தன பாவகத்தில் செவ்வாய் நின்று சுபர்களின் தொடர்பினைப் பெற்றால்.. (அ) ஆறு, பத்தாம் பாவகங்களுடன் செவ்வாய் தொடர்பு...
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் இரண்டாம் இடத்தில் (தனபாவகத்தில்) இருந்து சுப கிரகங்களின் தொடர்பு கிடைக்கும் பட்சத்தில்அந்த ஜாதகருக்கு பின்வரும் துறைகளில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது:
இந்த நிலை இலக்னத்திற்கு இரண்டு மட்டுமின்றி, இலக்னாதிபதிக்கு இரண்டில் செவ்வாய் நின்று சுபகிரகங்களின் தொடர்பில் இருந்தாலும் பொருந்தும்.
1. நிலம், கட்டிடங்கள், சொத்து தொடர்பான தொழில்
செவ்வாய் பூமி மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடையது.
ரியல் எஸ்டேட், வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்கள் வாங்கி விற்பனை செய்வது போன்றவை. நிலம் சார்ந்த தொழில்கள் அனைத்தும் பொருந்தும்...
2. காவல்துறை, பாதுகாப்புத் துறைகள்,
செவ்வாய் வீரத்திற்கு காரக கிரகம்; போலீஸ், ராணுவம், பாதுகாப்பு சேவைகள், மருத்துவம் போன்ற துறைகளில் வாய்ப்பு கிடைக்கும்., சண்டை பயிற்சி, தற்காப்பு பயிற்சி நிலையங்கள் தொடர்பானவை
3. பொறியியல், தொழில்நுட்பம்
மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் என எந்த இன்ஜினியரிங் துறையும் செவ்வாயால் பலம் பெறும்.
தொழில்நுட்பம், மெஷின்கள், மெக்கானிக்கல் தொடர்பான தொழில்கள்.
4. விளையாட்டு, உடற்கல்வி, யோகம்
செவ்வாய் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை குறிக்கிறது.
விளையாட்டு வீரர், உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகா ஆசிரியர் ஆகிய துறைகள் லாபகரமானவை.
5. மருத்துவத் துறை, அறுவை சிகிச்சை
செவ்வாய் இரத்தத்தை, அறுவை சிகிச்சையை குறிக்கிறது.
மருத்துவர் (சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை), ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்றவை.
6. எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், ஆயுதங்கள்
செவ்வாய் இயந்திரங்கள், ஆயுதங்கள், தொழில்துறை உற்பத்தி போன்றவற்றை குறிக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயுத உற்பத்தி, மெஷின்கள் உற்பத்தி, எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை.
7. செவ்வாய் நெருப்பிற்கு கரகம் கிரகம் என்பதால் நெருப்பு தொடர்புடைய தொழில்களும் இதில் அடங்கும்..
வேகமான உணவு (Hot Foods) & சமையல் தொடர்பான தொழில்கள்
ஹோட்டல், உணவகம், சமையல் காரகர்கள்
பேக்கரி, சாஸ், மசாலா பொருட்கள் உற்பத்தி
8.ரசாயனங்கள் மற்றும் மருந்துகள்
ரசாயன தொழில் (Chemical Industry)
பிளாஸ்டிக், வண்ணச்சாயம், பெயிண்ட் உற்பத்தி
மருந்துகள், ஆயுர்வேத தயாரிப்பு (அதிக சூடான மருந்துகள்)
(ஒருவருடைய வேலையை குறிப்பிடக்கூடிய ஆறாம் பாவகத்துடனும், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிப்பிடக்கூடிய பத்தாம் பாவகத்துடன் செவ்வாய் சுப கிரகங்களின் தொடர்பை பெற்று தொடர்பு கொண்டாலும் இது பொருந்தும்)
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT
https://t.me/Astrologytamiltricks