இயல்பிலேயே எல்லா விஷயங்களிலும் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். தைரியசாலிகள், எதையும் துணிந்து செய்வார்கள். வாழ்க்கையை முழுமையான சுதந்திரத்துடன் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வாழ வேண்டும் என விரும்புவார்கள்.எல்லோரையும் போலின்றி தனித்து செயல்படுபவர்கள். தான் சார்ந்த சமுதாயத்தில் தான் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.
அவர்களுடைய செயல்பாடுகளும் அதை நோக்கியே இருக்கும். #Iniyavan
சுதந்திரமான செயல்பாடுகள், சுயநல எண்ணங்கள் சற்று அதிகம் இருக்கும். தர்க்கம் புரிவதில் வல்லவர்கள். எதிலுமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். பிறருடைய கஷ்டங்கள் நஷ்டங்களை பொருட்படுத்தாதவர்கள். தனது காரியத்தினை நிறைவேற்றுவதில் கருத்தாக இருப்பார்கள்..
பெரிய தலை, அகலமான முகம், பற்களில் வித்தியாசம்,(இடைவெளி அதிகம்)
சற்று நீண்ட உடலாக கொண்டவர்களாக இருக்கலாம்.
பூர்விகத்திலிருந்து மாறியிருப்பார்கள். மாறிய பின்பு, முந்தய சூழ்நிலையினை விட முன்னேற்றம் இருந்திருக்கும். படிக்கக் கூடிய வயதில் நான்கைந்து, பள்ளிகள் மாறியிருப்பார்கள்.படிக்கும் வயதில் கல்வி சார்ந்த தடைகள், பல பள்ளிகளில் படிப்பு, சொந்தம், தாத்தா பாட்டி இவர்களின் வீடுகளில் இருந்து கல்வி பயில்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.பெற்றோரைப் பிரிந்து ஹாஸ்டலில் இருந்து கல்வி பெறுவதற்கான சூழ்நிலையும் உருவாக்கும். #Iniyavan
அசைவ உணவுகளில் நாட்டம் அதிகம் இருக்கும்.பலதரப்பட்ட உணவு வகைகளில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கலாம்.
மிகவும் தாமதமாக தூங்கச் சென்று மிகத் தாமதமாக எழுபவர்கள்.இரவு நேரத்தில் சிந்தனைகள் அதிகம். இரவு நேரத்தில் விழித்திருந்து வேலை செய்வதையே விரும்புவார்கள்.பெரும்பாலும் இந்த நிலை பகலில் தூங்கி இரவில் வேலை செய்யக்கூடிய அமைப்பைத் தரும்.
வாழ்க்கையில் மிக விரைவில் குறுக்குவழிகளிலாவது முன்னேறிவிட வேண்டும் என என்ற கூடியவர்கள், பங்குச்சந்தை, சூதாட்டம், லாட்டரி போன்ற விஷயங்களில் விருப்பமுள்ளவர்கள். ராகு நல்ல நிலையில் இருந்தால் விரைவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திக்கும் அமைப்பு உண்டு. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களில் நாட்டமிருக்கலாம்.#Iniyavan
சுபர் தொடர்பில் ராகு இருக்கும்போது பிற மொழிகள் கற்றுக் கொள்வதில் விருப்பம் இருக்கும். அந்நிய தேசத்தில் சென்று தொழில் செய்வதில் விருப்பங்கள் இருக்கும். மாற்று மதம், மாற்று இனம், ஜாதி போன்றவற்றில் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. திருமணம் முயற்சியில் இவர்களின் சொந்த விருப்பங்கள் அதிகம் இருக்கும். வாழ்க்கைத் துணைப் பொறுத்தவரை இவர்களுக்கு அதிகமான பின்னரே குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிய வரும்.
தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நவீன ரக ஆடைகள் அணிவதில் விருப்பம் இருக்கலாம். (குறிப்பாக கோடு போட்ட சட்டைகள்)
பெரும்பாலும் சிம்பிளாக யோசிக்க மாட்டார்கள். எல்லா விஷயங்களையும் கிராண்டாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எல்லா சுக போகங்களையும் அனுபவித்தாக வேண்டும் என்பதில் விருப்பம் உடையவர்கள். வேற்று மதம், மொழி பேசக்கூடியவர்கள் நண்பர்களாக அமைவார்கள். வேற்று மத மொழி திரைப்படங்களில் நாட்டம் இருக்கும்.
அவ்வப்போது போது தூக்கமின்மை பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள்.
எதிலும் சரியான நேர ஒழுங்கை கடைபிடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு எது வசதியோ, எது அவர்களுக்கு ஒத்து வருகிறதோ அதற்கு ஏற்பவே அவருடைய செயல்பாடுகள் இருக்கும். அவ்வப்போது தூக்கமின்மை பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள்.#Iniyavan
இவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் கேள்வி ஞானம் அதிகம் இருக்கும். எந்த ஒரு கருத்தினையும், யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை கேட்பார்கள்.
