திருமணம் எப்போது நடக்கும்?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்திவை என்பன போன்ற வாசகங்களும் பழமொழிகளும் திருமணத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தி இருக்கும்.இறைவனின் அருளாலும் தங்களது முன்ஜென்ம கர்ம வினைகளின் புண்ணியங்களுக்கு ஏற்ப சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்து மகிழ்ச்சியான மணவாழ்க்கை கிடைக்கின்றது.
சிலருக்கு மற்ற எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் திருமணம் என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கின்றது.
பொதுவாக திருமணம் எப்போது நடக்கும் என்ற வினாவிற்கு ஜோதிட சாஸ்திரத்தில் விடைகளாக தரப்பட்டுள்ளவைகளாவன :-
ஒருவரின் சுய ஜாதகத்தில் மனோகாரனான சந்திர பகவான் இருக்கும் ஸ்தானத்திலிருந்து கோச்சார ரீதியாக குரு பகவான் 2 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் வரும்போது திருமணம் நடக்கும்.
இதை ஆராய்ந்து பார்த்தோமேயானால் முதலாவதாக சந்திரா லக்னத்திற்கு இரண்டில் குரு வரும்போது திருமணம் நடக்கும்.இரண்டு என்பது குடும்ப ஸ்தானம். குடும்பம் எனில் ஆண் பெண் இணைந்ததே குடும்பம். அவ்வகையில் திருமணம் அவசியமாகும் அல்லவா?
அடுத்ததாக சந்திர லக்கினத்திற்க்கு ஐந்தாவது இடத்தில் கோச்சார குரு சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடக்கும்.
ஐந்தாம் வீட்டை நாம் புத்திர பாக்கியம் என்று எடுத்துக்கொண்டு ஆராய்ந்தோமானால் முறையான புத்திர பாக்கியத்திற்கு திருமணம் என்பது அவசியம் அல்லவா?
அடுத்ததாக சந்திர லக்கினத்துக்கு ஏழாம் வீட்டிற்கு குரு வரும்பொழுது திருமணம் நடக்கும். 7ஆம் வீடு என்பது களத்திர ஸ்தானம் தானே, அவ்வகையில் அங்கு குரு பகவான் வருகை புரியும் பொழுது திருமணத்தை நடத்தி வைப்பார்.
அடுத்ததாக சந்திர லக்கினத்திற்கு ஒன்பதாம் வீடு. பொதுவாக ஒன்பதாம் வீட்டை கொண்டு ஒருவரின் தந்தையின் நிலையை ஆராய இயலும்.
அவ்வகையில் தந்தையாகும் தகுதிக்கும் திருமணம் என்பது அவசியம், ஆகவே குருபகவான் ஒன்பதாம் வீட்டிற்கு வரும்பொழுது திருமணத்தை நடத்தி வைப்பார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியாக சந்திர லக்கினத்திற்கு பதினொன்றாம் வீட்டிற்க்கு குருபகவான் வரும் போது திருமணத்தை நடத்தி வைப்பார் பொதுவாக ஒருவரின் 11ஆம் வீடு அவரின் (இளைய மனைவி, இரண்டாம் மனைவி )
இரண்டாவது திருமணத்தை குறிக்கும்.
இவை மட்டுமின்றி திருமணம் நடப்பதற்குரிய மற்ற விதிமுறைகள்
ஏழாம் அதிபதியின் திசை மற்றும் புத்திகளில் திருமணம் நடைபெறும். களத்திர காரகனான சுக்கிரன் திசை மற்றும் புத்திகளில் திருமணம் நடைபெறும்.களத்திர காரகனான சுக்கிரன் நட்சத்திர சாரத்தில் இடம்பெற்றுள்ள கிரகங்களின் திசா புத்தியில் திருமணம் நடைபெறும். 7ம் அதிபதியுடன் அமைந்துள்ள சுப கிரகங்களின் தசா மற்றும் புத்திகளிலும் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் இருக்கும் கிரகங்களின் திசா புத்தியில் திருமணம் நடைபெறும்.
குருபகவான் அல்லது சுக்கிர பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டை தொடர்பு கொள்ளும்போதும் திருமணம் நடைபெறும். குடும்பத்தினை குறிப்பிடும் இரண்டாம் வீட்டு அதிபதியுடன் தொடர்புடைய தசாபுக்திகள், அயன, போகஸ்தானதிபதியான 12ஆம் வீட்டு அதிபதியின் தசா புக்திகள் திருமணம் நடந்தேறும்.
அஷ்டவர்க்க பரல்களின் வாயிலாக ஆராய்வோமானால் இலக்னம் முதல் ஏழாம் வீடு வரை உள்ள பரல்களின் எண்ணிக்கையை 27 ஆல் வகுத்து வரும் எண்ணிற்குரிய நட்சத்திரத்தை குருபகவான் அல்லது சுக்கிர பகவான் கடக்கும்பொழுது திருமணம் நடக்கும்.
இங்கு ஆண் என்றால் சுக்கிர பகவான் கடப்பதையும், பெண் என்றால் குரு பகவான் கடப்பதையும் எடுத்துக்கொண்டே நிர்ணயித்தாக வேண்டும்.
இவை மட்டுமின்றி இன்னும் ஏராளமான விதிமுறைகள் உள்ளன.இவற்றையெல்லாம் ஆராய்ந்துதான் திருமணம் எப்போது நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள இயலும்.
மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்து திருமணம் நடக்கும் துல்லியமான காலகட்டத்தை கண்டறிவதில்தான் ஜோதிடரின் ஜோதிட நிபுணத்துவம் அடங்கியிருக்கின்றது.
நன்றியுடன்
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
CELL 9659653138