ஜாதகருக்கு வேலைவாய்ப்பினை தரக்கூடிய ஆறாம் அதிபதி...
சுய ஜாதகத்தில் ஆறாம் இடம் 6-ஆம் அதிபதி இவற்றுடன் எந்த கிரகம் வலுப்பெற்று தொடர்பு கொண்டுள்ளதோ அந்த கிரகத்தின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழிலை மேற்கொள்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பல்வேறு உதாரணங்களின் மூலம் ஏற்கனவே விளக்கி உள்ளேன்.
அந்த வகையில் இன்று மற்றுமொரு உதாரணம் ஜாதகம்..
மீன லக்னம், மீன ராசியில் பிறந்த இந்த ஜாதகருக்கு ஆறாம் அதிபதியான சூரியன் லக்னத்தில் இருக்கின்றார்.
ஆறாம் அதிபதியான சூரியனுடன் ஐந்திற்குரிய சந்திரன் மற்றும் உச்சம் பெற்று நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன், நீசம் மற்றும் திக்பல அமைப்பில் இருக்கக்கூடிய புதன் இணைந்துள்ளார்கள்.
ஜாதகர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார். ஆனால் அவர் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் தொழில் அமைப்பு என்பது இவற்றுடன் பொருந்தாத ஒன்று. மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க காரணம் இலக்னத்திற்கு பத்தில் குருவின் வீட்டில் அமைந்துள்ள சனி, மூன்றில் அமைந்துள்ள செவ்வாயின் பார்வையைப் பெற்றதே..
ராசி லக்னத்திற்கு பத்தாம் வீட்டுடன் செவ்வாய் சனி தொடர்பு கொள்ளும்பொழுது சனி வலுப்பெறும் பட்சத்தில் ஜாதகர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட படிப்பையும், செவ்வாய் வலுப்பெறும் பட்சத்தில் ஜாதகர் சிவில் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு.
பத்தாமிடத்து தொடர்பு கொண்டுள்ள கிரகத்தின் காரகத்துவம் சம்மந்தப்பட்ட படிப்பினை படித்து இருந்தாலும் ஜாதகர் பார்க்கக்கூடிய வேலை ஆறாம் வீட்டு அதிபதி உடன் தொடர்பு கொண்ட, வலுப்பெற்ற நிலையில் இருக்கின்ற கிரகங்களின் காரகத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
ஜாதகர் சொந்தமாக உணவகம் நடத்தி வருகின்றார். இங்கே உணவகத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன் ஆகும்.
ஏனெனில் சந்திரன்தான் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம் ஆகும்.
நீர் மற்றும் உணவு பொருட்களை சுட்டிக் காட்டக்கூடிய கிரகமான சந்திரன்,மற்றொரு நீர் சார்ந்த கிரகமான சுக்கிரனுடன் இணைந்ததுடன், ஆறாம் அதிபதி சூரியனுடனும் இணைந்திருப்பதே ஜாதகர் உணவு சம்பந்தப்பட்ட தொழிலினை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் ஆகும்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் ஜாதகருடைய தந்தையும் உணவு தொடர்புடைய தொழிலையே செய்திருக்கிறார்.
அந்த வகையில் தனது தந்தையின் தொழிலையே ஜாதகர் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் சூரியன் ஆறாம் வீட்டு அதிபதியாக வருவதே.
ஏனெனில் சூரியன்தான் தந்தைக்கு காரகத்துவம் பெற்ற கிரகம்.
அதுமட்டுமின்றி
கால புருஷ லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டு அதிபதியான சுக்கிரன் தன்னுடைய இரண்டாம் வீட்டுடன் பரிவர்த்தனை பெற்ற அமைப்பில் இருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.இரண்டாம் இடம் என்பது ஒருவர் சாப்பிடக்கூடிய ஆகாரம், உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய இடமாகும்.
அடுத்து வரக்கூடிய தசாவானது சுக்கிர தசாவாக இருப்பதாலும், சுக்கிரன் நீர் ராசியில் நின்று, நீர் கிரகமான சந்திரனுடன் இணைந்துள்ளதால் ஜாதகர் நீர் சார்ந்த தொடர்புடைய தொழில்களான உணவகம், காய்கறிகள், பழம் விற்பனை இவை போன்றவற்றில் நீடித்திருப்பது ஓரளவு நல்ல வருமானத்தை தரும்.
அந்த வகையில் சுய ஜாதகத்தில் ஆறாம் இடம், ஆறாம் வீட்டு அதிபதி இவற்றுடன் எந்த கிரகம் வலுப்பெற்று தொடர்பு கொண்டுள்ளதோ அந்த கிரகத்தின் காரகத்துவம் சம்பந்தப்பட்ட தொழில்கள் தான் ஜாதகருக்கு இயல்பாகவே அமைகிறது என்பது தெளிவாகிறது...
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138