ராகு 7-ம் வீட்டில் இருப்பது என்பது, அதே சமயம் கேது லக்னத்தில் (1-ம் வீட்டில்) இருப்பதை குறிக்கும். இது தனக்கு திருமண வாழ்க்கையில் முழுமையான திருப்தி இல்லாத உணர்வினை தரக்கூடும். ராகு 7-ம் வீட்டில் உள்ள நபர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைத் துணையை அவர்களால் அடைய இயலாது. அவர்களுக்குக் கிடைப்பவர்கள் பெரும்பாலும் கஷ்டமான, மோசமான, அல்லது நேர்மையற்றவர்கள் ஆக இருக்க வாய்ப்பு அதிகம். ராகுவிற்கு கிடைத்துள்ள சுபர் மற்றும் பாபர் தொடர்புக்கு ஏற்ப மேற்கண்ட பலன்களில் மாறுபாடு இருக்கும்
ஜாதவருடைய கேரக்டருக்கு முற்றிலும் நேர்மாறான துணையாக அவர்கள் இருக்கக்கூடும்.
முக்கிய அம்சங்கள்:
லக்னத்தில் கேது இருப்பதன் காரணமாக இவர்களுக்கு தனிமை பிடிக்கும், தங்களாகச் செயல்பட விரும்புவார்கள்.
திருமண வாழ்க்கை மிக முக்கியம், திருமண வாழ்வினை தவிர்த்து விடவும் முடியாது ஆனால் அதில் தடை, பிரச்சனைகள் ஏற்படும்.
பண்பாட்டை மீறி கல்யாணம் செய்வார்கள் — பிற இனத்தவர், மதம், சமூக நிலை, வயது போன்றவற்றில் பரஸ்பர மாற்றங்கள் இருக்கலாம்.
பொதுவாக பண்பாட்டின் வாயிலாக எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.
சில சமயங்களில், துணைவன்/துணைவி உடல் நலமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. (ராகுவின் பாதிக்குறிகள்/அஸ்பெக்ட்கள் கெட்டவையாக இருந்தால்)
ஆண்கள் மற்றும் பெண்கள்:
இருவருக்கும் தங்களுக்கு கிடைத்துள்ள துணை வாயிலாக வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொள்வது முக்கியம்.
சமூகத்தில் சிறந்த இடத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
துணையால் சுதந்திரம் குறைகிறது அல்லது கண்காணிக்கப்படுகிறது என்ற உணர்வு வந்தால், உறவினை உடைத்துவிட தோன்றும். இது போன்ற சூழ்நிலைகளில் நிதானத்தோடு செயல்படுவதும் வாழ்க்கைத் துணை இடத்தில் வாழ்க்கைத் துணையின் முரண்பாடான செயல்பாடுகளை சகிப்புத்தன்மையுடன் கடக்க முயல்வது அவசியம்.
வாழ்க்கையில்ஒவ்வொரு கணத்திலும் நேசத்துடன் உறவாட கற்றுக்கொள்ள வேண்டும். லக்னத்தில் கேது இருப்பதன் காரணமாக உலகியல் விருப்பங்களில் இவர்களுக்கு பெரிய அளவிற்கான விருப்பங்கள் இல்லாத நிலையிருக்கும் இதனால் இவர்களை, மற்றவர்கள் அல்லது இவருக்கு அமைந்திருக்கக் கூடிய வாழ்க்கை துணை "நீ காதல் கல்யாண வாழ்க்கை க்கு செட்டாக மாட்டே?" எனக் கேட்பது தொடரும்.
கார்மிக உறவுகள்:
ராகு 7-ம் வீட்டில் இருந்தால் கார்மிக உறவுகள் (past life karmic bond) வரும்.
எத்தனை தடவை தப்பிக்க அல்லது தவிர்க்க நினைத்தாலும், அந்த உறவுகள் இவர்களின் வாழ்வினில் இடம் பெற நேரிடும்.
தனக்கு அமைந்த வாழ்க்கை துணையிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது.
அந்த உறவுகள் பழைய ஜன்ம உறவுகளாக இருக்கும்.
உறவுகள் நீண்ட காலம் நீடிக்கும்.
இவர்கள் சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஒருவரை மற்றொரு புறக்கணித்து தனியாக வாழ முயற்சித்தாலும் வாழ்க்கையில் தனியாக வெற்றி பெற முடியாது. ஏனெனில் மற்றவர்களின் மூலமாகவும் இவர்களுக்கு ஆதரவு கிடைப்பது குறைவாகவே இருக்கும். அவ்வகையில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மீண்டும் அவசியம் தேவைப்படும். அது பெயரளவிற்கான ஆதரவாக கூட இருக்கலாம். ஆனாலும் அதுவும் தேவைப்படும்
இணைந்து வாழும் உறவுகளில் தான் வளர்ச்சி, அதுவே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் சிலர் வாழ்க்கை துணை தேடவே மாட்டார்கள். அவர்களிடத்திலும் பெரிதாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் தன்னம்பிக்கையுடன் தனியே வாழ விரும்புவார்கள்.
