செவ்வாய் வக்ரமாக இருந்தாலும், எப்பொழுதுமே வக்ர கதியில் செயல்படும் ராகு கேதுவுடன் இணைந்திருந்தாலும் இந்தப் பதிவு பொருந்தும்..
ஒருவருடைய உத்வேகம், செயல்திறன், எதையும் வேகமாக செய்யக்கூடிய திறன் துணிவு, தைரியம், வேகம், ஆளுமை மற்றும் நிர்வாகத்திறன், மன உறுதி, தனியாக போராடும் தன்மை, உடல் பலம், சவால் விடும் திறமை, சகோதரர்கள் போன்றவற்றிற்கு காரகம் பெற்ற கிரகம் செவ்வாய் ஆவார். ஜாதகத்தில் செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது செவ்வாய் குறிக்க கூடிய மேற்கண்ட விஷயங்களில் ஜாதகருக்கு பின்னடைவுகள் இருக்கும். ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்கு இவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னரும் அதைப்பற்றி அதிகம் யோசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒரு விஷயத்தை சிறப்பாக செய்வதற்கு பல்வேறு திட்டங்கள், தயாரிப்புகள் போன்றவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொண்டாலும் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு முன்னரே திட்டமிட்டு இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதில் இவர்களுக்கு தயக்கம் இருக்கும்.
தனியாக நின்று செயல்படுவதில் விருப்பங்கள் இருக்காது.யாரேனும் ஒருவர் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
எதிர்ப்புகளுக்கு நிறைய பயப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் #Iniyavan
ஒரு வேலைக்காக நன்கு திட்டமிட்ட பிறகும் அவற்றை செயல்படுத்தும் போது அதே விஷயத்தை (வேறு கோணத்தில்) மீண்டும் சிந்திப்பதுதான் இவர்களின் பிரச்சனையே. அதன் காரணமாகவே அச்செயலில் குழப்பம் ஏற்படுவதால் மனச்சோர்வையும், உடல்சோர்வையும் ஒருசேர சந்திக்கிறார்கள். மீண்டும் அதே செயலை செய்வதற்கு அஞ்சுகின்றார்கள். செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது ஜாதகருக்கு தைரியக் குறைவு இருப்பதற்கு வாய்ப்புண்டு.
ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது ஒரு மனிதரை எந்த ஒரு செயலையும் துணிந்து செய்ய இயலாத சோம்பேறியாக மாற்றுகிறது. செவ்வாயின் இயல்பான குணங்கள் வேகம் மற்றும் சுறுசுறுப்பு, நிதானமில்லாத தன்மை. அதே செவ்வாய் வக்ரமாக இருக்கும்போது செவ்வாயின் குணங்கள் மந்தமாகி ஜாதகரை சோம்பேறியாக மாற்றுகிறது.
ஜாதகர் இயல்பு வாழ்க்கையில் தேவைக்கும் அதிகமான நிதானத்துடன் செயல்படுகின்றார்.
அதனால் முடிவெடுக்கும் திறனிலும் முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்துவதிலும் பின் தங்குகிறார்கள். அதே நேரத்தில் இவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் துணிந்து எடுக்க மாட்டார்கள், செயல்பட மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. முடிவெடுப்பதை பற்றியும் செயல்படுத்துவதை பற்றியும் தேவையற்று சிந்திப்பதே இவர்களின் பிரச்சனை ஆகும்.
காலப்போக்கில் இதை அவர்கள் உணரும் போது அவருடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் நல்லமுறையில் மாறத் துவங்கும். அதற்கு சில காலங்கள் பிடிக்கும். #Iniyavan
பொதுவாக செவ்வாய் வக்ரமானவர்கள் அளவு கடந்து சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதில் சாதிக்க விரும்புகின்றார்களோ அத்துறையில் ஏற்கனவே சாதித்தவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை குருவாக கொண்டு, அவரைப் பின்பற்றி செயல்படுதல் போதுமானது.
செவ்வாய் வக்ரமானதால் வாழ்க்கைச் செயல்பாடுகளில் பின்னடைவுகளைச் சந்திப்பவர்கள் துடியான தெய்வங்களை வழிபட்டு வருதல் சிறப்பாகும். அனுமன் மற்றும் வாராஹி போன்ற தெய்வ வழிபாடுகள் நன்மை பயக்கும்.
மூல நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அனுமன் சாலிசா சொல்லி வருதல், பஞ்சமி திதிகளில் வராகஹிமாலை படித்து வருவது போன்றவை நல்ல பலன்களைத் தரும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks
https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg
https://www.facebook.com/groups/3741