ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய பாக்கியங்களை தடை செய்யக் கூடிய அளவிற்கு வல்லமை படைத்த கிரகங்கள் ராகு கேதுக்கள்..
அதனால்தான் ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவால் எந்த ஒரு கிரகமும் பாதிக்கப்படாத நிலையில் இருப்பது நல்லது என சொல்லப்பட்டுள்ளது.
ஒரு கிரகம் ராகுவால் மிக நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, அந்த கிரகம் அந்த மனிதருக்கு எதை தர கடமைப்பட்டதோ அதை தருவதில் (ராகுவின் தசா வராத போது) அதிகமான தடை தாமதங்களை ஏற்படுத்துவார் ராகு. இதைத்தான் பாக்கியங்களை தடை செய்யக்கூடிய அமைப்பு என்று முதல் வரியில் குறிப்பிட்டுள்ளேன். #Iniyavan
ராகுதன்னுடன் இணைந்துள்ள கிரகத்தை பலவீனப்படுத்துவது போல கேது தன்னுடன் இணைந்துகிரகத்தை பலவீனப்படுத்துவது இல்லை.
கேது இயற்கை பாப கிரகங்களான சனி மற்றும் செவ்வாயின் தொடர்பினை பெறும் பொழுது தன்னுடைய தசா புத்தி காலகட்டங்களில் பாதிப்பினை தருவார்.
அதேநேரத்தில் கேது, சூரியன் மற்றும் சந்திரனுடன் இணைவதும் நல்லதல்ல. ஆனால் ராகுவை பொறுத்தவரை ராகு எந்த கிரகத்துடன் இணையாமல் இருப்பதே போதுமான வரை நல்லதாகும்.
ராகுவும் கேதுவும் நம்முடைய தாத்தா பாட்டிகளை சுட்டிக் காட்டக் கூடிய கிரகங்கள்.
நாடி ஜோதிடத்தை பொருத்தவரை இராகு தந்தைவழி பெற்றோர்களையும் கேது தாய்வழி பெற்றோர்களையும் சுட்டிக் காட்டக் கூடிய கிரகங்கள்.
அந்தவகையில் ராகு கேதுக்கள் நம்முடைய முன்னோர்கள் (பித்ருக்கள்)
பித்ருக்களை நாம் சரியாக கவனிக்காத நிலைகளில் ராகு கேதுக்களால் தோஷம் ஏற்படும் என நான் நம்புகின்றேன்.#Iniyavan
🌺 இந்து சமயத்தைப் பொறுத்தவரை நம்முடைய பித்ருக்களுக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகள் மற்றும் வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
கிறிஸ்தவ சமயத்திலும் கல்லறை திருவிழா என்ற பெயரில் முன்னோர்களின் அருமை பெருமைகளை வருடத்திற்கு ஒருமுறை நினைவு கூர்ந்து வணங்கி வருவார்கள்.
🌺 இந்த வழிபாடுகளின் நோக்கம் பித்ருக்களை வழிபடும் போது, பித்ருக்கள் மன மகிழ்ச்சி அடைந்து நம்முடைய வளர்ச்சியில் நமக்குத் துணை நிற்பார்கள் என்பதே ஆகும்.
அந்த வகையில் முன்னோர்களுக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளை வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக செய்து வரவேண்டும்.#Iniyavan
🌼 வழிபாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமின்றி, உயிருடன் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளுக்கு என தனியாக நேரம் ஒதுக்கி அவருடன் கனிவுடன் பேசி வரவேண்டும்.
வயது முதுமையால் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கக்கூடிய அவர்களின் தேவையை நிறைவேற்றித் தர வேண்டும்.#Iniyavan
🌼 மனம் நோகச் செய்யக் கூடிய கடும் வார்த்தைகளை எக்காரணத்தைக் கொண்டும் அவர்களிடத்தில் பிரயோகிக்க கூடாது. அவர்களின் குறைகளை ஒருபொழுதும் பெரிதுபடுத்தி பேசக்கூடாது.
🌼 முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது உங்கள் வீட்டினில் உள்ள பெரியவர்களிடமும் கலந்து ஆலோசித்து செயல்படுவது நல்லதாகும்.
இடையிடையே வரக்கூடிய விழாக்களின்போது அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது நல்லதாகும்.
🌺 நீங்கள் பெற்றோர்களாக இருந்தால், உங்களுடைய குழந்தைகளுக்கு அவர்களின் தாத்தா பாட்டிகளான, உங்களது பெற்றோரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவர்களிடத்தில் மரியாதையாக நடந்து கொள்வதை வலியுறுத்த வேண்டும்.
அவர்களின் தற்போதைய விருப்பங்களை உங்களுடைய குழந்தைகளை கொண்டு நிறைவேற்றச்செய்யலாம்.
அவர்களுடைய உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனத்தோடும் அக்கறையுடன் இருப்பது அவசியமாகும்.
🌺 வேலைப்பளு, சரியான பொருளாதார மின்மை இவற்றினை காரணமாகக் கொண்டு அவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ள தருணங்களில் அக்கறையின்றி, கவனிப்பாரின்றி விட்டுவிடக்கூடாது.
🌺 பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி இல்லாதவர்கள் அவருடைய திருவுருவப் படத்தின் முன்பு மாலை வேளைகளில் தினமும் விளக்கு ஏற்றி கடவுளிடம் உங்கள் வேண்டுதலை கூறுவதுபோல, உங்களது நியாயமான வேண்டுதல்களை அவர்களிடம் தெரிவித்து வணங்கி வருதல் நலம் தரும்.#Iniyavan
அதோடு உங்களுடைய பித்ருக்கள் செய்ய வேண்டும் என நினைத்து செய்ய இயலாமல் விட்டுச்சென்ற பணிகளை நீங்கள் முன்னின்று நடத்தலாம்.
🌼 அதுமட்டுமின்றி ஆதரவற்ற நிலையில் கவனிப்பாரின்றி இருக்கக்கூடிய வயதானவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்து வருவதும் நல்லதாகும்.
🌺 இது போன்ற நம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய நியாயமான நற்செயல்களை எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்துவருவது நம்முடைய தீய கர்மாக்களை படிப்படியாகக் குறைத்து நலத்தினை நல்கும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://t.me/Astrologytamiltricks