இவர்களுக்கு துணை தேவையில்லை என்று தானாகவே எண்ணிக்கொள்வார்கள்.
துணையின் மீது அதிகமான ஆசை, பிணைப்பு இருக்கும். ஆனால் அதே நேரத்தில் உறவில் சந்தேகம், ஆதிக்கம், உரிமை உணர்வு அதிகமாகும்.
உண்மையான நெருக்கம் இருக்க வேண்டிய இடத்தில், மனதளவில் தூரம் இருக்கும்.
அச்சத்தில், சந்தேகத்தில், அல்லது கர்ம பந்தத்தில் இந்த உறவுகள் நீடிக்கும்.
திருமண வாழ்க்கையில் இருவருக்குமான உணர்ச்சிப் புரிதல் குறைவாக இருக்கும்.
🔸 ராகு கிரகத்தின் இயல்பு
ராகு எப்போதுமே மாயை, ஆசை, எதார்த்தங்களை தாண்டி யோசிக்க வைக்கும் கிரகம்.
7-ம் வீட்டில் வந்தால், அது வாழ்க்கை துணை சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஆசை, எதிர்பார்ப்பினை உருவாக்கும்.
ஆரம்ப காலகட்டங்களில் துணை இருந்தால் தான், வாழ்க்கை பூரணமா இருக்கும் என்று எண்ண வைக்கும்.
ஆனா அவங்க தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் கஷ்டம் தரக்கூடிய உறவுகள் தான்.
இவர்களுக்கு அமையக்கூடிய வாழ்க்கை துணை பெரும்பாலும் ஒரே நேரத்தில் அன்பும், வெறுப்பும் உணர்த்தும் உறவாக இருக்கக்கூடும்.
உறவுகளில் அதிகமான நம்பிக்கை, அதே சமயம் அதிர்ச்சி, ஏமாற்றம் அடையும் நிலை.
ராகு 7-ம் வீட்டில் இருக்கும்போது, வணிகத்தில் கூட்டாளிகளுடன் பிரச்சனை, துரோகம், ஏமாற்றம் ஏற்படும். கவனம் அவசியம்
7-ம் வீட்டில் ராகு இருப்பது ஒரு ஜன்மத்திற்கான முக்கியமான கர்ம பந்தத்தை குறிக்கிறது. கடந்த ஜென்மத்தில் அதீத சுயநலம், பிறருடைய உணர்வுகளை சுக துக்கங்களை புரிந்துகொள்ளாது, தன்னுடைய இன்பங்களே முக்கியம் என்ற வாழ்ந்த காரணத்தின் காரணமாக இந்த ஜென்மத்தில் எதிர் தரப்பினர் வாயிலாக சாதகம் அற்ற பலன்களை எதிர்கொள்ள கூடும். சில நிலைகளில் ராகு ஏழாம் இடத்தில் இருக்கும் போது வாழ்க்கை துணையிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாளடைவில் உணர வைக்கும்.
உண்மையான உறவுகளுக்காக ஏங்க வைக்கும்..
7-ம் வீட்டில் ராகு இருப்பவர்கள், உறவு, திருமணம், நண்பர்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொண்டு, தன்னலத்தை விட்டு, மற்றவர்களோடு இணைந்து வாழ கற்றுக்கொள்வது தான் இந்த ஜாதக அமைப்பின் முக்கிய நோக்கம்.
சுய ஜாதகத்தில் ராகுவுக்கு கிடைத்துள்ள சுபகிரகங்களின் தொடர்பு ராவுக்கு வீடு கொடுத்த கிரகமான ஏழாம் அதிபதியின் பலம், களத்திரகாரர்கள் என்று அழைக்கப்படக்கூடிய சுக்கிரனின் பலம் இவற்றைப் பொறுத்து பலன்களில் பெரிய அளவிற்கான மாறுபாடுகளும் இருக்கலாம்.
அதாவது எதிர்மறைப் பலன்கள் குறைந்து நல்ல பலன்கள் இருக்கக்கூடும்.
சுய ஜாதகத்தில் ராகு சனி செவ்வாய் போன்ற பாபர்களின் தொடர்பினை பெற்று சரியில்லாத நிலைகளில் இருக்கக்கூடிய பட்சத்தில் ராகு காலத்தில் தொடர்ச்சியாக துர்க்கை அன்னை வழிபாட்டினை கடைபிடிப்பது நலம் தரும்.
🙏 நன்றிகள்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology
📞 Cell: 9659653138
📲 ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெற:
🔗 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
🔗 Telegram Channel: https://t.me/Astrologytamiltricks