✏️ இராசிச் சக்கரத்தில் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குச் செல்ல இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு கிரகம் சனி பகவான்.
✏️ நவக்கிரக நாயகனான சூரியனை சுற்றி வருவதற்கும் 29.4 வருட கால கட்டத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு கிரகம். அதாவது சனி பகவான்,சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு கிட்டத்தட்ட 10,756 நாட்களை எடுத்துக்கொள்வார். #Iniyavan
✏️ இராசிச் சக்கரத்தை முழுமையாக கடப்பதற்கு 30 வருடங்களை எடுத்துக் கொள்வார். எல்லா விஷயங்களிலும் தாமதமாக இருப்பதால்தான் சனி பகவானை முடவன் என்றும் மந்தன் என்றும் அழைக்கின்றோம்.
✏️ சனியின் முக்கிய காரகத்துவமே எந்த ஒரு விஷயத்தையும் தாமதப்படுத்துவதுதான். சுய ஜாதகத்தில் சனி நின்ற பாவகத்திலும், சனியுடன் இணைந்த, பார்க்கப்பட்ட கிரகங்களின் காரக விஷயங்களிலும், பார்க்கப்பட்ட பாவக விஷயங்களிலும் ஜாதகர் தடை, தாமதங்களைச் சந்திப்பார்.
சுய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதியுடன், ராசியுடன் சனி தொடர்பு கொள்ளும்பொழுது ஜாதகருக்கு அதிகப்படியான தடை, தாமதங்கள், எல்லா விஷயங்களிலும் காரியத்தடைகள் இருக்கும். வாழ்கையின் முன்னேற்றத்திற்காக ஜாதகர் எடுத்து வைக்கக்கூடிய எல்லா விஷயங்களும் ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றத் தடையை சனி ஏற்படுத்துவார்.#Iniyavan
✏️ வலுப்பெற்ற சுபகிரகங்களின் தொடர்பு சனி பகவானுக்கு இருக்கும்பொழுது சனியால் பெரிய தடை தாமதங்களை ஜாதகருக்கு தர முடியாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
✏️ திரிகோண பாவங்களான ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்களில் இருக்கும் பொழுதும் ஜாதகரின் அதிர்ஷ்ட அமைப்புகளைக் கெடுக்கவே செய்வார்.
இதிலும் சனி ஆட்சி, உச்சமாக இருந்து எவ்வித சுபர் தொடர்புமின்றி இருக்கும்பொழுது சனியால் பார்க்கக்கூடிய இடங்கள் குறிக்கக்கூடிய விஷயங்களில் ஜாதகருக்கு அதிகப்படியான தடை, தாமதங்கள் இன்னல்கள் இருக்கும்.
🌺 சனிபகவானால் அதிகப்படியான தடை, தாமதங்களை சந்திப்பவர்கள் சனிபகவானின் குருவாக கருதப்படக்கூடிய கால பைரவர் வழிபாட்டை அனுதினமும் அதிகாலையில் வழக்கப்படுத்திக் கொள்வது நல்லதாகும்.#Iniyavan
தொடர்ச்சியான பைரவர் வழிபாட்டினை ஆத்மார்த்தமாக பின்பற்றுவதன் வாயிலாக வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னேற்ற தடைகள் படிப்படியாக விலகுவதை ஜாதகரால் நிச்சயம் உணர இயலும்.#Iniyavan
🌺 முழுமுதற்கடவுள் என்ற அழைக்கப்படக்கூடிய விநாயகப் பெருமானைப் போற்றி
காஷ்யப மகரிஷியால் வடமொழியில் எழுதப்பட்டு கச்சியப்ப முனிவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காரியசித்தி மாலையை அனுதினமும் சொல்லி வருவது அல்லது கேட்டு வருவது காரியத் தடைகளைப் போக்கி
காரிய சித்தியினைத் தரும்.#Iniyavan
🌺 கோச்சார ரீதியாகவும் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை மாசி மற்றும் ஆவணி மாத கால கட்டங்களில் வரக்கூடிய மகா சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினில் கலந்து கொள்வதும் நிச்சயம் சிறப்பு தரும்.
விநாயகருக்குரிய சங்கடஹரசதுர்த்தி வழிபாட்டை கடைப்பிடித்துதான் செவ்வாய் நவக்கிரக அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
🌺 மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பொழுது வாழ்வில் ஏற்படக்கூடிய சங்கடங்கள் படிப்படியாக விலகும்.
🌺 சனிக்கிழமைகளில் வரக்கூடிய
மகா பிரதோஷ வழிபாடுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்வதும், சனி பகவானால் ஏற்படக்கூடிய தடை தாமதங்களை படிப்படியாகக் குறைக்கும்.
🌺 ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ வழிபாடுகளை ஆத்மார்த்தமாக கடைபிடிப்பதும் தடைகளைத் தகர்க்கும்.#Iniyavan
🌺 வாழ்வியல் பரிகாரங்களைப் பொருத்தவரை அனுதினமும் காகத்திற்கு மறவாமல் சாதம் வைப்பதும், சனிபகவானின் குரு என்று அழைக்கப்படக்கூடிய கால பைரவரின் வாகனமான (தெரு) நாய்களுக்கு உணவளிப்பதும் நல்லதாகும்.#Iniyavan
🌺 கடினமான உடல் உழைப்பு மட்டுமே நம்பி பிழைக்ககூடியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலையாட்கள், கீழ்நிலை பணியாளர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்து வருவதும், அவர்களை மரியாதையாகவும் கனிவுடனும் நடத்துவதும் அவசியமாகும்.#Iniyavan
மேற்கண்ட இறை வழிபாடுகளை ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பலனை எதிர்பார்ப்பது சரியல்ல. வழிபாடுகளை ஆத்மார்த்தமாக ஒரு மண்டலமாவது (48 நாட்கள்) கடைப்பிடிக்கும் போது மட்டுமே வழிபாட்டின் பலனை முழுமையாக உணர இயலும். வழிபாட்டினை பின்பற்றும் காலகட்டத்தில் அசைவம் தவிர்ப்பது நல்லது. வழிபடும் நாட்களில் அசைவத்தை தவிர்க்கும் போது இறைவன் நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறார் என்ற உணர்வினை நிச்சயம் தரும். #Iniyavan
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed,
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f
https://www.facebook.com/groups/374176721571838/?ref=share