இலக்ன, ராசிக்கு 2,7 எட்டாம் இடங்களில் ராகு கேது இருப்பது தோஷமா?
பொதுவாக இலக்ன, ராசிகளுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் இடம், களத்திர ஸ்தானமான 7-ஆம் இடம் மற்றும் மாங்கல்ய,ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம் போன்றவற்றில் பாவ கிரகங்கள் இருப்பது மணவாழ்க்கையில் ஜாதகருக்கு ஏதேனும் ஒருவகையில் பிரச்சினை ஏற்படுத்த வல்லது.அந்த வகையில் ராகு கேதுக்கள் இருப்பதும் நல்லதல்ல. #Iniyavan
ராகு கேதுக்கள் நின்று விட்டாலே பாதிப்பை தருமா? என்று கேட்டால் கிடையாது. ராகு கேதுக்கள் சுபர்களின் தொடர்பினை பெற்றிருக்கிறார்களா? அல்லது அசுபர்களின் தொடர்பினை பெற்றிருக்கிறார்களா? அந்த வீட்டின் அதிபதி எப்படி இருக்கின்றார் பலமாக இருக்கின்றாரா? (அ)பலவீனமாக இருக்கின்றாரா?
ஜாதகர் எந்த அணி லக்னத்தினை சேர்ந்தவர் என்பதையும் கவனித்தாக வேண்டும். ஏனெனில் சுக்கிரன் அணி லக்னங்களுக்கு ராகு போதுமானவரை கெடுதல் செய்வதில்லை. அதேபோல் குரு அணி லக்னங்களுக்கு கேது கூடுமானவரை கெடுதல் செய்வதில்லை. #Iniyavan
ராகுவிற்கு ஏற்ற இடங்களான மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற இடங்களில் பாபர்களின் தொடர்பினை பெறாத வகையில் ராகு தீய பலன்களை செய்ய மாட்டார்.
கேதுவிற்கு ஏற்ற இடங்களான கன்னி, விருச்சிகம், கும்பம் இவற்றில் கேது இருக்கும் போது பாப கிரகங்களான சனி செவ்வாய்,பாபத்துவ, ஒளியற்ற சந்திரன் தொடர்பை பெறாத நிலையில் கேதுவும் பெரிய கெடுதல்களை செய்வதில்லை.
இலக்ன, ராசிக்கு 2, 7,8ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருந்தாலும் சுப கிரகங்களின் தொடர்பினை பெற்று இருக்கும் பொழுது கண்டிப்பாக ராகு கேதுக்கள் கெடுதல் செய்ய மாட்டார்கள்.
முதலில் பாதிப்பானது இலக்னப்படி இருக்கிறதா ராசிப்படி இருக்கிறதா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இலக்னாதிபதி 6 8 12ல் மறைந்து பகை, நீசம் பெற்று, இலக்னத்திற்கோ, இலக்னாதிபதிக்கோ எவ்வித சுபர் தொடர்பும் இல்லாதிருக்கும் போது ராசிப்படி பலன் நடக்கும்.
ராசிநாதன்தான் ஜாதகரை வழி நடத்துவார். இதுபோன்ற அமைப்புகளில் இராசிப்படியே பலன் கணிக்க வேண்டும். இலக்னப்படி பலன் கணிக்கும் என்பது பலன் தவறும். #Iniyavan
இலக்ன ராசிக்கு 2,7 எட்டாமிடங்களில் ராகு கேதுக்கள் பாதிப்பைத் தரக் கூடிய வகையில் இருந்தாலும் தசா வரும்போது மட்டுமே பாதிப்புகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும். தசா வராத பொழுது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படப் போவதில்லை.
புத்திகளில் மட்டுமே சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக இது போன்ற அமைப்புகள் திருமண தாமதத்திற்கு காரணமாக அமைகின்றன. அதே போல் இரண்டு திருமணம் (ஏழாம் அதிபதி வலுக்குறைந்து பதினொன்றாம் அதிபதி பலம் பெற்ற நிலை) அந்நிய திருமணம்,(சாதி,மதம் மாறிய திருமணங்கள்) காதல் திருமணம், காதல் திருமணத் தோல்வி போன்றவற்றிற்கும் காரணமாக அமைகின்றன. #Iniyavab
பாதிப்பினை தரக்கூடிய பட்சத்தில் இருக்கும் பொழுது ஜாதகர் தன்னுடைய ஜென்ம நட்சத்திர நாட்களில் நாகநாதசுவாமி, நாகேஸ்வரம், நாகவல்லி அம்மன், சுயம்பு தளங்கள் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லதாகும்.
அதேபோல் நாகேஸ்வரம் கொடுமுடி போன்றவையும் சிறப்பான பரிகார தலங்களாகும்.
ராகு கேதுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு காளஹஷ்தி சிறப்பான பரிகார ஸ்தலமாகும்.
ஏனெனில் இங்கு மட்டுமே தந்தை இராகு பகவானாகவும், தாய் கேது பகவானாகவும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்கள். #Iniyavan
மற்ற ஆலயங்களில் மூலவர் தனித்திருக்கும் போது இங்கு மட்டுமே அவர்களே மூலவர்களாக
காட்சியளிக்கின்றார்கள்.
இங்கு நடைபெறக்கூடிய ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்வது இராகு, கேதுக்களால் ஏற்படும் கடுமையான தோஷத்திற்கும் சிறப்பான பலன்தரும் பரிகாரமாக இருக்கும்.
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138