ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சனி மற்றும் ராகு இணைவு சரியில்லாத சேர்க்கையாக கருதப்படுகின்ற ஒரு அமைப்பாகும்.சனி என்பவர் கடின உழைப்பு, நீதி, விதிமுறைகள், ஒழுக்கம், எதார்த்தம், நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கிரகம் ஆவார். #Iniyavan
ராகு என்பவர் பேராசை, மாயை, பிறரை ஏமாற்றுதல், அதீத போக விஷயங்களில் ஈடுபாடு, ஒரு விஷயம் தர்மத்திற்கு எதிரானது என தெரிந்தும் தனது சந்தோஷத்தின் பொருட்டு அதை செய்வது போன்றவற்றை சுட்டிக்காட்டும் கிரகம் ஆவார்.
சனி, ராகு இணைந்திருப்பதும் அல்லது சனியின் பார்வையில் ராகு இருப்பதும் பாதிப்புகளை தரக்கூடிய அமைப்பே ஆகும்.இந்த கிரக இணைவு ஜாதகத்தில் காணப்படக்கூடிய பட்சத்தில் அவை தனிப்பட்ட நபரின் வாழ்வில் நிறைய போராட்டங்களையும், முன்னேற்ற தடைகளையும், நிறைய சவால்களையும் ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும்.
சனி மற்றும் ராகு சேர்க்கை லக்னத்தில் இருந்து எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு சிக்கல்கள் இருக்கும். உதாரணத்திற்கு லக்னத்தில் இருந்து நான்காவது பாதகத்தில் இந்த சேர்க்கை இருப்பதாக எடுத்துக் கொண்டால் நான்காம் பாவகம் சம்பந்தப்பட்ட விஷயங்களான தாயாருடனான உறவு, தாயாரின் உடல்நலம், பூமி, வீடு, மனை வாகனம், கல்வி சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு சிக்கல்கள் இருக்கும்.
அந்த வகையில் நான்காம் பாவகத்தில் இந்த இணைவு இருக்கும் போது தாய் வழி அன்பு சரியாக கிடைக்காத நிலை, சொந்த வீடு கட்டுவதில் சிக்கல், சொந்த வீடு கட்டினாலும் அங்கு சென்று வசிக்க இயலாத தன்மை, கல்வியில் முன்னேற்றம் இன்மை,வாகனம் சார்ந்த விஷயங்களில் விரயம் போன்ற பாதிப்புகள் இருக்கும். சனி மற்றும் ராகு இணைந்திருக்கும் போது சனியின் பார்வையில் உள்ள கிரகங்கள் சார்ந்த விஷயங்களிலும் ஜாதகருக்கு பிரச்சனைகள் இருக்கும்.
உதாரணத்திற்கு சனி மற்றும் ராகு இணைந்திருக்கும் பொழுது சனி, சுக்கிரனை பார்ப்பதாக எடுத்துக்கொண்டால் சுக்கிரன் குறிக்கக்கூடிய விஷயங்களான திருமண விஷயங்களில் தாமதம், திருமணத்திற்கு பின்னான மண வாழ்க்கையில் பிரச்சனை, சுக்கிரன் குறிக்கக்கூடிய வீடு வாகனம் சார்ந்த விஷயங்களிலும்
பாதிப்புகளை ஜாதகர் சந்திப்பார்.இதை சனி மற்றும் ராகு சம்பந்தப்பட்ட தசாபுத்தியோ (அ) சுக்கிரனுடைய தசா புத்தியோ நடக்கும் போது ஜாதகரால் உணர முடியும்.மேற்கண்ட கிரகச் சேர்க்கைக்கு சுபர் தொடர்பு இருப்பது, அந்த வீட்டு அதிபதி வலுப்பெறுவது போன்றவை பாதிப்புகளை கட்டுக்குள் வைக்குமே தவிர பாதிப்புகளை இல்லை என கூறிவிட இயலாது.
சனி மற்றும் ராகு இணைவு தரக்கூடிய பாதிப்புகள் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும் என்றாலும் பொதுவாக சனி மற்றும் ராகு
இணைவுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதைப்
பார்ப்போம்.
சனி,ராகு இணைவுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல்கள்:-
1.சனி தொழில்காரகன் என்பதால் உத்தியோகம் மற்றும் வேலையில் நிலை பெறுவதில் சிக்கல்கள்,
நிரந்தரமாக ஒரு தொழிலோ அல்லது உத்தியோகமோ அமைவதில் சிக்கல்கள்
அதனால் ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சிக்கல்கள்.
நிலையான உத்தியோகம் அமையாததால் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதாரத் தட்டுப்பாடுகள்
2.உறவுகள் சரிவர அமையாத நிலை குடும்ப உறவுகளிடத்திலே ஒற்றுமை இல்லாத தன்மை.
3.வாழ்வின் அதிகப்படியான காரியத் தடைகளை எதிர்கொள்வது, உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இன்மை வாழ்வினில் முன்னேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் முன்னேற்றம் இல்லாத தன்மை,
4.எப்போதும் ஒருவித பயம் உணர்வு மற்றும் விரக்தியான குழப்பமான மனநிலை
5.ஒரு சில முக்கியமான சந்தர்ப்பங்களில் நம்பிக்கைக்குரிய உறவுகளோ அல்லது நண்பர்களோ அமையாத ஆதரவற்ற தன்மை.
