வேலை இழப்பினை தரும் தசாபுத்திகள் | பாதிப்பினை தவிர்க்க உதவும் வழிபாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை இழப்பினை தரும் தசாபுத்திகள் | பாதிப்பினை தவிர்க்க உதவும் வழிபாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 செப்டம்பர், 2022

திடீரென வேலையை இழத்தல், வேலை பார்க்கக்கூடிய இடத்தில் மேலாதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள், இடையூறுகள் ஏற்படக் காரணங்கள்:எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தசாபுத்திகள்: பாதிப்பை குறைக்க உதவும் வழிபாடுகள்

✏️ஜோதிட ரீதியாக ஒருவர் பார்க்கக்கூடிய வேலை, தொழில், வேலை பார்க்கக்கூடிய இடத்தில் ஜாதகருடைய செயல்பாடுகள், முன்னேற்றம் போன்ற விஷயங்களை பத்தாமிடம் சுட்டிக்காட்டும்.

✏️ இயற்கைப் பாபக் கிரகங்களான சனி மற்றும் செவ்வாய் லக்னத்திற்கு பத்தாம் பாவகத்துடன் ஒருசேர தொடர்பு கொண்டு தசா புத்திகள் நடத்தும்போது வேலை பார்க்கும் இடத்தில் ஜாதகருக்கு இடையூறுகள் ஏற்பட்டு வேலையை விடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். #Iniyavan 

✏️ சம்பாத்தியக்காரகன் என்று அழைக்கப்படக்கூடிய சூரிய பகவான்,  பகை தன்மை கொண்ட சனி பகவானுடன் இணைந்து பத்தாமிடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது தொடர்புடைய தசா புக்தி காலங்களில் வேலை பார்க்கக் கூடிய இடங்களில் மேலதிகாரிகளின் தொல்லைகளால்  கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வேலையை இழப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

✏️ எட்டாம் வீட்டு அதிபதி, எட்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தசாபுத்தி நடப்பதற்கு முன்னரே வேலையை விடுவதற்கான சமிக்கைகள் தோன்றும். இதுபோன்ற காலகட்டத்தில் வேலையை விடுவதற்கு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துதான் வேலையை விட வேண்டும்.
வேறோரிடத்தில் தனக்கான வேலையை உறுதி செய்து கொண்ட பின்னர் வேலையை விடுவது நல்லதாகும்.
ஏனெனில் எட்டாம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு கொண்ட தசா புத்தி காலங்களில் வேலையினை கைவிடும் போது மீண்டும் வேலை கிடைப்பதற்கு தாமதமாகும். இதுபோன்ற காலகட்டங்களில் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் பொறுமையாகவும் அதே நேரத்தில் சாதுர்யமாகவும் நடந்து கொள்வது மட்டுமே நலம் தரும். #Iniyavan

✏️ ஆறாம் வீட்டு அதிபதி, சுபர் தொடர்பின்றி ஆறாம் வீட்டுடன் தொடர்பு கொண்டு தசாபுத்தி நடத்தும்போது புகார், ஒழுங்கு நடவடிக்கைகள், சந்தேகங்கள் போன்றவற்றின் மூலமாக வேலை இழப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

✏️ ஆறாமிடம் ஒருவர் பார்க்கக்கூடிய அடிமை உத்யோகத்தினை  சுட்டிக் காட்டுவதால் ஆறாம் பாவத்திற்கு விரைய பாவமான, ஐந்தாம் பாவகத்துடன் தொடர்புடைய பாபர்களின் தசா புத்திகள் போதும் வேலையை விடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

🌺 அடுத்து வரக்கூடிய தசா புத்திகள் லக்ன ராசிக்கு யோகராக இருக்கும்பொழுது இதைவிட நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் வேலையை விடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். #Iniyavan

✏️ கோச்சார ரீதியாக அஷ்டம, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் ஜென்மச்சனி நடைபெறக்கூடிய காலகட்டங்களிலும் வேலையை இழக்க நேரிடலாம்.

✏️ இலக்னத்திற்கு 4 மற்றும் பத்தில் ராகு கேதுக்கள் நின்று, ராகு கேதுக்களுக்கு கேந்திரங்களில் இயற்கை பாபகிரகங்கள், லக்னத்திற்கு ஆகாதவர்கள் இருக்கும் பொழுதும், ராகு கேதுக்கள் 6, 8, 12-ம் அதிபதியின் பார்வையை, இணைவை பெரும் பொழுதும் வேலையை விடுவதற்கான கட்டாயங்கள் உண்டாகும்.

✏️ பிறப்பு ஜாதகத்தில் சூரியன் இருக்கக்கூடிய இடத்திற்கு, கோச்சார சனி வரக்கூடிய காலகட்டங்களிலும் வேலையை விடுவதற்கான சூழ்நிலைகள் நேரிடலாம்.

🌺 இதுபோன்ற காலகட்டங்களில் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏதும் ஏற்படாமல் நடந்துகொள்வது, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் உண்மையாக இருப்பது, பொறுமையாகவும் அதே நேரத்தில் சாதுர்யமாகவும் நடந்துகொள்வது,
எவரையும் நேரிடையாக பகைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவை மட்டுமே நல்லதாகும்.
நாம் யாரையும் நேரடியாக பகைத்துக் கொள்ளாமல் இருந்தாலும் இதுபோன்ற காலகட்டங்களில் எதிரிகள் தானாகவே உருவாக்குவார்கள்.#Iniyavan

🌺 இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுய ஜாதகத்தில் ஆறாம் அதிபதியை விட லக்னாதிபதி பலம் பெற்று நிலையில் இருக்கும் பொழுது ஜாதகர் எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளித்து தன்னை வெற்றிகரமாக நிலை நாட்டிக் கொள்வார்கள். ஆறாம் அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலவீனமாக இருக்கும் பொழுது ஜாதகர் லக்னாதிபதி பலம் பெறச் செய்யும் வழிபாடுகளில் கவனம் செலுத்துவதும், வேலை பார்க்கக்கூடிய இடத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதும், புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதும் அவசியம்.

☀️வேலை பார்க்கக் கூடிய இடத்திலும் சரி, எந்த ஒரு இடத்திலும் நமக்கு ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு அனுதினமும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டு வருதல் நல்லதாகும். 

☀️ராமாயணத்தில் ராமன் ராவணனை வெற்றி கொள்வதற்கு, அனுதினமும் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரிய பகவானை வழிபடுவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.
ஆதித்ய ஹிருதயம் மந்திரம் சொல்ல இயலாதவர்கள் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை, ஆத்மார்த்தமாக ஜெபித்து வருவதும் நலம் தரும்.#Iniyavan
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f