என்ன குழந்தை பிறக்கும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன குழந்தை பிறக்கும்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?

வர இருக்கும் வாரிசு ஆணா? பெண்ணா?

சில தம்பதியினர் கர்ப்ப காலத்தின்போது பிறக்கவிருக்கும் தங்களது குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறியும் பொருட்டு ஜோதிடரை அணுகுவது வழக்கம்.
 இருவருக்கும் நடந்து கொண்டிருக்கும் தசாபுக்தியை வைத்தும், குறிப்பாக ஆணுக்கு நடந்துகொண்டிருக்க தசா புத்தியை வைத்து பாலினத்திற்கான விடையை அறிந்து கொள்ள இயலும். இதற்கு அடிப்படை விஷயங்கள் கிரகங்கள் மற்றும் இராசிகளின் ஆண், பெண் இயல்புகள் ஆகும்.

குரு, சூரியன்,  செவ்வாய்
பரிபூரண ஆண் கிரகங்களாகவும் சுக்கிரன் மற்றும் சந்திரன் பெண்தன்மை கொண்ட கிரகங்களாகவும் செயல்படும்.
சனி, புதன் மற்றும் நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள் அலித்தன்மை உடையவை. அலித்தன்மை கொண்ட கிரகங்கள் ஆண் ராசியில் இருக்கும் போது ஆண் தன்மையுடனும், பெண் இராசிகளில் இருக்கும் போது பெண் தன்மையுடனும் செயல்படக்கூடியவை.
இராசிகளின் ஆண், பெண் பிரிவுகளைப் பொருத்தவரை மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், கும்பம் போன்றவை ஆண் ராசிகள் ஆகும்.
ரிஷபம்,கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மீனம், போன்றவை  செயல்படும் பெண் இராசிகளாகும்.

இவை மட்டுமின்றி அடுத்ததாக எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கிரகங்கள் பலம் பெறும் என்பதை அறிந்து இருப்பதும் அவசியமான ஒன்றாகும்.

வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு இயற்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன்,வளர்பிறை சந்திரன் போன்றவர்  ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை பலம் பெற்று நன்மை செய்வார்கள்.
தேய்பிறையில் பிறந்ததற்கு இயற்கை அசுபர்களான சனி, செவ்வாய்,ராகு,கேது, தேய்பிறை சந்திரன் போன்றவர்கள் தை முதல் ஆனி வரை பலம் பெற்று நன்மை செய்வார்கள்.

நடந்து கொண்டிருக்கின்ற தசா புக்தியின் அடிப்படையில்  ஆண் ராசிகளில் நின்ற  ஆண் கிரகங்களின் தசாபுத்தி நடக்கின்றதா? அல்லது பெண் ராசிகளில் நின்ற  பெண் கிரகங்களின் தசாபுத்தி நடக்கின்றதா?
அலித்தன்மை கொண்ட கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் அவை ஆண் ராசிகளில் பலம் பெற்றுள்ளதா? அல்லது பெண் இராசிகளில் பலம் பெற்று உள்ளதா? என்பன போன்ற விஷயங்களுடன் இருவருக்குமான ஐந்தாம் பாவகத்தின் வலிமை மற்றும் 
வளர்பிறை, தேய்பிறையின் அடிப்படையில் இயற்கை சுபர்கள் பலம் பெற்றுள்ளார்களா? (அ) இயற்கை பாபர்கள் பல பெற்றுள்ளார்களா என்பன போன்ற விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்தே பதிலளிக்க இயலும்.

ஆண் ராசிகளில் ஆண் கிரகம் நின்று தசாபுக்தி நடத்தும்  காலத்தில் பிறக்கும் குழந்தை, பெண் குழந்தை என்றாலும் அந்த குழந்தையிடம் ஆண் தன்மை மிகுதியாக காணப்படும்.
இதேபோல் பெண் ராசிகளில் பெண் கிரகங்கள் நின்று  தசாபுக்தி நடத்தும் காலத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை என்றாலும் அந்த குழந்தையிடம் பெண்தன்மை மிகுந்து காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138