மோசமான தசாபுத்திகளில் ஜாதகர் எப்படி செயல்பட வேண்டும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோசமான தசாபுத்திகளில் ஜாதகர் எப்படி செயல்பட வேண்டும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 நவம்பர், 2021

மோஷமான தசா புத்திகளில் ஜாதகர் எப்படி செயல்பட வேண்டும்?

அவ யோக கிரகங்கள் வலுப்பெற்ற நிலையில் லக்னத்திற்கு துர் ஸ்தனங்களான 6 8 12-ஆம் பாவகங்களுடன் தொடர்பு பெற்று தசா புக்தி நடக்கும்போது ஜாதகர் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

அவயோக கிரகங்களின் தசாபுத்தி நடைபெறுவதற்கு முன்னரே எதுமாதிரியான பாதிப்பைத் தரும்?
 எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தகுந்த ஜோதிடரின் துணை கொண்டு தெரிந்துணர வேண்டும்.
அவயோக கிரகங்கள், எந்த பாவகத்துடன் அதிகமாக தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவகம் சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.
 உதாரணத்திற்கு ஆறுக்குடையவன் வலுப்பெற்ற நிலையில், ஆறாம் பாவகத்துடன் தொடர்பு பெற்று தசா புக்தி நடத்தும்போது ஆறாம் பாவகம் குறிக்கக் கூடிய விஷயங்களான  நோய், உடல் ரீதியான பாதிப்புகள், ஆரோக்கிய குறைபாடுகள் அதன் மூலம் ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகள், எதிரிகள் தொல்லை, வேலை பார்க்கும் இடத்தில் தகுதிக் குறைவு, சம்பளம் குறைவு, உறவுகள் பகையாதல் என்பன போன்ற  பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் மேற்கண்ட விஷயங்களில் ஜாதகர் தன்னளவிற்கு எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்..
இதேபோன்று 8 க்கு உரியவர் வலுப்பெற்ற நிலையில் எட்டாம் பாவகத் தொடர்பு கொண்டு தசாபுக்தி நடக்கும் பொழுது ஜாதகர் வம்பு வழக்கு சார்ந்த பிரச்சினைகள், ஆயுள் ரீதியான கண்டம், நஷ்டம் அவமானங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
எட்டாம் அதிபதி எந்த வீட்டில் நின்று தசாபுத்தி நடத்துகின்றரோ  அந்த பாவம் சார்ந்த வழிகளில் ஜாதகருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.
உதாரணத்திற்கு எட்டாம் அதிபதி, இரண்டில் நின்று தசா புக்தி நடத்துகம் போது இரண்டாம் பாவகம் குறிக்கக்கூடிய  விஷயங்களான தனம், குடும்பம், வாக்கு, ஜாதகருடைய  முறையற்ற பேச்சு இவற்றால் பிரச்சனைகள் வரலாம்.
எட்டாம் அதிபதி இரண்டில் நிற்கும் போது தன்னுடைய ஏழாம் பார்வையால் எட்டாம் வீட்டையை பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகரின் முறையற்ற பேச்சு, ஆணவமான செயல்பாடுகளால் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் மூலம் வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகலாம் அதன் மூலமே ஜாதகரின் தனம், அதாவது பணவரவு பாதிக்கப்படும். பண வரவு பாதிக்கப்படும்போது குடும்பமே பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு.
 இந்த பாதிப்புகள் எல்லாமே இரண்டாம் இடம் குறிக்கக்கூடிய  விஷயங்களான தனம், வாக்கு குடும்பம், இவற்றுடன் தொடர்புடையது என்பது கவனிக்கத்தக்கது. அட்டமாதிபதி இரண்டில் நிற்கும் போது இதுபோன்ற பாதிப்புகளை ஜாதகருக்கு உண்டாக்குவார்.
இதுபோன்று ஏற்படக்கூடிய பாதிப்புகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தகுந்த ஜோதிடரின் துணை கொண்டு அதற்கேற்பச் செயல்படுதல் பாதிப்பினை ஒரளவேணும் குறைக்க உதவும்.

சுய ஜாதகத்தில் எந்த பாவகம் பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த பாவகம் சார்ந்த பிரச்சினைகள், பாதிப்புகள்,  அவயோக கிரகங்களின் தசா புத்திகளில் அதீதமாக  வெளிப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.
பொதுவாகவே அவயோக கிரகங்களின் தசா புத்தி நடைபெறும்பொழுது, ஜாதகருடைய லக்னாதிபதி வலுவாக இருக்க கூடிய பட்சத்தில் ஜாதகர் கண்டிப்பாக பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்து விடுவார்.
அதே நேரத்தில் லக்னாதிபதி பலம் இழந்து இருக்கக்கூடிய பட்சத்தில் ஜாதகருக்கு பிரச்சனையின் பாதிப்பு பெரியதாக தெரியும்.
எப்படி சமாளிப்பதென்ற சூழ்நிலை உருவாகும் இது போன்ற தருணங்களில் லக்னாதிபதியினை பலம் கூட்ட செய்யக்கூடிய வழிபாடுகளில் ஜாதகர் கவனம் செலுத்த வேண்டும்.
அவ யோகங்களின் பாதிப்புகள் குறைவதற்கு அந்த கிரகங்களுக்குரிய பிரீதி முறைகளை செய்து வருதல் நல்லதாகும்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகர் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, மேற்கண்ட பாதிப்புகள், ஜாதகர் தான் செய்த கர்மாவின் அடிப்படையில் நடைபெறுவதால், தசா புத்தி மாறும் பொழுது இவை அனைத்தும் சரியாகும் என்ற 
தன்னம்பிக்கையோடும்,
இறை நம்பிக்கையோடும் செயல்படுவதல் நல்லதாகும்...

மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும்...
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்..
நமக்கான நாள் வரும்...

நன்றி...
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன்...MA.B.Ed
Cell 9659653138