அஷ்டமச்சனி மற்றும் ஜென்மச் சனி காலகட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்டமச்சனி மற்றும் ஜென்மச் சனி காலகட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2022

அஷ்டம மற்றும் ஜென்மச்சனி காலகட்டங்களில் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

கடகம் மற்றும் கும்ப ராசிக்கு வரக்கூடிய ஜனவரி மாதத்திலிருந்து அஷ்டம மற்றும் ஜென்மச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. சனி பகவானைப் பொறுத்தவரையில் பெயர்ச்சிக்கு இரண்டொரு மாதங்களுக்கு முன்பு இருந்தே பலன்களை தர ஆரம்பித்துவிடுவார் என்பதால் எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான பதிவு. #Iniyavan 

✏️ முதலில் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு சனி பகவானே ராசிநாதனாக இருப்பதால் குறைவாகவே தீய பலன்களைத் தருவார் என்பதை முற்றாக தவிர்த்து விடுங்கள்.

✏️ சுய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி, ராசி, சனி பகவான் சுபர்களின் தொடர்பில் இருக்கும் போது மட்டுமே அஷ்டம மற்றும் ஜென்மச் சனியின் தாக்கங்கள் பெரிய அளவில் பாதிப்பை தராது. எல்லோருக்கும் இது போன்ற அமைப்பு இருப்பதில்லை. அரிதாக காணப்படும் இது போன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பாதிப்புகள் இருக்காது.#Iniyavan

✏️ மற்றபடி ஜென்மச்சனி நடப்பவர்களுக்கு வயதிற்கேற்ற பாதிப்புகள் இருக்கவே செய்யும். ராசியில் இருக்கக்கூடிய சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் தடை தாமதங்கள் இருக்கவே செய்யும். முடிந்தவரை  நீங்கள் செய்யும் புதிய விஷயங்களில் கவனமாக இருங்கள்.#Iniyavan

✏️ எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். அலுத்துக் கொள்ளாதீர்கள். இது இத்தருணத்தில் இயல்புதான் என்று கடந்து செல்லுங்கள்.#Iniyavan

✏️ ஏழாம் பார்வையால் ராசிக்கு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் எதிர்த் தரப்பில் உள்ள எல்லோரிடமும் கவனத்துடன் செயல்படுங்கள். 
உங்களைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களிடத்திலும் பழகும் போது சகிப்புத்தன்மை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.குறிப்பாக வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாக்கு வாதம் மற்றும் தர்க்கத்தில் ஈடுபட வேண்டாம்.

✏️ எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதே நேரத்தில் எவரிடமும் அளவுக்கு அதிகமாக நட்பும் பாராட்ட வேண்டாம். முடிவினில் அந்த நட்பு உங்களுக்கு ஏமாற்றம் தரக் கூடியதாகவே இருக்கும்.
இளைஞர்கள் இளைஞிகள் காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருங்கள். இக்காலகட்டத்தில் துளிர்விடக் கூடிய காதல் பெரும்பாலும் வெற்றியை தருவதில்லை.

✏️ இன்று நீதான் என்னுடைய உயிர்,உலகம் என்று சொல்பவர்கள் நாளை உங்களை வேண்டாம் என்றும் சொல்வார்கள். நம்ப வேண்டாம்.

✏️ பத்தாம் பார்வையால் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள், அங்கீகாரம் இன்மை, குறைவான ஊதியம், சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இயல்பு என்பதால்  உயராதிகளுடன் எக்காரணத்தைக் கொண்டும் வீரவசனம் பேச வேண்டாம்.
உயரதிகாரிகள் உங்களுக்கு எதிராகவே செயல்பட்டாலும் முடிந்தவரை நிதானத்தையும் பொறுமையும் கடைபிடியுங்கள்.#Iniyavan

✍️  வேலை பார்க்கக் கூடிய இடங்களில் தேவையற்ற  பேச்சுக்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நெருங்கிய நண்பராகவே இருந்தாலும் மேலதிகாரிகளை பற்றி எவரிடமும் குறை கூறாதீர்கள். நாளை நண்பனும் எதிரியாகலாம்.#Iniyavan

✍️ எக்காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டு விடாதீர்கள். ஏனெனில் இக்காலகட்டத்தில் வேலையை விட்டுவிட்டால்  மீண்டும் நல்லவேளை கிடைப்பது அபூர்வம். எதையும் சகித்துக் கொண்டு கடக்கப் பழகுங்கள்.