சிறு வயதிலிருந்தே சிற்றின்ப நாட்டம் அதிகம் இருக்கும். ராகு சரி இல்லாத நிலைகளில் சிற்றின்பம் சார்ந்த விஷயங்களில் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறவும் செய்வார்கள்.
இலக்னத்தில் ராகு இன்று சுபர் தொடர்பில்லாத நிலைகளில் மற்றவர்களுடன் ஒத்துப் போகும் தன்மை குறைவு. பிடிவாதம் மிக்கவர்கள். நினைத்த விஷயம் உடனே நடக்க வேண்டும் என எண்ணுவார்கள். நடக்காத பட்சத்தில் எதிலும் ஒழுங்கை கடைபிடிக்க மாட்டார்கள். எவ்வித கட்டுப்பாடுகளையும் மீறக்கூடிய குணம் இருக்கும்.
செவ்வாய் தொடர்பில் ராகு இருக்கும்போது வம்பு, வழக்கு பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்வார்கள். சகோதரருடன் முரண்படுவார்கள். சனி தொடர்பில் ராகு இருக்கும்போது குற்றச்செயல்களில் ஈடுபடும் தன்மை இருக்கும். அதிக பொய் சொல்லும் குணமிருக்கும். பாபர் தொடர்பு அதிகரித்தால் கடுமையான வார்த்தை பிரயோகத்தினை சண்டையின் போது வெளிப்படுத்துவார்கள்.குருட்டு தைரியம் அதிகம் கொண்டவர்கள். பாபர்களின் தொடர்பு ராகுவிற்கு அதிகரிக்கும் பொழுது பொழுது எந்த ஒரு குற்றச் செயலையும் செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்களுக்கு சிந்தனை வேலை செய்யாது. ராகு சரியில்லாத நிலைகளில் துர்க்கை அம்மன் வழிபாட்டில் திருப்தி அடையாளம். பறவைகளுக்கு தானியம் அளிப்பது மிகச் சிறப்பு.
வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளுக்கு தேவையானவற்றைச் செய்து அவர்களிடத்தில் அவ்வப்போது ஆசீர்வாதம் வாங்கி வருவது நல்லது. திதி, தர்ப்பணம் போன்றவற்றை முறையாக கடைப்பிடித்தல் அவசியம்.
ஒரு பாவகத்தில் ராகு இருக்கும் பொழுது ராகு நின்ற வீட்டு அதிபதி வலுப்பெறுவது அவசியம். அந்த வகையில் இங்கே இலக்னாதிபதி வலுப்பெறுதல் அவசியம். இலக்னாதிபதி பலமில்லாத நிலைகளில் இலக்னாதிபதியை வலுப்படுத்தக்கூடிய வழிபாடுகளில் ஜாதகர் அவசியம் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிகாலை சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
சுபர் தொடர்பில் ராகு இருக்கும்போது தான் சார்ந்துறைகளில் பிரபல்யத்தை தரும். முதலீடு இல்லாத தொழில்கள் கமிஷன், தரகு ,வியாபாரம், ஜோதிடம், communication சார்ந்த துறைகளில் நாட்டம் இருக்கும்.
இலக்னத்தில் ராகு இருக்கும் பொழுது அதீத பேராசை குணங்களை தவிர்த்து அனுதினமும் தனது சிந்தனைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியம்.
ஏனெனில் எதிர்மறை சிந்தனைகளுக்கு உட்படுவது மற்றவர்களை காட்டிலும் இவர்களுக்கு அதிகமிருக்கும்.ஆனால் பெரும்பாலும் இதை புரிந்து கொள்பவர்கள் குறைவு.
பாபர் தொடர்பில் உள்ள ராகு ஜாதகருக்கு எந்த விஷயத்திலும், மற்றவர்களைக் காட்டிலும் கடின உழைப்பை தந்த பிறகு அதற்கான பலனை தருவார் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும், தொடர் தோல்விகள் வந்தாலும் அதிக உழைப்பை தரத் தயாராக இருக்க வேண்டும்.#Iniyavan
இவர்களுடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகள் சரியாக, நேர்மையாக இருக்கக்கூடிய பட்சத்தில் ராகு இவர்களுக்கு தேவையான வளர்ச்சியை ராகு நிச்சயம் தந்து விடுவார்.எல்லா விஷயங்களிலும் நேர ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் துர்க்கை அன்னை அல்லது காலபைரவர் வழிபாட்டினை இவர்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் வளமான வாழ்க்கையை நிச்சயம் அமைத்துக் கொள்ளலாம்.#Iniyavan
இவை அனைத்தும் பொதுவான பலன்களே. ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகத்தின் நிலை, ராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலை, ராகுவை பார்த்த கிரகங்களின் நிலை, இலக்னாதிபதியின் நிலை போன்றவற்றைப் பொறுத்து பலன்களில் மாற்றம் இருக்கலாம்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://chat.whatsapp.com/Lx14Er4oWlU9PiLQRIbyhZ
https://t.me/Astrologytamiltricks*