லக்னத்துடன் சனி தொடர்பு கொண்டால் நல்லதா? கெட்டதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்னத்துடன் சனி தொடர்பு கொண்டால் நல்லதா? கெட்டதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 அக்டோபர், 2024

இலக்னத்தில் சனி இருந்தால்? இலக்னம் மற்றும் ராசியை சனி பார்த்தால்? இலக்னாதிபதியை சனி பார்த்தால்?


பொதுவாகவே லக்னத்தில் சனி இருப்பதோ, லக்னத்தை பார்ப்பதோ, லக்னாதிபதியை பார்ப்பதோ நல்லதல்ல.

ஜாதகரை  பிறரை விட கூடுதல் சுயநல எண்ணங்கள், செயல்பாடுகள் கொண்டவராக லக்னத்தில் இருக்கக்கூடிய சனி மாற்றுவார். அதீத தாழ்வு மனப்பான்மை கொண்டவராக, மந்தமான செயல்பாடுகளை கொண்டவராக ஜாதகர் இருக்கக்கூடும். #Iniyavan

 சுய ஜாதகத்தில் மூன்றாம் அதிபதி மற்றும் செவ்வாயும் பலம் குறைந்தால் எந்த ஒரு விஷயத்திற்கும் ஜாதகர் முயற்சி செய்ய மாட்டார்.முயற்சி எடுப்பதிலேயே பலவித தயக்கங்கள் குழப்பங்கள் இருக்கும். லக்னாதிபதியும் வலுவிழந்து இருந்தால் மற்றவர்களுக்கெல்லாம் முயற்சி எடுக்காமலேயே, எல்லா நல்ல விஷயங்களும் நடக்கின்றன. நாம் மட்டும் ஏன் முயற்சி எடுக்க வேண்டும்? என்ற எண்ணங்களும் இருக்கக்கூடும்.

சனி எவ்வித சுபர் தொடர்பு இன்றி லக்னத்தில் இருக்கும் பொழுது அதிகப்படியான கூச்ச சுபாவங்கள் இருக்கும்.

எந்த ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கங்கள் இருக்கும். தன்னை பற்றி குறைத்து மதிப்பிடும் தன்மை,  தங்களது புறத்தோற்றம் குறித்து கவலைப்படும் மனோபாவம் இருக்கும்.
பொதுவாகவே லக்னத்தில் சனி இருக்கும் போது தனக்கான அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கக்கூடும். 
எல்லா விஷயங்களும் காலங்கள் கடந்து தாமதத்திற்கு பின்னரே நிறைவேறும்.

சனியின் பகை வீடுகளான மேஷம் விருச்சகம், கடகம், சிம்மம் இவை லக்னமாக அமைந்து சனியின் தொடர்பு லக்னத்திற்கு  இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட பலன்கள் நிச்சயம் இருக்கும்.

இப்படிபட்ட நிலைகளில் லக்னாதிபதி வலுத்திருப்பது அல்லது லக்னத்தோடு வேறு சுப கிரக தொடர்பு இருப்பது பலன்களை ஒரளவு நல்ல படியாக மாற்றும்

சனியின் லக்னங்களில் ஜாதகர் பிறந்து, சனி லக்னத்தில் இருந்தாலும் மேற்கண்ட பலன்கள்  நிச்சயம் இருக்கும்.
சுபர் தொடர்பு இருப்பது அவசியம்.#Iniyavan

இயற்கை சுபர்களின் வீடுகள் லக்னங்களாகி, லக்னத்தோடு சனி தொடர்பு கொள்வது பெரிய பாதிப்புகளை தராது எனினும் லக்னாதிபதியுடன் சனி இணைந்திருக்கும் பொழுது  அல்லது லக்னாதிபதியை பார்க்கும் போது வேறு ஏதேனும் சுபர் தொடர்பை பெற்றிருப்பது அல்லது லக்னாதிபதிக்கு வீடு கொடுத்துவர் வலுப்பெறுவதோ அவசியமாகும்.

