12 இலக்னங்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கு பின்பற்றப்பட வேண்டிய விஷயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12 இலக்னங்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கு பின்பற்றப்பட வேண்டிய விஷயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2022

தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கான வழிமுறைகள்



ஒருவர் தொழில் எப்படி செயல்பட வேண்டும்? எப்படி செயல்பட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை ஆறாமிடம் சுட்டிக் காட்டும்.தொழிலுக்கும் ஆறாம் இடத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்?  
ஒருவருடைய ஜாதகத்தில் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடிய இடமாக இருப்பது பத்தாம் பாவகம் ஆகும். பத்தாம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானமாக இருப்பது ஆறாம் பாவகமாகும்.
ஒன்பதாம் இடம்தான் ஒருவருடைய  அதிர்ஷ்ட வாய்ப்புகளை சுட்டிக்காட்டும். அந்த வகையில் பத்தாம் பாவகத்திற்கு ஒன்பதாம் இடமாக ஆறாம் பாவகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.#Iniyavan

எல்லா லக்னங்களுக்கும் பத்தாம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் தங்களுக்குள் நண்பர்களாகவே வருவார்கள். ஒருவகையில் 6, 10 பரிவர்த்தனை கூட நல்லதுதான். தொழிலுக்காக கடன் வாங்கி பின்பு நிலை பெறக்கூடிய தன்மையை இது ஏற்படுத்தும்.#Iniyavan
🌼 மேஷ லக்கினத்தை பொருத்தவரை புதன், 6 ஆம் அதிபதியாக வருவதால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரமின்றி, புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது, தொழில் மற்றும் நட்பு வட்டாரங்களில் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நடந்து கொள்வது தொழிலில் அவர்களுக்கு முன்னேற்றத்தை தரும்.#Iniyavan

🌻 பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு  அவர்களது கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து வருவது நல்லதாகும்.

🌼 ரிஷப லக்னத்தை பொறுத்தவரை ஆறாம் வீட்டு அதிபதியாக லக்னாதிபதியான சுக்கிரனே வருகின்றார். 10-க்குரிய சனி ஆறாம் வீட்டில் உச்சம் பெறுகின்ற காரணத்தினால் ரிஷப லக்னக்காரர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடின உழைப்பை கொடுக்கும் பொழுதும்,
செய்யக் கூடிய வேலைகளில் நீதி நேர்மைக்கு உட்பட்டு உண்மையாக நடந்து கொள்ளும் பொழுதும் அவர்களுடைய அதிர்ஷ்ட வாய்ப்புகள் செயல்படத் துவங்கும்.

🌻 உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக்கூடியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதார உதவிகளை செய்து வருவதும் சிறப்பிற்குரியது.#Iniyavan

🌻 ஆறாம் அதிபதியாக சுக்கிரன் வரக்கூடிய காரணத்தால் தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முகமலர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.
 

🌼 மிதுன லக்னக்காரர்களுக்கு ஆறாம் வீட்டு அதிபதியாக செவ்வாய் வரக்கூடிய காரணத்தால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுறுசுறுப்புடன் நடந்து கொள்வது நல்லதாகும்.

🌻 ஆறாம் அதிபதியான செவ்வாய், பத்தாம் வீட்டில் அடையக்கூடிய நிலையைப் பொறுத்தவரை, நட்பு வீட்டில் திக்பல அடிப்படையில் இருப்பதால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் போது மேன்மையைத் தருவார்.#Iniyavan

🌻 சகோதரர்கள் இடத்தில் விரோதமின்றி நடந்து கொள்வது நல்லதாகும்

🌼 கடக லக்கின காரர்களுக்கு ஆறாம் அதிபதியாக குரு வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சோம்பேறித்தனத்தை குறைத்துக் கொண்டு செயலாற்றுவது நல்லதாகும்.

🌻 ஆறாம் இடமான தனுசு, காலபுருஷ லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதால் வரக்கூடிய வருமானத்தில் ஒரு பங்கு தான தர்மங்களுக்கு பயன்படுத்துவது ஜாதகருக்கு தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களில் வளர்ச்சியைத் தரும்.#Iniyavan

🌼 சிம்ம லக்கினத்தை பொறுத்தவரை ஆறாம் அதிபதியாக சனி வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தான் என்ற கர்வம் இன்றி நடந்து கொள்வதும், வேலை பார்க்கும் இடத்தில் ஊழியர்களிடம் அதிக கடுமையின்றி கனிவுடன் நடந்து கொள்வதும், சுறுசுறுப்பாக செயல்படுவதும் நல்லதாகும்.

🌻 சிம்ம லக்கினத்திற்கு ஆறாம் இடமான மகரம், கால புருஷ லக்னத்திற்கு பத்தாமிடமாகவும்,  சனியின் ஆட்சி வீடாகவும் இருப்பதால் கடுமையான உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்கக் கூடியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருளாதார உதவிகளைச் செய்து வருவது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். 

