ற இயற்கைப் பாபர்கள் இருக்கும்போது (அமாவாசை சந்திரன் உட்பட)
அதற்கு சுபக் கிரகங்களின் தொடர்பு இருப்பது மட்டுமே பேச்சில் உள்ள கடினத் தன்மையைப் போக்கும். அதே நேரத்தில் இரண்டாம் வீட்டில் போதுமானவரை எந்த ஒரு கிரகமும் உச்சம் அடையாமல் இருப்பது நல்லதாகும். ஏனெனில் அது வரக்கூடிய வாழ்க்கைத் துணையை சுட்டிக்காட்டும் ஏழாம் வீட்டிற்கு எட்டாம் இடமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

துணையின் ஜாதகத்தில் அவர் மாராக அதிபதியாக இருக்கக்கூடிய பட்சத்தில் தசா புக்தி நடக்கும்போது பாதிப்பைத் தரக் கூடும். இரண்டாம் அதிபதி 6, 8, 12 இருப்பதும் பகை, நீசம், அஸ்தங்கம் அடைவதும் பண வரவிலும், இருப்பிலும் பிரச்சினையைத் தரும்.

மறைவு ஸ்தானங்களில் இரண்டாம் அதிபதி இருப்பதை பொருத்தளவில் 12ல் இருப்பது ஓரளவு நல்லதே. ஏனெனில் அவர் தன்னுடைய வீட்டிற்கு இலாபஸ்தானத்தில் இருப்பார். 

அதேபோல் இரண்டாம் அதிபதி எட்டில் இருக்கும் போது தன்னுடைய வீட்டை தானே பார்ப்பார். சுபகிரகம் என்றால் நல்லதே.

இரண்டாம் வீட்டு அதிபதியின் பலத்திற்கு ஏற்ப அவரின் ஒட்டுமொத்த கல்வியானது நிர்ணயிக்கப்படும். ஏனெனில் இரண்டாம் இடம் என்பது அடிப்படைக் கல்வி, ஒருவரின் அடிப்படை கல்வி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எதிர்கால கல்வியும் நல்லதாகவே இருக்கும். இரண்டில் சுபகிரகங்கள்,பாபர் தொடர்பின்றி இருப்பது நல்ல கல்வி நிலைக்கு ஏற்றதாகும். பாபர் இருப்பின் சுபர் ஒருவராவது பார்க்க வேண்டும். இரண்டாம் வீட்டில் மறைவு ஸ்தான அதிபதிகளான 6, 8, 12 ஆம் அதிபதிகளைத் தவிர மற்றவர்கள் இருப்பது  நன்மையே.

3,11 ஆம் அதிபதிகள் இரண்டாம் வீட்டில் இருந்தால் சகோதர வகையிலும் 4, 9 ஆம் அதிபதிகள் நின்றால் பெற்றோர் வழியிலும், 7 ஆம் அதிபதி நின்றால்  வரக்கூடிய துணையின் மூலமாக பண வரவுகள் கிடைக்கக் கூடும். இரண்டாம் வீட்டில் இலக்னாதிபதி அமர்வது பல்வேறு வகையில் சிறப்பினை தரக் கூடியதாக இருக்கும். பாபராக இருப்பின் சுபர் தொடர்பு அவசியம்.

இரண்டாம் அதிபதி நீசமாகி தசாநடத்தும் போதும், இரண்டில் நீசன் நின்று தசா நடத்தும் போது  குடும்பமே அவமானத்தைச் சந்திக்க கூடும்.  வழிபாடுகள் மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லதாகும். இதுபோன்ற நிலைகளில் சுபர் தொடர்பு நிச்சயம் இருத்தல் அவசியம்.

ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி எந்த அளவிற்கு பலமாக இருக்கின்றாரோ, அதன் வலுவிற்கு ஏற்ப, ஜாதகர் ஒட்டுமொத்த குடும்பத்தையே கவனித்து நிர்வகிக்க கூடியவராக இருப்பார். 6, 8, 12-க்குடையவர்கள்  2 ஆம் வீட்டில் இருந்தாலும், 2-ம் அதிபதி 6,8,12ல் இருந்தாலும் தசா நடக்கும்போது வீண் விரையங்கள் ஏற்படுவது இயல்பு. எச்சரிக்கை தேவை.

பத்தாம் அதிபதி இரண்டில் பலவீனமாக நின்று தசாபுத்தி நடத்தக்கூடிய காலகட்டங்களில் ஜாதகர் தொழில் சார்ந்த விசயங்களுக்காக அதிகம் முதலீடு செய்த விரையமாக்கக் கூடும். எச்சரிக்கை தேவை.

நான் அறிந்தவரை இரண்டாம் பாவகம் தொடர்புடைய எல்லா விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இது ஜோதிடம் பயில்பவர்களுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கக் கூடும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
#Iniyavan
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138