புதன் வலுத்தவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன் வலுத்தவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 டிசம்பர், 2024

புதன் தரும் திறமை



ஒருவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருக்கும்போது பிறரின் உதவியின்றி தன்னுடைய சுய முயற்சி, தன்னுடைய புத்தியின் துணை கொண்டு ஜாதகர் பிழைத்துக் கொள்வார்.
எந்த ஒரு விஷயத்தையும் பிறரின் துணை இன்றி நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள் என்றாலே உங்களுடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருக்கின்றார் என்று அர்த்தம்.

ஒவ்வொரு விஷயத்திற்கும் பிறரின் உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் பிறருடைய தயவுடன் தான் உங்களுக்கான பெரும்பாலான காரியம் நடைபெற வேண்டும் என்றால் உங்களுடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். #Iniyavan

புதன் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு நல்ல பேச்சு திறன் இருக்கும். ஒரு புதிய இடத்தில், புதிய சூழலில் கூட மிக விரைவில் அறிமுகமாகி எல்லோரிடத்திலும் இயல்பான ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வார்.

புதனின் பலம் குறைந்த ஒருவருக்கு புதிய இடங்களில் தன்னை பொருத்திக் கொள்வதில் அதிக சூழ்நிலைகள் எடுக்கும்.புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கிக் கொள்வதில் புதிய மாற்றங்கள்,புதிய திட்டங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில் தயக்கங்கள் இருக்கும். அதிகப்படியான கூச்ச சுபாவங்கள் இருக்கும் #Iniyavan
ஆனால் புதன் வலுத்தவர்கள், புதிய விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில் புதிய மாற்றங்களை செயல்படுத்துவதில், புதுமையான நுட்பங்களை தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடிகள்..
சுய ஜாதக ரீதியாக எந்த பாவகத்தில் புதன் நல்ல நிலையில் இருக்கின்றாரோ அல்லது எந்த பாவகத்தை பார்க்கின்றாரோ, எந்த கிரகத்துடன் இணைந்துள்ளாரோ, அந்த பாவகம் குறிக்கக்கூடிய விஷயங்களில், குறிப்பிட்ட கிரகத்தின் காரக விஷயங்களில் ஜாதகர் திறன்பெற்றவராக இருப்பார். உதாரணமாக மூன்றாம் பாவகத்தில் புதன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு  எழுத்தாற்றல், தகவல் தொடர்பு, நுண்ணறிவு, Communication,பங்குச்சந்தை, யூக வணிகம், Technology, Computer, Mobile,  போன்ற விஷயங்களைப் பயன்படுத்துவதில் திறமைகள் இருக்கும்.. #Iniyavan
ஆறு, எட்டு, பன்னிரண்டு போன்ற மறைவு ஸ்தானங்களில் புதன் நல்ல நிலையில் இருக்கும்பொழுது ஜாதகருக்கு மறைபொருள் விஷயங்களான  ஜோதிடம் பங்குச்சந்தையில் பணம் ஈட்டல், இதோடு Software, Hardware, Hacking சார்ந்த விஷயங்களில் திறமை இருக்கும். சமூக ஊடகங்களின் துணைகொண்டு தன்னுடைய தொழிலை பிரபல்யபடுத்திக் கொள்ளுதல், அவற்றின் அவற்றின் மூலம் பணம் சம்பாரிக்க இயலும்.யாரெல்லாம் youtube, facebook, instagram போன்ற சமூக ஊடகங்களின் துணை மூலம் பெரிய அளவிற்கான வருமானத்தை ஈட்டுகின்றார்களோ, அவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருப்பதோடு யோக தசா புத்திகளும் நடப்பில் இருக்கும். புதன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு படைப்பாற்றல் திறன் சிறப்பாக இருக்கும் என்பதால் எந்த விஷயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்,ஒரு வீடியோவிற்கு எப்படி தலைப்பிட வேண்டும்(thumbnail)
எப்படி பேசினால் மக்கள் விரும்புவார்கள், எந்த content அதிக views தரும்  இவர்களுக்கு நன்றாகவே தெரியவரும்.

புதன் மறைவு ஸ்தானங்களில் நின்று வலுப்பெற்ற நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் ஜோதிடராக இருக்கக்கூடிய பட்சத்தில் அவருக்கு ஜோதிடம் சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை விட அதிக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பலன் கேட்பவர் ஆச்சரியப்படும்படி பலன் சொல்வதில் வல்லவர்கள். என்னுடைய குருநாதர், மேஷ லக்னத்தில் பிறந்த அவருக்கு புதன் ஆறாம் இடத்தில் உச்சம் பெற்று, கேதுடன் இணைந்து இருப்பார். அவரிடம் ஜாதகத்தை கொடுத்த சில நிமிடங்களில் அந்த ஜாதகரை பற்றிய பல்வேறு விஷயங்களை அருகில் இருந்து பார்த்து போல, மிகத் தெளிவாக கேட்பவர் மறுக்க முடியாதவாறு  எடுத்துரைப்பார்.
பலன் கேட்போர் எவராயினும் பிரமித்துப் போய் விடுவார்.பொதுவாகவே நல்ல நிலையிலுள்ள புதன், கேதுவுடன் இணைந்து எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு ஆராய்ச்சி திறன், புதியவற்றை கண்டுபிடித்தல் போன்ற திறன்கள் இருக்கும்.#Iniyavan
புதுமை மற்றும் இளமைக்கு காரக கிரகம் புதனே ஆகும்.ஒருவர் வயதான பின்பும் அந்த வயதிற்குரிய முதுமை தோற்றம் அவரிடத்தில் இன்றி இளமையான தோற்றத்தோடு இருக்கிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் புதன் லக்னத்தில் இருப்பார்.லக்னாதிபதியுடன் இணைந்திருப்பார்.லக்னாதிபதிக்கு திரிகோண பாவங்களில் நல்ல நிலையில் இருப்பார்.#Iniyavan

ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் கெட்டிருந்தாலும், புதன் மட்டும் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தின் வாயிலாக பிறரின் துணையின்றி சுய முயற்சியால் பிழைத்துக் கொள்வார்..
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ

https://t.me/Astrologytamiltricks