திருமணத்தின் போது கோட்சார விஷயங்களில் கவனிக்கப்பட வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணத்தின் போது கோட்சார விஷயங்களில் கவனிக்கப்பட வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

திருமணத்தின் போது கோட்சார விஷயங்களில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விதிகள்:- திருமணத்திற்கு குருபலம் அவசியமா?



ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் கோட்சார குரு வருகின்ற நிலையையே குருபலம் என்கின்றோம்.
கோட்சார குரு ராசிக்கு சாதகமாக அமையக்கூடிய இந்த காலகட்டங்களில் திருமணம் செய்யும் பொழுது  மண வாழ்க்கை நல்லபடியாக துவங்கும் என்பதற்காக குருபலம் உள்ள காலகட்டங்களில் திருமணத்தை நடத்துவது நல்லது சொல்லப்பட்டிருக்கிறது. #Iniyavan 
அந்த வகையில் மணமக்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்காவது குரு பலம் உள்ள காலகட்டங்களில் திருமணத்தை நடத்துவது நல்லதாகும்.

அதற்காக குருபலம் உள்ள காலங்களில் மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கிடையாது.
கோட்சார ரீதியாக குரு ராசிக்கு நல்ல இடங்களில் இருந்தும் தசா புத்திகள் ஒத்துழைக்காத காரணத்தினால் திருமணம் தள்ளிப் போகும் நிலையும் உண்டு.
குரு பலம் இருந்தாலும் இல்லாவிடினும் தசாபுத்திகள் ஒத்துழைத்தால் மட்டுமே திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியைத் தரும்.
குருபலம் இல்லாத நிலையிலும் லக்ன ராசிக்கு 2, 7, 8-ஆம் இடங்கள்  சுபர்களின் தொடர்பு பெற்று நல்ல நிலையில் இருந்து, ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கும்போது தொடர்புடைய தசாபுத்திகளில் திருமணம் நல்லபடியாகவே நடக்கும்.
திருமணத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய கோட்சார விஷயங்களை  பொறுத்த வரை மணமக்களுக்கு  ஜென்மச் சனி, அஸ்டமச் சனி இல்லாத  காலகட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். #Iniyavan
மணமக்கள் இருவருக்கும் அஷ்டம மற்றும் ஜென்ம சனி நடக்கக்கூடிய காலகட்டங்களில் திருமணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் அஷ்டம மற்றும் ஜென்மச்சனி காலகட்டங்கள் ஜாதகருக்கு மன உளைச்சலை தரக்கூடிய அமைப்பாகும்.
இருவருக்கும் கோட்சார விசயங்கள் சரியில்லாத நிலையில் இருந்து தசா புத்திகளும் நல்ல நிலையில் இல்லாத பட்சத்தில் புத்திர பாக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.
சுய ஜாதகத்தில் சனி, வலுவான  சுபர்களின் தொடர்பில் இருக்கும் பொழுது அஷ்டம மற்றும் ஜென்ம சனி காலகட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை தராது.
திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சனிக்கு அடுத்ததாக  கோட்சாரத்தில் கவனிக்கப்படவேண்டியது ஜென்ம ராசியில் ராகு, ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகு இருப்பதாகும்.
மணமக்கள் இருவருக்கும் இது போன்ற அமைப்பு இருக்கும் பொழுது கோச்சார ராகு மாறிய பின்பு திருமண முயற்சிகள் எடுக்கலாம். #Iniyavan
இருவரின் கோட்சாரமும் சரியில்லாத நிலையில் இருந்து திருமணத்திற்குப் பின்பு 6, 8 ஆம் அதிபதியின் தசா புத்திகள் பாதிப்பைத் தரக் கூடிய பட்சத்தில் இருக்கக்கூடிய நிலைகளில் மட்டுமே திருமண வாழ்க்கையில் பிரிவு உண்டாகும்.
அந்தவகையில் அடுத்ததாக மணமக்களுக்கு வரக்கூடிய தசாபுத்திகள் 6, 8-ஆம் தசாபுத்திகள் ஆக இருக்கிறதா?
அவை பாதிப்பை தரக்கூடிய வகையில் இருக்கிறதா என்பதையும் பார்த்தே முடிவு செய்தாக வேண்டும்.
நன்றி
Astro Iniyavan
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://t.me/Astrologytamiltricks