திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜனவரி, 2021

திருமண பொருத்தம் எது முக்கியம்? நட்சத்திர பொருத்தம்? (அ) ஜாதக அனுகூல பொருத்தம்..

திருமண பொருத்தம்:- எது முக்கியம்?

பெரும்பாலானோர் 10 நட்சத்திர பொருத்தங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் உண்மையான மற்றும் முதன்மையான பொருத்தம் என்பது இருவரின் ஜாதக கட்டங்களில் ஒப்பீட்டு ஆராயப்படும் ஜாதக அனுகூலப் பொருத்தமே.

நட்சத்திர பொருத்தங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, கட்ட பொருத்தத்தை ஆராயமல் பொருத்தம் உள்ளது என்றும் பொருத்தம் இல்லை என்றும் சிலர் முடிவு எடுத்து விடுகின்றனர்.
திருமண பொருத்தத்தை பொறுத்தவரை இருவரின் ஜாதக அடிப்படையிலான பொருத்தம் சரியாக இருந்தால் நட்சத்திரத்திற்கு முதன்மை தர வேண்டிய அவசியமே இல்லை.

உண்மையை சொல்லப் போனால் பத்து நட்சத்திர பொருத்தங்களின் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் புத்திர பாக்கியத்திற்காக சொல்லப்படும் மகேந்திரப்பொருத்தம், பெண்களுக்கான  மாங்கல்ய பலத்திற்கான  ஸ்திரீ தீர்க்கம் எனும் பொருத்தம், கணவன்-மனைவி இருவரின்  தாம்பத்திய சுகத்தை அளவிடும் யோனிப்பொருத்தம், கணவன் மனைவி இருவரின் ஆயுளைக் குறிப்பிடும் ரஜ்ஜு பொருத்தம், கணவன் மனைவி ஒற்றுமையக் குறிப்பிடும் ராசி, ராசி அதிபதி, வசியப் பொருத்தம் போன்றவை சரியில்லாத நிலையிலும்  இருவரின் ஜாதகக் கட்ட அடிப்படையிலான  திருமணப அனுகூல  பொருத்தத்தில்  இவற்றிற்கு தீர்வு உண்டென்பதே உண்மை.

நட்சத்திர பொருத்தமே முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீங்கள் கருதினால் உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடிக்கு மேல். மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களிலும் பல கோடி பேர் இருப்பார்கள் என்பது உண்மை.

அவ்வகையில் ஒரு பெண் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாகவும், ஒரு ஆண் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாகவும் எடுத்துக் கொண்டு நட்சத்திரப் பொருத்தத்தை ஆராய்ந்தால் நட்சத்திர அடிப்படையில் இருவருக்கும் மொத்தம் உள்ள பன்னிரண்டு வகையான பொருத்தங்களில்  9 பொருத்தம் வரை உள்ளது. இதையே காரணமாகக் கொண்டு அசுவனி நட்சத்திரத்தில் பிறந்துள்ள பெண்கள் அனைவருக்கும்,
பூரம் நட்சத்திரத்தில் உள்ள ஆண்கள் பொறுந்துவார்கள்  என்று எண்ணுவது மடமை.
ஏனெனில் ஜாதக கட்டம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஒன்றாக அமைந்து விடுவதில்லை.
இரட்டையர்களின் ஜாதகத்திலும் ஒரு நூலிலை வினாடி அளவெனும் வித்தியாசம் என்பது இருக்கும். ஜோதிடமே ஒளியை அடிப்படையாகக் கொண்டுள்ளது, ஒளி விழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற அடிப்படையில்  பிறந்த இடமும் ஜாதகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லக்னம் என்பது  மாறிக் கொண்டிருக்கும். அவ்வகையில் ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் மற்றவரைவிட பல்வேறு வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்பதே உண்மை.

எனவே தனித்தன்மை வாய்ந்த ஜாதக கட்டத்தை தம்பதிகளாக இணையப் போகிறவர்களுக்கு ஒப்பிட்டுப் பார்ப்பதே சாலச் சிறந்தது.

நட்சத்திர பொருத்தங்களில் வசியப் பொருத்தம் என்ற பொருத்தம் இல்லாத நிலையிலும்கூட தம்பதியர் இருவரும் ஒற்றுமையான நிலையில் வாழக் காரணம், இருவரின் ஜாதகத்திலும் இலக்கனம் பலம் பெற்று, லக்ன அதிபதிகள் நண்பர்களாக இருந்து இருப்பார்கள் என்பதே உண்மை.
ஓரளவேனும்  ஜாதக அடிப்படையிலான திருமண கட்ட அனுகூல பொறுத்தத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

ஜாதக கட்ட அடிப்படையிலான திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? அவற்றில் எந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பார்ப்போம்...


