நீச்ச வர்க்கோத்மம் நன்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீச்ச வர்க்கோத்மம் நன்மையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2021

நீச்ச வர்க்கோத்தமம் அடைந்த கிரகங்கள்...

நீச்ச வர்கோத்தமம் பலமா? பலவீனமா?

பொதுவாக ஒரு கிரகம் ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே கட்டத்தில் இருப்பதே வர்க்கோத்தமம் என்கின்றோம்.
வர்க்கோத்தமம் அடைந்த கிரகங்கள் ஆட்சி பலத்தை பெறுகின்றன என்பது பொதுவான விதியாகும்.

ஒரு கிரகம் நீச நிலையில் வர்க்கோத்தமம் அடைந்தாலும் சரி, பகை பெற்ற நிலையில் வர்க்கோத்தமம் அடைந்தாலும் சரி அந்த கிரகம் ஆட்சி பலத்தை பெற்று இருக்கும்.

உதாரணத்திற்கு ஒரு கிரகம் நீசம் அடைந்து, நீசபங்கம் பெறாத நிலையில் அதன் காரகத்துவங்கள் முற்றிலுமாக அந்த ஜாதகருக்கு கிடைக்காது என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக சுக்கிரன் கன்னியில் நீசம் அடைந்து எந்த நிலையிலும் நீச பங்கம் அடையாத நிலையில் சுக்கிரனின் காரகத்துவங்களான வண்டி,வாகனம், வீடு பெண் நட்பு, தாம்பத்திய சுகம் போன்றவை மறுக்கப்படும் என்பது உண்மை.
அல்லது அவற்றை அடைவதில் ஜாதகருக்கு மிகப்பெரிய போராட்டம் இருக்கும்.

ஆனால் நவாம்சத்திலும் சுக்கிரன் கன்னியில் இருக்கும் பொழுது அவர்  வர்க்கோத்தமம் அடைந்து ஆட்சி பலத்தை பெறுகின்றார். ஆகவே சுக்கிரனின் காரகத்துவங்கள் அவருக்கு கிடைக்கும்.
இருப்பினும் அவர் நீச நிலையில் வர்கோத்தமம் பெற்று உள்ளதால் ஜாதகருக்கு சுக்கிரனின் காரகத்துவங்கள் சுக்கிர திசாபுத்திகளில் தாமதத்திற்கு  பின்பே கிடைக்கும்.
இதுவே நீச வர்க்கோத்தமத்தின் பலனாகும்.

நன்றி
ப.இனியவன் கார்த்திகேயன் எம்.ஏ பி.எட்
Cell 9659653138

.