ஒரு பாவகத்திற்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருப்பது சுப கர்த்தாரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.
எந்த பாவகம் சுப கர்த்தாரி யோக அமைப்பில் உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் நல்ல பலன்களைப் பெறுவார்.
உதாரணத்திற்கு 7ஆம் பாவகத்திற்கு இருபுறமும் சுப கிரகங்கள் இருக்கும் பொழுது ஏழாம் பாவகம் குறிக்கக்கூடிய வாழ்க்கை துணை, நண்பர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கூட்டு தொழில் போன்றவற்றில் ஜாதகர் நல்ல பலன்களைப் பெறுவார்.#Iniyavan
பொதுவாக லக்னம் மற்றும் லக்னாதிபதி இந்த யோக அபைப்பில் இருப்பது நல்ல அமைப்பாகும்.
ஏனெனில் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் நிலை என்பது ஜாதகரின் நிலை மற்றும் ஜாதகருடைய செயல்பாடுகளை சுட்டிக் காட்டக் கூடிய அமைப்பாகும்.
அந்த வகையில் லக்னம் மற்றும் லக்னாதிபதி, சுப கர்த்தாரி யோக அமைப்பில் இருக்கும்போது ஜாதகருடைய நிலை சிறப்பானதாக இருக்கும்.
ஒரு பாவகத்திற்கு இருபுறமும் சுபர்கள் இருப்பது எப்படி நன்மையை தரும் அமைப்போ, அதேபோல் ஒரு பாவகத்திற்கு இருபுறமும் பாவகிரகங்கள் இருப்பது தீமை தரக்கூடிய அமைப்பாகும்.
இதையே பாபகர்த்தாரி அவயோகம் என அழைக்கின்றோம்.
பாபகர்த்தாரி அமைப்பில் ஒரு பாவகம் (அதில் கிரகங்கள்) இருக்கும் போது அவற்றின் காரகத்துவ ஆதிபத்திய செயல்படுவதில் தடை தாமதங்கள் இருக்கும்.
உதாரணமாக 11ஆம் பாவகத்திற்கு இருபுறமும் பாபகிரகங்கள் இருக்கும்பொழுது பதினொன்றாம் பாவகம் சுட்டிக் காட்டக்கூடிய விஷயங்களான மூத்த சகோதரம், லாபம், ஜாதகரின் அபிலாசைகள் நிறைவேற்றம் ஆகியவற்றில் பிரச்சனைகள் இருக்கும்.
பாபகர்த்தாரி அமைப்பில் இருக்கும் கிரகங்கள் தனக்கு இருபுறமும் உள்ள இரு பாப கிரகங்களுடன் எந்த அளவிற்கு டிகிரி அடிப்படையில் நெருங்கி உள்ளதோ அந்த அளவிற்கு பாதிப்பு இருக்கும். இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க பாதிப்புகள் குறைவாக இருக்கும். கிரகங்கள் குறிக்கும் உயிர் காரகத்துவத்தின் நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த கிரகத்தின் சுப மற்றும் பாபகர்த்தாரி நிலையையும் பார்க்க வேண்டும்.#Iniyavan
அடுத்ததாக உயிர்காத்த விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய (மூன்றாமிடம்- இளைய சகோதரம்) (நான்காமிடம்- தாயார்) (ஐந்தாமிடம்-குழந்தைகள்) (ஏழாமிடம்- வாழ்க்கைத்துணை) (9ம் இடம் தந்தை) (11-ஆம் இடம் மூத்த சகோதரம்)
மேற்கண்ட பாவங்களின் இருபுறமும் பாவ கிரகங்கள் இருப்பது நல்லதல்ல.
பாபகர்த்தாரி அவயோக அமைப்பில் மாட்டிக்கொண்டு இருக்கின்ற கிரகத்தை மற்றொரு சுபகிரகம் பார்வையிடுவது நல்லதாகும். #Iniyavan
லக்னத்திற்கு நன்மையைச் செய்யக்கூடிய ஒரு சுப கிரகம் பாபகர்த்தாரி அவயோக அமைப்பில் இருக்கும் பொழுது யோக பங்கம் ஏற்படும். அக்கிரகத்தால் தன்னுடைய யோக பலனை முழுமையாக செய்ய இயலாது .
எந்த பாவகம் பாபகர்த்தாரி அமைப்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் சற்று எச்சரிக்கையாக இருப்பது இவற்றில் ஏற்படக்கூடிய ஏமாற்றங்கள், தடை, தாமதங்களை எதிர்கொள்ள இயலும். அதேபோல் பாபகர்த்தாரி அமைப்பில் மாட்டிக்கொண்டு இருக்கின்ற கிரகங்களின் காரகத்துவ, ஆதிபத்ய விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது ஏமாற்றங்களை தவிர்க்க உதவும்.
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f