லக்னத்தோடு சனி தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு சுயநல எண்ணங்கள் அதிகம் இருப்பதால் பெரும்பாலும் ஜாதகர் பிறரிடத்தில் ஏமாற மாட்டார். இது ஒரு வகையில் நல்லதாகும்.

இலக்னம், இலக்னாதிபதியுடன் சனி தொடர்பு கொள்ளும் போது சுபர்களின் தொடர்பு இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகருக்கு  பொறுப்புணர்வு, எல்லா விஷயங்களிலும் நிதானம், சீரான முன்னேற்றம் போன்ற நல்ல பலன்களும் இருக்கும். இயந்திரங்கள் சார்ந்த தொழில், இயந்திரங்களை பழுது பார்த்தல் அவற்றினில் நல்ல திறமைகள் இருக்கக்கூடும்.#Iniyavan

வாழ்வியல் பரிகாரங்கள்:

வாழ்வின் எந்த ஒரு நிலையிலும் தன்னை பற்றி தாழ்வாக நினைக்காதிருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்வதை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

"எண்ணங்களே எல்லா செயல்களுக்கும் ஆதாரம்" என்பதால் எண்ணங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள முற்பட வேண்டும் .
அனுதினமும் இஷ்ட தெய்வத்தை தொடர்ச்சியாக வழிபட்டு வருவது மனதை தீய எண்ணங்களின் ஆக்கிரமிப்பின்றி வைத்திருக்க உதவும்.#Iniyavan

வாழ்க்கையில் தன்னை பற்றி அவநம்பிக்கை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்பொழுது எல்லாம் தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய புத்தகங்கள், கதைகள், வாழ்க்கையின் கீழான நிலையிலிருந்து முன்னேறிச் சென்றவர்களுடைய வாழ்க்கை வரலாறு போன்றவற்றை படித்து வருவது மீண்டும் செயலாற்றும் உணர்வினைத் தரும்.

உடல் ரீதியாக இருக்கக்கூடிய மந்தத்தன்மை போக எளிய உடற்பயிற்சிகளையாவது இடைநிறுத்தம் இன்றி தொடர்ச்சியாக செய்து வருவது அவசியம்.

தூங்கும் நேரத்திலும் ,விழிக்கும் நேரத்திலும் ஒரு ஒழுங்கினை கடைபிடித்தாக வேண்டும். நேரத்திற்கு தூங்கி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வருவதை வழக்கப்படுத்திக் கொள்வது எல்லா வகையிலும் நலம் தரும்.#Iniyavan

குடும்ப உறவுகளிடத்திலேனும்  சுயநல எண்ணங்கள் இன்றி, ஓரளவேனும் பெருந்தன்மையாக செயல்படுவது அவசியம்.  இல்லையெனில் நெருங்கிய உறவுகளிடத்திலும் உறவு சிக்கல், பிரிவினை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும்.மற்றவர்களின் உழைப்பிற்கான அங்கீகாரம், ஊதியம் இவற்றை தாமதம் இன்றி உரிய நேரத்தில் தந்து விடுவது நல்லது.

ஜாதகர் தான் மேற்கொள்கின்ற எல்லா செயலிலும் காலதாமதங்களுக்கு இடமின்றி எல்லா விஷயங்களிலும் முன் தயாரிப்புகளோடு இருப்பது தடை, தாமதங்களை தவிர்க்க உதவும்.
வழிபாடுகளை பொருத்தவரை சனிக்கிழமை தோறும் வரக்கூடிய  மகா பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது அல்லது லக்னாதிபதியின் கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லது.

ஆலயங்களை சுத்தம் செய்து வருவது, அன்னதானங்களுக்கு தன்னால் இயன்ற  பங்களிப்பைத் தருவது நல்லதாகும்.
உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக் கூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு தன்னால் இயன்ற பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருவது நல்லதாகும்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T

https://t.me/Astrologytamiltricks

https://www.facebook.com/groups/3741