சுக்கிரனுக்குரிய வாழ்வியல் பரிகாரங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுக்கிரனுக்குரிய வாழ்வியல் பரிகாரங்கள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 பிப்ரவரி, 2023

சுக்கிரனுக்குரிய வாழ்வியல் பரிகாரங்கள்...



மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கு தேவையான காரக கிரகம் சுக்கிரன்.
சுகபோகங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டவர் சுக்கிரன். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும் பொழுது நல்ல மணவாழ்க்கை எதிர்ப்பாலினரிடத்தில் நல்லுறவு, போதுமான ஆடை ஆபரணங்கள் மற்றும் வாகன வசதி போன்ற அனைத்தையும் நல்முறையில் கிடைக்கப்பெறுவர் ஜாதகர். #Iniyavan 

 ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்து இலக்னம், ராசி முக அங்கங்களை சுட்டிக்காட்டும் இரண்டாம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது நல்ல முகத்தோற்றம் மற்றும் முகப்பொலிவானது ஜாதகருக்கு இயல்பாகவே இருக்கும்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருக்கும்போது சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களில் ஏக்ககங்கள் மற்றும் ஏமாற்றங்களை ஜாதகரை சந்திக்க வைப்பார் சுக்கிரன்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

சுக்கிரன் பலவீனமாக இருப்பதற்குரிய அறிகுறிகள்:

முகப்பொலிவு மற்றும் கன்னங்களுக்கு காரக கிரகம் சுக்கிரனாவார்.
சுக்கிரன் பலவீனமாக இருக்கும் பொழுது தொடர்ந்து முகப்பொலிவு குறைந்து கொண்டே செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

கண்கள் சார்ந்த பாதிப்புகளை அவ்வப்போது எதிர்கொள்ளுதல்.

எதிர் பாலினரித்தில் இயல்பாக பேசுவதில் பழகுவதில் ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கலாம்.

எதிர்பாலின ஈர்ப்பே இல்லாதிருக்கலாம். 

எதிர்பாலினரால் அதிகப்படியான விமர்சனங்களுக்கு உள்ளாகுதல்.

வாகனங்களை இயக்குவதில் விருப்பமின்மை அல்லது வாகனங்களை இயக்குவதில் நேர்த்தி புரியாது இருத்தல்.

வீட்டுக்கு தேவையான சொகுசுப் பொருட்கள் வாங்குவதிலோ  அல்லது பயன்படுத்துவதிலோ விருப்பம் என்பதே இல்லாதிருத்தல்.

திருமணம் அதிக தாமதமாகுதல் அல்லது திருமண வாழ்வில் விருப்பம் இல்லாமல் இருப்பது..

மண வாழ்க்கையில் போதிய மகிழ்ச்சியின்மை.
 
தாம்பத்தியத்தில் விருப்பமின்மை அல்லது விருப்பங்கள் பூர்த்தியாக நிலை.

பருவமடைதலில் தாமதம் ஏற்படுதல்.

தொண்டைப் பகுதிகளில் பிரச்சனை ஏற்படுதல், சிறுநீரகங்கள், ஹார்மோன் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை எதிர்கொள்ளுதல்.

ஆடல், பாடல், சினிமா, பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் முற்றிலும் ஆர்வம் இன்மை.

உடை அணிவதில் எவ்வித ரசனையும் நேர்த்தியும் இல்லாதிருத்தல்.

தேவையான பொருளாதார வசதி அமைந்தும் இதுவரை தங்குவதற்கு நல்ல வீடு அமையப் பெறாத நிலை..

எதிர்பாலினரால் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உள்ளாகுதல்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
பலவீனச் சுக்கிரனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய வாழ்வியல் பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்...

சுக்கிரனுக்குரிய உணவுப் பொருட்களான பாதாம் பருப்பு, வெண் மொச்சை, சூரியகாந்தி விதைகள் அத்திப்பழம், தூய்மையான நாட்டு பசும்பால் தேங்காய் பால் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுக்கிரனுக்குரிய விருட்சமான அத்தி மரத்தை நட்டு பராமரித்து வருதல் நல்லது.

தேவையான அளவு வாசனை திரவியங்களை பயன்படுத்தி வரலாம்.

திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க பொருளாதாரரீதியாக உதவிகள் செய்து வரலாம்.

சந்தனம், அரிசி, வஸ்திரம், பூக்கள், வெள்ளி, நெய், தயிர், இனிப்பு வகைகள் போன்றவற்றை பெண்களுக்கு தானமாக வழங்கி வரலாம்.

வெள்ளிக் கிழமையும் சுக்கிரனுடைய நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில் விரதமிருந்து அன்னை மகாலட்சுமியை வழிபட்டு வருவது நல்லது.#Iniyavan

தினமும் குளிப்பதற்கு முன்பு தண்ணீரில் ஏலக்காய் தட்டிப்போட்டு சிறிது நேரத்திற்கு பின்பு குளித்து வருவது சிறப்பு.

தினமும் குளிப்பதற்கு முன்பு சுக்ர காய்த்ரி  மந்திரம் சொல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உறங்கி எழுந்த பின்பு படுக்கை விரிப்பு, போர்வை,  போன்றவற்றை சரியாக மடித்து வைக்க வேண்டும்.

அவ்வப்போது வெண்ணிற ஆடைகளை அணிந்து கொள்வதில் கவனம் செலுத்துவது நல்லது.

வெள்ளியால் செய்த அரைஞாண் கயிற்றை அணிந்து கொள்வது நல்லது.

சுக்கிரன் வழிபட்ட ஸ்தலங்களான திருவெள்ளியங்குடி, திருநாவலூர், தபசுமலை, ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்களுக்கு பிறந்த நட்சத்திர தினமன்று சென்று வழிபட்டு வருதல் சிறப்பு.#Iniyavan

சுக்கிரனுடைய நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் வழிபட்ட ஸ்தலங்களான ஸ்ரீவாஞ்சியம், பிரசித்தம், திருச்செந்தூர் சென்று வழிபடுவதும் சிறப்பு.

அவ்வப்போது மீன்கள் மற்றும் குதிரைகளுக்கு உணவளித்து வருவது நல்லதாகும்.

புதிதாக திருமணமான தம்பதியினருக்கு (பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள்) கட்டில், மெத்தை, தலையனை போன்றவற்றை தானமாக வாங்கித் தரலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி ஆலயங்களில்  நடைபெறக்கூடிய பூஜையில் கலந்து கொள்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு வெண் மொச்சை தாளித்து வழங்குதல் அல்லது இனிப்புகளை வழங்கி வருதல் நல்லதாகும்.

மகாலட்சுமி படங்களை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது நல்லது.#Iniyavan

எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்பாலினரிடத்தில் கண்ணியத்துடன் ஒழுக்கமாக எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் பெண் உறவுகளை மதித்து நடக்க வேண்டும்.
அவருடைய நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய முற்படவேண்டும்.

சுக்கிரனுக்குரிய வழிபாடுகளையும் வாழ்வியல் பரிகாரங்களையும் நம்மால் முடிந்த வரை ஆத்மார்த்தமான முறையில், தூய்மையான உள்ளத்துடன் கடைபிடிக்கும் போது நாளடைவில் பாதிப்புகளை நீக்கி நல்லனவற்றை நல்குவாள் அன்னை மகாலட்சுமி..
ஓம் ஸ்ரீ மஹா லக்ஷ்மியை நம..
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, 
MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg

https://www.facebook.com/groups/3741