தனது வீட்டிற்கு மறையும் கிரகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனது வீட்டிற்கு மறையும் கிரகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தன்னுடைய பாவகத்திற்கு மறையக்கூடிய கிரகங்கள்

ஒரு பாவகத்திற்கு 6, 8, 12ல் மறையக் கூடிய ஒரு கிரகம் அந்த பாவகத்தின் பலனை செய்வதில் தடை தாமதங்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் செய்யாதும் போகலாம்..??
உதாரணத்திற்கு பத்தாம் வீட்டு அதிபதி அந்த பாவகத்திற்கு 6,8,12ல் மறைந்திருக்கக்கூடிய பட்சத்தில் தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதிகம் போராட வேண்டியிருக்கும்.

அதேபோல் ஆறாம் வீட்டு அதிபதி அந்த பாவத்திற்கு ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்து இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகர் தன்னை வேலையில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு அதிகம் போராட வேண்டியிருக்கும்.

ஒரு பாவகத்திற்கு 6,8,12ல் மறைந்திருக்கக்கூடிய ஒரு கிரகம் மேற்கொண்டு சுபகிரகங்கள் தொடர்பை பெறும்பொழுது பாவக பலனைச் செய்யும். ஆனால் நாட்கள் கடந்து  தாமதமாகச் செய்யும்.
அதேபோல் ஒரு பாவகத்திற்கு 6,8, 12ல் மறையக் கூடிய கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் பாவக பலன்களை தாமதமாக செய்யும்.

அடுத்ததாக ஒரு பாவகத்திற்கு 6, 8, 12ல் ஒரு கிரகம் மறைந்திருக்கும் போது அந்த கிரகத்திற்கு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது அந்த பாவக பலன்கள் தாமதத்திற்கு பிறகு நல்ல முறையில் நடந்தேறும்.

உதாரணத்திற்கு 6-க்குடையவர் அந்த பாவகத்திற்கு 6, 8, 12ல் மறைந்து. இருப்பதாக எடுத்துக்கொள்வோம் ஆறாம் இட ஆதிபத்தியங்களுள் முதன்மையானது ஜாதகர் வகிக்கக்கூடிய வேலை, அடிமை உத்தியோகம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.
ஜாதகர் அரசு உத்தியோகம் பெறுவதற்கு முயற்சிக்கிறார் என்றால் அதிகப்படியான போட்டி தேர்வுகளை எழுதியும் சொற்ப மதிப்பெண்களில் வேலையை தொடர்ந்து விட்டுக்கொண்டே இருப்பார்.
அதே நேரத்தில் ஆறாம் அதிபதிக்கு  சுபர் தொடர்பு அல்லது ஆறாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருக்கும் பொழுது பல கட்ட தோல்விகள், பல முயற்சிகளுக்குப் பின்பு ஜாதகர் பிரம்மாண்டமான ஒரு வெற்றியை பெறுவார்.
மற்றுமொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம் .
ஏழாம் வீட்டு அதிபதி அந்த பாவகத்திற்கு 6, 8, 12ல் மறைந்திருந்து ஏழாம் அதிபதி சுபர் தொடர்பு அல்லது ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் வலுப்பெற்ற நிலையில் இருந்தால் திருமணம் தாமதமாக நடக்கும்.
ஆனால் நல்ல முறையில் நடந்தேறும்.
ஒரு பாவகத்திற்கு 6, 8 ,12ல் ஒரு கிரகம் மறைந்திருந்து மேற்கொண்டு பாபர் தொடர்பினை பெற்றிருக்கும் பட்சத்திலும், வீடு கொடுத்தவர் வலுக்குறைந்து இருக்கும் பட்சத்திலும் அந்த பாவகம் சார்ந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும்..

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்...

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks