லக்ன அவயோக கிரகங்களின் தசா காலங்களை எதிர்கொள்வது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்ன அவயோக கிரகங்களின் தசா காலங்களை எதிர்கொள்வது எவ்வாறு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 அக்டோபர், 2021

6, 8 மற்றும் 12ஆம் அதிபதிகள் தரக்கூடிய தீமைகள் என்னென்ன?

6 8 மற்றும் 6 8 மற்றும் 12ஆம் அதிபதிகள் தரக்கூடிய தீமைகள்..

பொதுவாக 6, 8 மற்றும் 12ஆம் அதிபதிகள் தொடர்புடைய தசா புத்திகள்  மனிதனுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை தரக்கூடிய காலகட்டமாக அமையும். அதே நேரத்தில் 6 8 12ம் இட அதிபதிகள் சுபர் தொடர்பு பெற்றுள்ள நிலையில் பிரச்சனைகள் இல்லை.6,8, 12ம் அதிபதிகளின் தொடர்பை பெறக்கூடிய ராகு கேதுககளும் பிரச்சினைகளை செய்வார்கள் என்பதால் ராகு கேதுக்கள் 6 8 12-ம் அதிபதியின் தொடர்பினை பெறக்கூடாது.பெற்றுள்ள நிலைகளில் தொடர்புடைய தசாபுத்திகளில் கவனம் தேவை.சில நிலைகளில் எட்டில் ராகு, கேது  இருக்கும் பொழுது அஷ்டமாதிபதி வலுவிழந்த நிலையில் பாதகாதிபதி, மாராகாதிபதி  தொடர்பை பெறும்பொழுது மரணம் (அ) மரணத்திற்கு நிகரான கொடுமைகளைச் செய்வார்கள்.இலக்னாதிபதி வலுவாக இருக்கும் பொழுது ஜாதகர் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடியவராக இருப்பார். லக்னாதிபதி வலுவிழந்து நிலையில் இருக்கும்  போது ஜாதகரின் தைரியம் என்பது முற்றிலும் குறைந்து போயிருக்கும். இந்நிலையில் லக்னாதிபதியினை  பலம் கூட்ட செய்யும் வழிபாடுகளில் ஜாதகர்  தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாம் அதிபதி வம்பு,வழக்கு, நஷ்டம் சார்ந்த பிரச்சினைகளையும், ஆறாம் அதிபதி கடன், நோய், வறுமை எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், 12 ஆம் அதிபதி மிகப்பெரிய பொருட் செலவு மற்றும் சிறைவாசத்தையும் தருவதற்கு  பொறுப்பாவர்கள்.எட்டாமிடத்துடன் தொடர்பு கொண்ட கிரகங்களின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு யாரால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனை ஏற்படும் என்பதை அறிய முடியும்.சுக்கிரன் மற்றும் சந்திரன் தொடர்பு கொள்ளும்போது பெண் வர்க்கத்தால் ஜாதகருக்கு மான, அவமானங்கள், வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.சுக்கிரன் என்ற நிலையில் மனைவி வழியில் கூட இருக்கலாம்.ஏழாம் அதிபதி தொடர்பை எட்டாம் இடம் பெற்று பாபத்துவமாக அமைந்து தொடர்புடைய தசா புத்திகள் வரக்கூடிய பட்சத்தில் மனைவி மற்றும் நண்பர்கள் வழியில் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.3 மற்றும் 11ம் இட ஆதிபத்தியம் கிரகங்களின் தொடர்பை எட்டாம் இடம் பெறும் பொழுது சகோதரர்களால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். 4 மற்றும் 9ஆம் இட ஆதிபத்யம் சார்ந்த தொடர்புகளை எட்டாம் இடம் பெறும் போது பெற்றோர்களால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.ஐந்தாமிட ஆதிபத்தியம் 8-ஆம் இடத்துடன் தொடர்பை பெறும் பொழுது குழந்தைகளால் மன வேதனை, குழந்தைகளால் சொத்து சார்ந்த  வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.ராகு மற்றும் கேது அந்நியர்களால் ஏற்படக்கூடிய மனவேதனை, வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.செவ்வாய், நீச சனி மற்றும் ராகு தனக்கு ஆகாத வீடுகளில் நின்று  குரு சுக்கிரன் தொடர்புகளை பெறாத நிலையில் தசாபுத்திகள் வரும் பட்சத்தில் ஜாதகர் வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளியாக நேரிடும்.(இலக்னம்,இலக்னாதிபதியின் நிலையினை பொறுத்து)இந்த அமைப்புகளோடு 12-ஆம் இடமும் பாபத்துவமாக தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் சிறைவாசத்தை சந்திக்க நேரிடும்.லக்னாதிபதியின் பலம் மற்றும் வலுவின்மைக்கு ஏற்ப ஜாதகர் இந்த பிரச்சனைகளை சமாளிக்கக்கூடியவராக இருப்பார். 6 8 12ம் அதிபதிகள் லக்னாதிபதியை விட வலுவாக இருங்கக்கூடிய பட்சத்தில் பிரச்சனையின் வீரியம் பெரிதாக இருக்கும். இலக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் எப்பாடுபட்டாவது பிரச்சினைகளை சமாளிக்க கூடியவராக இருப்பார்.லக்னாதிபதி வலுவிழந்து இருக்கக்கூடிய பட்சத்தில் முன்கூட்டியே ஜாதகர் லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் கவனம் செலுத்துவது பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க உதவும்.நன்றி..Astrologerப.இனியவன் கார்த்திகேயன் MA B.EDCell 9659653138 அதிபதிகள் தரக்கூடிய தீமைகள்....