🌻 சிம்ம லக்னத்திற்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பாக்கியாதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.சகோதர வர்க்கத்திற்கு தன்னாலான உதவிகளை செய்து வருவதும் சிறப்பானது.#Iniyavan

🌼 கன்னியா லக்னத்திற்கு சனி ஆறாம் அதிபதியாக வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடின உழைப்பை தருவதும், தங்களுக்கு கீழே வேலை பார்க்கக்கூடிய பணியாட்களுக்கு  ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் தருவது மேன்மையைத் தரும்.

🌻 இந்த லக்கனத்திற்கு கும்பம் ஆறாம் இடமாக இருப்பதால் கோவில் புனரமைப்பு, அன்னதானம் போன்றவற்றில் ஜாதகர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் 
தன்னாலான முடிந்த உதவிகளைச் செய்து வருவதும் நல்லதாகும்.

🌼 துலாம் லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியாக குரு வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தனது லாபத்தை மட்டுமே முன்னிறுத்தி செயல்படாமல், அறம் சார்ந்து செயல்படுவது நல்லதாகும்.#Iniyavan

🌼 விருச்சிக லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியாக லக்னாதிபதியான செவ்வாயே வருவதாலும், பத்தாம் வீட்டிற்குரிய சூரியன் ஆறாம் வீட்டில் உச்சம் பெறக்கூடிய காரணத்தினாலும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுறுசுறுப்பாகவும், காலதாமதமின்றி செயல்படுவதும் நன்மை தரும்.

🌻 இந்த லக்னத்திற்கு ஆறாம் பாவகமான மேஷத்தில் சனி நீச்சம் பெறுவதால் கீழ்நிலை பணியாளர்கள் இடத்தில் கடுமையின்றி நடந்து கொள்வதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதும் நல்லதாகும்.

🌼 தனுசு லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியாக சுக்கிரன் வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முகமலர்ச்சியுடன் செயல்படுவது அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.#Iniyavan

🌻 திருமணம் போன்ற சுப விஷயங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருவதும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ஆலயம் சென்று, அங்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், சந்தனம், பூ, வளையல் போன்றவற்றை தானம் வழங்குதல் தொழிலில் உள்ள இடர்பாடுகளைப் போக்கும்.

🌼மகர லக்கினக்காரர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு  அவர்களது கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து வருவதும் நல்லதாகும்.#Iniyavan

🌼 கும்ப லக்கினத்திற்கு ஆறாம் இடத்திற்கு சந்திரன் அதிபதியாக வரக்கூடிய காரணத்தினால் தாயாருடன் அன்பாக நடந்துகொள்வது, அவர்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், அவ்வப்போது அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வதும், அன்னையின் மனம் நோகாமல் நடந்து கொள்வதும் நல்லதாகும்.

🌻 கும்ப லக்னத்திற்கு தன மற்றும் லாப ஸ்தானாதிபதியான குரு ஆறாம் வீட்டில் உச்சம் பெறுவதால் தனது வேலை மற்றும் தொழில் போன்றவற்றில் உண்மையாகவும் அறம் சார்ந்து செயல்படுவதும் மேன்மையைத் தரும்.

🌻 இந்த லக்னத்திற்கு பத்தாம் அதிபதியான செவ்வாய், ஆறாம் வீட்டில் நீசம் அடைவதால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மந்தமின்றி சுறுசுறுப்பாக செயல்படுவதும் அவசியமாகும். 
சகோதர உறவுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது சிறப்பாகும்.

🌻 தாயாரை ஒத்த வயதுடைய ஆதரவற்ற பெண்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருவதும் நல்லதாகும்.#Iniyavan

🌼 மீன லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியாக சூரியன் வரக்கூடிய காரணத்தினால் தந்தையிடத்தில் 
 அன்பாகவும் அனுசரணையாக நடந்து கொள்வதும் மனம் நோகாமல் செயல்படுவதும், அவ்வப்போது தந்தையிடத்தில் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வதும் நல்லதாகும்.
தந்தையிடம் விரோதத்தை வளர்த்துக்கொள்வதோ, விவாதம் செய்வதோ நல்லதல்ல.

🌻 தந்தையை ஒத்த வயதுடைய ஆதரவற்ற ஆண்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருவதும் நல்லதாகும்.#Iniyavan

🌻 சுறுசுறுப்பு மற்றும் நேரத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியன் ஆறாம் வீட்டு அதிபதியாக வரக்கூடிய காரணத்தினால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த சுறுசுறுப்பாகவும் காலதாமதமின்றி செயல்படுவது இவர்களது தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/LX7ulO2CxM1CSMtjP4qe2f