#Iniyavan
செவ்வாய் - சுக்கிரன் இணைவு என்ற தலைப்பை பார்த்தவுடனே ஜோதிடம் அறிந்தவர்களுக்கும், ஓரளவு ஜோதிடம் அறிந்தவர்களுக்கும் இது எதனுடன் தொடர்புடைய பதிவு என்பது புரிந்திருக்கும். ஆம் காமம் தொடர்புடையதே. பொதுவாக இந்த இணைவு அதிகப்படியான காமம் சார்ந்த ஈடுபாட்டையும் எண்ணங்களையும் தரக்கூடியதாகும்.
ஏன் மற்ற கிரகங்களைக் குறிப்பிடாமல் குறிப்பாக செவ்வாய் சுக்கிரன் இணைவினை சொல்கின்றார்கள். பொதுவாக செவ்வாய் என்றாலே அதீத துணிச்சல், வீரம், வீரியம், பராக்கிரமம், உத்வேகம், எந்த ஒரு விஷயத்தையும் தூண்டக்கூடிய தன்மை படைத்த கிரகம்.
குறிப்பாகவே இலக்னம் மற்றும் இராசிக்கு வலுப் பெற்ற செவ்வாயின் தொடர்பு இருக்கும் பொழுது அவர்களுக்கு உடல் சார்ந்த பலம் அதிகம் இருக்கும். அவ்வகையில் உடல் சார்ந்த பலத்திற்கும் காரகத்துவம் கூடிய கிரகம் செவ்வாய். அடுத்ததாக இந்த இணைவினில் சுக்கிரன், சுக்கிரன் களத்திர ஸ்தானாதிபதி என்று அழைக்கப்படக்கூடியவர்.
களத்திரம் என்றால் துணை, ஒருவரின் திருமண வாழ்வு, தாம்பத்திய ஈடுபாடு போன்றவற்றை சுட்டிக்காட்டக் கூடிய இடம் ஏழாகும்.
காலபுருஷ இலக்கனப்படி சுக்கிரன் ஏழாம் அதிபதி ஆகிறார். அவ்வகையில் தான் சுக்கிரன் களத்திர ஸ்தானாதிபதியாகின்றார். அதோடு மனித இன விருத்திக்கு முக்கியமான விஷயமான காமத்திற்கு அதிபதியும் சுக்கிரனே. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இன விருத்திக்கு முக்கியத்துவம் பெறுகின்ற விஷயங்களான விந்து, சுரோணிதம் இவற்றிற்கு காரகத்துவம் வகிக்க்கூடிய கிரகமும் சுக்கிரனே.
காமத்திற்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய கிரகமான சுக்கிரன்,
அதோடு உத்வேகம், வீரியம், உடல் பலம் இவற்றிற்கு காரகத்துவம் வகிக்கக்கூடிய செவ்வாயும் இணையும் போது காமம் அதிகம் இருப்பது இயல்பே. குறிப்பாக இந்த இணைவு மூன்றாம் இடம், 7ஆம், எட்டாம் இடம் 12ஆம் இடம் போன்ற இடங்களில் இருக்கும் போது (சுக்கிரனும் செவ்வாயும் பலவீனம் படாத நிலையில்) கண்டிப்பாக அந்த ஜாதகருக்கு காமம் சார்ந்த ஈடுபாடு அதிகமிருக்கும்.
12-ஆம் இடம் என்பது ஒருவரின் போகத்தினை சுட்டிக்காட்டக் கூடிய இடம், 7ஆம் இடம் ஒருவரின் தாம்பத்திய ஆர்வத்தை சுட்டிக்காட்டக் கூடிய இடம், 8ஆம் இடம் என்பது பிறப்புறுப்புகள் தொடர்பான இடம், 3-ஆம் இடம் என்பது வீரிய ஸ்தானம்.
ஆகவே மேற்கண்ட இடங்களில் இந்த இணைவு இருக்கும் போது காமம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருப்பது இயல்பே.
மேற்கண்ட நிலைகளில் சனி, ராகு, கேது தொடர்பை பெரும் பொழுது ஜாதகர் காமம் சார்ந்த விஷயங்களில், தொடர்புடைய தசா புத்திகளில் கட்டுப்பாடின்றி தவித்து முறையற்ற வழியில் ஈடுபட்டு தவறிழைக்கும் வாய்ப்பினை உருவாக்கும். மேற்கண்ட நிலைகளுடன் மனோகாரகன் சந்திரன் தொடர்பு கொள்ளும்பொழுது கட்டுப்பாடற்ற காம எண்ணங்களை தரும். புதன் தொடர்பு கொள்ளும் போது அதில் என்றும் இளமை என்ற உணர்வினைத் தரும். சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து இருக்கும் நிலையில், பாபத்துவ நிலையில் சனி, ராகு,கேது தொடர்பு கொள்ளும்போது தொடர்புடைய தசா புக்திகள் வரும் பொழுது ஜாதகர் தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது நலமாகும்.
இதோடு 12 ஆம், எட்டாமிட தொடர்புகளைப் பெரும்பொழுது முறையற்ற காமம் சார்ந்த செயல்பாடுகளால் தண்டனை கிடைக்கும்.
நிறைவாக செவ்வாய் சுக்கிரன் இணைவு பெற்றோர்கள் எல்லோரும் காமம் சார்ந்த விஷயத்தில் தவறிழைக்கக் கூடியவர் அல்ல. அவர்களின் ஜாதகத்தில் ஒழுக்கத்தினை குறிக்கக்கூடிய பாக்கியாதிபதி வலுத்து இருந்தால், முறையற்ற காமம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். மாறாக அவர்களின் துணையுடன் மட்டுமே காமம் சார்ந்த விருப்பங்களில் அதீத ஈடுபாடு இருக்கும்.
இந்த இணைவு பாபத்துவ நிலையில் இருக்கும் பொழுது வலுத்த குரு பகவானின் தொடர்பு இருக்கும் போது, அவரின் பார்வை பெறும் பொழுது ஜாதகருக்கு கட்டுப்பாட்டில் உள்ள காம உணர்வினை தரும்.
நன்றி
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138