✍️ பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். போதுமானவரை ஆடம்பர விரயச் செலவுகளை குறைத்துக் கொண்டு பணத்தை சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்துங்கள்.#Iniyavan

✍️ யாருக்கும் பெரிய தொகையை கடனாக கொடுத்து விட வேண்டாம். மீண்டும் பணம் வருவது சிரமம். அதேபோல் எவரிடமும் பெரிய தொகையையும் கடனாக பெற்று விடவும் வேண்டாம். இரண்டுமே தாங்கமுடியாத மன அழுத்தத்தினை தரும்.
அத்தியாவசிய தேவைகள் இன்றி ஆடம்பர தேவைகளுக்காக கடன் வாங்காதீர்கள்.#Iniyavan

✍️ இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து புதிய தொழில் தொடங்க போகிறேன் என்று எக்காரணத்தைக் கொண்டும் இறங்கி விடாதீர்கள்.பங்குச் சந்தை, சூதாட்டம் போன்ற விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள்.
முடிந்தவரை புதிய தொழில் நடவடிக்கைகளை ஒத்திப்போடுங்கள். காலம் கனியும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் புதிதாக அறிமுகமாகுபவர்களை  நம்பிவிட வேண்டாம்.#Iniyavan

✍️ நான் உனக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று பெரிய வாக்குறுதிகளை  எவரிடமும் கொடுத்து விட வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உண்டாக வாய்ப்பு உண்டு. வாக்கு கொடுத்துவிட்டு பின்பு நிறைவேற்ற முடியாமல் போனதற்காக உங்களுடைய பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளும் படியான சூழ்நிலையை உருவாக்கி கொள்ளாதீர்கள்.

✏️ போதை வஸ்துகளுக்கு அடிமையாகி உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
சின்ன சின்ன விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். சிறு சிறு உடல் நலப் பாதிப்புகளையும் கவனமாக பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நல பாதிப்புகள் மற்றும் நோயை பெரிய அளவிற்கு வளர விடாதீர்கள்.ரத்த உறவுகளின் ஆரோக்கியத்திலும் அதிக கவனத்துடன் செயல்படுங்கள்.#Iniyavan

✏️ பெற்றோர்கள் தங்களுடைய வயது வந்த குழந்தைகளுக்கு அஷ்டம மற்றும் ஜென்மச் சனி நடைபெற்றால் அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களிலும் நட்புகளையும் கவனியுங்கள். நெறி பிறழ்வதற்கான வாய்ப்புகளை அஷ்டம மற்றும் ஜென்மச்சனி காலகட்டங்கள் உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

✏️ உங்களின் ஜாதக ரீதியாக தசா புத்தி நடக்கக் கூடிய கிரகங்களின் ஆதிபத்திய, காரகத்துவ விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
ராசிக்கு சனி வருவதால் உங்கள் செயல்பாடுகளில் அதிகப்படியான மந்தத் தன்மைகள் அதிகமிருக்கும்.#Iniyavan

🌺 அனுதினமும் அதிகாலையில் கண் விழியுங்கள். நேரத்திற்கு தூங்குங்கள். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

🌺 தோல்விகள் மற்றும் தடைகளால் துவண்டு போகதீர்கள்.முடிந்தவரை மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 
முடிந்தவரை எல்லா விஷயங்களிலும் முழு விழிப்புணர்வோடு செயலாற்றுங்கள். 
🌺  அனுதினமும் அதிகாலை வேளைதனில் இறைவழிபாடுகளில் கவனம் செலுத்துங்கள்.#Iniyavan

🌺  கடினமான உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக்கூடியவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளைச் செய்து வாருங்கள். அனுதினமும் காக்கைக்கு சாதம் வையுங்கள்.
சனிக்கிழமை தோறும் (கருப்பு நிற) பசுக்களுக்கு கீரை வாங்கித் தாருங்கள்.

🌺 சனிக்கிழமை தோறும் மாலை வேளை தன்னில் சிவலாயம் சென்று திருஞானசம்பந்தர் எழுதிய பச்சைப் பதிகம்தனை  சிவபெருமான் முன்பு மனம் ஒன்றிய நிலையில் ஜெபித்து இரண்டு நெய் தீபம் ஏற்றி வாருங்கள். #Iniyavan
பெரிய பாதிப்புகளின்றி வெற்றிகரமாக
கடப்பீர்கள்.💐💐
நன்றிகள்..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f

https://www.facebook.com/groups/374176721571838/?ref=share