திருமணப்பொருத்தம் பார்ப்பதில் கவனிக்கப்பட வேண்டிய விதிகள்

1.எந்த ஒரு ஜாதகத்திலும் போதுமானவரை லக்னம் மற்றும் ராசி சாஷ்டாஷகமாக அமையக்கூடாது.

2.இருவரின் ஜாதகத்திலும் எட்டாம் இடமான ஆயுள்ஸ்தானம் கவனிக்கப்படவேண்டும்.
3. ஒருவருக்கு ஆயுள் ஸ்தானம் பாதிக்கப் பட்டிருந்தால்,அவரை பொதுவான  மாரக ஸ்தானங்களான  2 மற்றும் 7 இடங்கள் பாதிப்பு இல்லாதவரையே  இணைத்தல் வேண்டும்.

4.இருவரின் ஜாதகத்திலும் ஏழாமிடம் பார்க்கப்பட வேண்டும். ஏழாமிடம் பாதித்த அமைப்பில் உள்ளவர்களுக்கு லக்னம்  வலுத்தவரை தேர்ந்தெடுப்பது மணவாழ்வின்  பிரச்சினைகளை ஓரளவு நீக்கும்.இதேபோல் லக்னம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவருக்கு ஏழாம் இடம் பலமாக உள்ளவரை இணைப்பது நலம்.

5.இருவரின் ஜாதகத்திலும் இருதார அமைப்புகள் உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். அதற்கு 11-ஆம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி இவற்றின் நிலைகள் ஆராயப்பட வேண்டும்
6.ஒருவரின் லக்னம் மற்றவருக்கு பாதக ஸ்தானத்தில் அமையாதிருப்பது நலம்.

7.இருவருக்கும் திசாபுத்திகள் 6 8 12 ஆக அமைந்துள்ளதா? அடுத்தடுத்த காலகட்டத்தில் அவை நடைமுறையில் உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும்.மற்றும்
மாரக, பாதகாதிபதி அஷ்டமாதிபதி தசா இருவருக்கும் நடைமுறையில் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
போதுமான வரை இப்படிப்பட்ட அமைப்புகளை இணையாதிருப்பது நன்மை பயக்கும்.

8.அடுத்ததாக இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் பாவகம் பார்க்கப்படவேண்டும். ஒருவருக்கு புத்திர ஸ்தானம் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் மற்றவருக்கு புத்திர ஸ்தானம் வலுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.
புத்திரபாக்கியம் குறித்த விஷயங்களில் குருவின் நிலையும் கவனிக்கப்பட வேண்டும்.

9.போதுமான வரை சுக்கிரன் கெடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமான நிலையில் இருக்கும் பட்சத்தில்  சுக்கிரன் அதிக பலமான அமைப்பை உடையவர்களையே இணைக்க கூடாது.
சுக்கிரனின் சுபத்துவ நிலை கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும்.
ஏனெனில் கற்பு ஒழுக்கம் என்பது சுக்கிரனின் சுபத்துவ நிலையைப் பொருத்தே இருக்கும்.

10.அடுத்ததாக கோச்சாரத்தை பொறுத்தவரை இருவருக்கும் அஷ்டமச் சனி,ஏழரைச் சனி நடப்பில் உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் விவாகரத்து வழக்குகள் பெரும்பாலும்  அஷ்டமச்சனி,ஏழரைச்சனி சம்பந்தப்பட்டதாகவும் அதிலும் ஏழரை சனியைப் பொருத்தவரை ஜென்மச் சனி சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். எனவே முடிந்தவரை அஷ்டமச் சனி,ஜென்மச் சனி காலகட்டத்தில் திருமணத்தை தவிர்ப்பது நலம்.இருவருக்கும் அஷ்டமச் சனியில் திருமணம் செய்யவே கூடாது. 10 வருட இடைவெளியில் இருவருக்கும் அஷ்டமச்சனி ஏழரைச்சனி வராது இருப்பது முடிந்தவரை நலம் பயக்கும்.

11.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவிக்குரியவர் மற்றும் மனைவியின்  ஜாதகத்தில் 

செவ்வாய்  கணவருக்குரியவர் என்பதால் ஆண்,பெண் ஜாதகத்தில் முறையே சுக்கிரன், செவ்வாய் கெடாதிருப்பது நலம்.
நாடியின் அடிப்படையில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டில், பெண் ஜாதகத்தில் செவ்வாய் நிற்பது நல்ல பொருத்தம் ஆகும்.

12.சயன சுகத்தைக் குறிப்பிடும் 12-ஆம் இடத்தை பொருத்தவரை பெண்ணைவிட ,ஆணுக்கு பலமாக அமைந்திருத்தல் அவசியமாகும்.

https://t.me/devotional_tamil

நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138