ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்த ஒரு உச்சம் பெற்றால் நன்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்த ஒரு உச்சம் பெற்றால் நன்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஆகஸ்ட், 2022

வீடு கொடுத்தவர் உச்சம்?

தசா நடத்தக்கூடிய ஒரு கிரகம் நன்மையைத் தருமா? அல்லது தீமையை தரும் என்று ஆராய்வதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதிகள் இருக்கின்றன. 
தசா நடத்தக்கூடிய கிரகம் அந்த லக்னத்திற்கு யார்? சுபரா அல்லது பாபரா? கேந்திரத்தில் இருக்கின்றாரா? அல்லது திரிகோணத்தில் இருக்கின்றாரா? தசா நடத்தக் கூடிய கிரகம் யாரால் பார்க்கப்படுகிறார்? சுப கிரகங்களால் பார்க்கப்படுகின்றாரா? அல்லது பாப கிரகங்களால் பார்க்கப்படுகின்றாரா? 
தசா நடத்தக்கூடிய கிரகம் நட்பு வீட்டில் இருக்கிறாரா? அல்லது பகை வீட்டில் இருக்கின்றாரா? ராசிக்கு எந்த நிலையில் இருக்கின்றார்?
தசா  நடத்தக் கூடிய கிரகம் இரு ஆதிபத்தியமுடைய கிரகமாக இருந்தால் எந்த வீட்டின் பலனை முதன்மையாக செய்வார்?  தசா நடத்தும் கிரகம் எந்த வீட்டின் வழியாக (சார நாதன்) பலன்களை தருவார்? சாரநாதன் எந்நிலையில் இருக்கின்றார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.
இவற்றைவிட முக்கியமானது தசா நடத்தும் கிரகம் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதே. அதற்கு தசா நடத்தக்கூடிய கிரகத்திற்கு வீடு கொடுத்தவர் எந்த நிலையில் இருக்கின்றார் என்பதை பார்ப்பதே.
வேத ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்தவரின் பலம் என்பது மிக முக்கியமானதாகும்.
நீங்கள் ஒருவரிடம் பண உதவி கேட்டு  செல்கின்றீர்கள் என்றால் அவர் கொடுக்கக் கூடிய நிலையில் வளமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக அவர் பலமாக இருக்கக்கூடிய பட்சத்தில் கண்டிப்பாக அவரால் உங்களுக்கு உதவ இயலும்..#Iniyavan 

அதேபோல் நீங்கள் உதவி கேட்டுச் செல்லும் நபரே பொருளாதார ரீதியாக பலம் குறைந்த நிலையில் இருக்கும் போது அவரால் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாது அல்லவா?
இதைத்தான் தசா நாதனுக்கு வீடு தந்த கிரகம் நீசம் போன்ற பலவீனமான நிலையில் இருக்கும்பொழுது, வீடு தந்த கிரகத்தின் வீட்டில் இருக்கும் கிரகத்தின் தசாவால் ஜாதகருக்கு பெரிய பலன்கள் கிடைக்காது என்று சொல்கின்றார்கள்.

இதேநிலைதான் ஜோதிடத்திற்கும்..

ஒரு கிரகம் உச்சம் பெற்று நிலையில் இருக்கும் பொழுது உச்சனுடைய வீட்டில் இருக்கக்கூடிய கிரகங்களும் வலுப்பெறும்.
ஒரு கிரகம் எவ்வளவு பலவீனமாக இருப்பினும் வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது அந்த கிரகத்தால் நம்மால் ஓரளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலும்.
அதனால்தான் வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருப்பது சிறப்பு என்று ஜோதிட கிரகந்தங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.#Iniyavan 
ஒரு கிரகம் நீச நிலையில் இருந்தாலும், வீடு கொடுத்தவன் உச்சம் பெற்றிருக்கும் பொழுது அந்த கிரகம் வலுப்பெறும். இதுவே நீசபங்க ராஜயோக விதிகளில் முதன்மையான விதி..
இதிலிருந்தே வீடு கொடுத்தவர் வலுப்பெற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை தெரிந்துகொள்ள இயலும்.
அந்த வகையில் அவருடைய ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும்பொழுது உச்சம் பெற்ற கிரகத்தின் வீடுகளில்நின்ற கிரகங்கள் வலுப்பெற்ற நிலையில் இருக்கும்.
உச்சம் பெற்ற கிரகம் இயற்கை பாப கிரகமாகவே இருந்தாலும் அந்த பாப கிரகத்தின் வீடுகளில் நின்ற கிரகங்கள் தனது தசாபுத்திகளில் தனது  காரகத்துவம் மற்றும் ஆதிபத்யங்கள் வாயிலாக பலன்களை வழங்கும்.
வீடு கொடுத்த கிரகம் வலிமை பெரும் பொழுது தசாநாதனால் சுதந்திரமாகச் செயல்பட இயலும்.#Iniyavan 
வீடு கொடுத்தவர் வலுப்பெறுவதில் லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெறுவது சிறப்பான அமைப்பாகும். 
ஏனெனில் லக்னாதிபதி என்பது ஜாதகரை குறிக்கும். அந்த வகையில் ஜாதகர் நல்ல முறையில் செயல்பட லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெறுவது சிறப்பான அமைப்பாகும்.

வீடு கொடுத்தவர் வலுப்பெறுவதில் உச்சத்திற்கு அடுத்தபடியாக ஆட்சி, வர்கோத்தமம், திக்பலம் போன்றவையும் நல்ல பலன்களைத் தரும்.

வீடு கொடுத்தவர் வலுப்பெறுவதில் அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் யார் வலுப்பெறுகின்றார்? எந்த கிரகத்தால் வலுப்பெறுகின்றார் என்பதாகும்.
தசா நடத்தக் கூடிய ஒரு கிரகம் அந்த லக்னத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு கிரகத்தின் வீட்டில் இருந்து, வீடு தந்த கிரகம் உச்சம் பெற்ற நிலையில் இருப்பதும் சிறப்பானதாகும்.

அடுத்ததாக லக்னத்திற்கு ஆகாத கிரகங்களான 6 8 12-க்கு உடையவர்கள் வலுக்குறைந்த நிலையில் இருந்து, அவருக்கு வீடு கொடுத்தவர்கள்  வலுப்பெற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல.
உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் 6-க்குடையவர் நீசம் பெற்ற நிலையில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். ஆறாம் இடம் குறிக்கக் கூடிய கடன், நோய்,வம்பு,  வழக்கு, எதிரிகள், அடிமை உத்யோகம் சார்ந்த பிரச்சனை ஜாதகருக்கு இல்லை என்பது இங்கே அர்த்தம்.
ஆனால் ஆறாம் அதிபதி வீடு கொடுத்தவர் உச்சம் பெற்று நிலையில் இருக்கும் பொழுது ஆறாம் அதிபதியின் தசாவினில் ஆறாம் இடம் கொடுக்கக் கூடிய விஷயங்களான கடன், நோய், எதிரிகள் சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு இருக்கவே செய்யும்.
இதுபோன்ற நிலைகளில் வீடு கொடுத்தவர் வலுப் பெறுவது நல்லதல்ல.#Iniyavan 
இதுபோன்ற நிலைகளில் ஆறாம் அதிபதியின் தசா காலங்கள் வராத போது அது குறித்து கவலை வேண்டியதில்லை
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/Jbup09JXYReCCX6zfYjzvV