பொதுவாக 6, 8 மற்றும் 12ஆம் அதிபதிகள் தொடர்புடைய தசா புத்திகள்  மனிதனுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை தரக்கூடிய காலகட்டமாக அமையும். அதே நேரத்தில் 6 8 12ம் இட அதிபதிகள் சுபர் தொடர்பு பெற்றுள்ள நிலையில் பிரச்சனைகள் இல்லை.

6,8, 12ம் அதிபதிகளின் தொடர்பை பெறக்கூடிய ராகு கேதுககளும் பிரச்சினைகளை செய்வார்கள் என்பதால் ராகு கேதுக்கள் 6 8 12-ம் அதிபதியின் தொடர்பினை பெறக்கூடாது.பெற்றுள்ள நிலைகளில் தொடர்புடைய தசாபுத்திகளில் கவனம் தேவை.

சில நிலைகளில் எட்டில் ராகு, கேது  இருக்கும் பொழுது அஷ்டமாதிபதி வலுவிழந்த நிலையில் பாதகாதிபதி, மாராகாதிபதி  தொடர்பை பெறும்பொழுது மரணம் (அ) மரணத்திற்கு நிகரான கொடுமைகளைச் செய்வார்கள்.

இலக்னாதிபதி வலுவாக இருக்கும் பொழுது ஜாதகர் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடியவராக இருப்பார். லக்னாதிபதி வலுவிழந்து நிலையில் இருக்கும்  போது ஜாதகரின் தைரியம் என்பது முற்றிலும் குறைந்து போயிருக்கும். இந்நிலையில் லக்னாதிபதியினை  பலம் கூட்ட செய்யும் வழிபாடுகளில் ஜாதகர்  தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
எட்டாம் அதிபதி வம்பு,வழக்கு, நஷ்டம் சார்ந்த பிரச்சினைகளையும், ஆறாம் அதிபதி கடன், நோய், வறுமை எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், 12 ஆம் அதிபதி மிகப்பெரிய பொருட் செலவு மற்றும் சிறைவாசத்தையும் தருவதற்கு  பொறுப்பாவர்கள்.


எட்டாமிடத்துடன் தொடர்பு கொண்ட கிரகங்களின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு யாரால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனை ஏற்படும் என்பதை அறிய முடியும்.

சுக்கிரன் மற்றும் சந்திரன் தொடர்பு கொள்ளும்போது பெண் வர்க்கத்தால் ஜாதகருக்கு மான, அவமானங்கள், வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.
சுக்கிரன் என்ற நிலையில் மனைவி வழியில் கூட இருக்கலாம்.
ஏழாம் அதிபதி தொடர்பை எட்டாம் இடம் பெற்று பாபத்துவமாக அமைந்து தொடர்புடைய தசா புத்திகள் வரக்கூடிய பட்சத்தில் மனைவி மற்றும் நண்பர்கள் வழியில் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
3 மற்றும் 11ம் இட ஆதிபத்தியம் கிரகங்களின் தொடர்பை எட்டாம் இடம் பெறும் பொழுது சகோதரர்களால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
 4 மற்றும் 9ஆம் இட ஆதிபத்யம் சார்ந்த தொடர்புகளை எட்டாம் இடம் பெறும் போது பெற்றோர்களால் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஐந்தாமிட ஆதிபத்தியம் 8-ஆம் இடத்துடன் தொடர்பை பெறும் பொழுது குழந்தைகளால் மன வேதனை, குழந்தைகளால் சொத்து சார்ந்த  வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ராகு மற்றும் கேது அந்நியர்களால் ஏற்படக்கூடிய மனவேதனை, வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.

செவ்வாய், நீச சனி மற்றும் ராகு தனக்கு ஆகாத வீடுகளில் நின்று  குரு சுக்கிரன் தொடர்புகளை பெறாத நிலையில் தசாபுத்திகள் வரும் பட்சத்தில் ஜாதகர் வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளியாக நேரிடும்.(இலக்னம்,இலக்னாதிபதியின் நிலையினை பொறுத்து)
இந்த அமைப்புகளோடு 12-ஆம் இடமும் பாபத்துவமாக தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் சிறைவாசத்தை சந்திக்க நேரிடும்.

லக்னாதிபதியின் பலம் மற்றும் வலுவின்மைக்கு ஏற்ப ஜாதகர் இந்த பிரச்சனைகளை சமாளிக்கக்கூடியவராக இருப்பார். 6 8 12ம் அதிபதிகள் லக்னாதிபதியை விட வலுவாக இருங்கக்கூடிய பட்சத்தில் பிரச்சனையின் வீரியம் பெரிதாக இருக்கும். இலக்னாதிபதி வலுவாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் எப்பாடுபட்டாவது பிரச்சினைகளை சமாளிக்க கூடியவராக இருப்பார்.

லக்னாதிபதி வலுவிழந்து இருக்கக்கூடிய பட்சத்தில் முன்கூட்டியே ஜாதகர் லக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் கவனம் செலுத்துவது பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க உதவும்.

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138