பொதுவாக சனி, ராகு சேர்க்கை உடையவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவிற்கு பொருள் சேர்க்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வலுவான ஆசையை உடையவர்களாக இருப்பார்கள். அதற்காக முயற்சியினை எடுக்கையில் நிறைய தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பதால் அதீத விரக்தி மற்றும் அதிருப்தியான மனநிலையைச் சந்திக்கின்றார்கள்.
சில நிலைகளில் சனி,ராகு சேர்க்கை ஜாதகத்தில் சில வேண்டத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த இணைவுள்ளவர்கள் பெரும்பாலும் வைராக்கிய மனம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் கடின உழைப்பை தர அஞ்ச மாட்டார்கள். நாளடைவில் தங்களது வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் எந்தவித தடைகளையும் சமாளித்து தாண்டிச் செல்லவே விரும்புகிறார்கள் ஓய்ந்து போய் விடுவதில்லை.
சனி, ராகு இணைவின் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள்:-
1.தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்க்கையை பின்பற்றியாக வேண்டும்.
2.ராகு போகக்காரகன் என்பதால் போகம் சார்ந்த விஷயங்களில் குற்ற உணர்வு ஏற்படும்படியான விஷயங்களில் அறவே ஈடுபடக்கூடாது.#Iniyavan
3.பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படக்கூடிய குணத்தை கொண்டிருப்பது அவசியம்.
4.குடும்ப உறவுகளிடத்திலோ அல்லது வெளி உறவுகளிடத்தில் வாக்குவாதம் ஏற்படும் பொழுது வார்த்தை பிரயோகத்தில் கவனமாக இருப்பது அவசியம்.அசுப வார்த்தைகளையோ அல்லது பிறரின் மனம் நோகும் படியான வார்த்தைகளையோ உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.உறவுகளிடத்தில் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.#Iniyavan
ராகு தன்னை முன்னிலைப்படுத்தும் கிரகம், தான் என்று அகம்பாவத்தை தரக்கூடிய கிரகம்.சனி மற்றும் ராகு இணைவுள்ளவர்கள் பொதுவாக எல்லா விஷயங்களிலும் கர்வம் தவிர்ப்பது நல்லதாகும்.
5.சனி மெதுவாக செயல்படும் கிரகம் என்பதால் உழைப்பிற்கான பலனை அங்கீகாரத்தை தருவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு கிரகம் ஆவார். ஆகவே இலக்குகளை அடைவதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும் பல தோல்விகளை சந்தித்தாலும் அவற்றை கைவிடாத மனநிலையை கொண்டிருப்பது நலம் தரும்.#Ik
6.சனி நம்மிடத்தில் இருந்து எதிர்பார்ப்பது கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை. ஆகவே எந்த ஒரு விஷயத்திலும் கடின உழைப்பின்றி பலனை எதிர்பார்க்கக் கூடாது. கடினமாக உழைப்பதுடன் நமது மனசாட்சிக்கு ஏற்ப ஒழுக்கமாக வாழ முற்படுவதும் அவசியமாகும்.
7.ராகு என்பவர் மோசடி மற்றும் ஏமாற்றும் தன்மையைக் கொண்ட கிரகம், தனது சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம் என்ற தன்மையை தரக்கூடிய கிரகம் அந்த வகையில் சனி, ராகு இணைவுள்ளவர்கள் ராகுவின் பேராசை மோசடி, ஏமாற்றும் குணம், தவறு எனத் தெரிந்தே தன் சந்தோஷத்தின் பொருட்டு தவறுகளில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லதாகும்.
8.நமக்கு நடக்கக்கூடிய நல்ல விஷயங்கள் அங்கீகாரங்கள் தாமதமாக கிடைத்தாலும்,நம்மால்மற்றோருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தையும், அவர்களின் உழைப்பிற்கான ஆதாயத்தை நிறைவேற்றுவதிலும் தடை தாமதங்கள் இருக்கக் கூடாது.#Iniyavan
9.தமக்குரிய பொறுப்புகளை சரிவரச் செய்யாமல் தட்டிக் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.#Ik
10. வாழ்வினை முன்னேற்றக் கூடிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் நம்மால் தரப்படுவதை அனுதினமும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.நம்மை தவறு செய்ய தூண்டும் வாழ்க்கையினை பாதிக்கும் பழக்கவழக்கங்களை அடியோடு விட்டொழிப்பதும் அவசியம்.
11.வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு செயலையும் தாமதமாக செய்யாதீர்கள். எதையும் முன்கூட்டியே தொடங்கி இறுதி வரை முழுமையாக நிறைவேற்றுவது அவசியம்.
12.ஒரு விஷயத்திற்காக ஒருவர் 100% உழைப்பைத் தர தயாராக இருக்கின்றார் எனில் சனி ராகு இணைவுள்ளவர்கள் அதைவிட அதிக உழைப்பை தருவதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களால் நிச்சயம் அது முடியும்.
சனி, ராகு இணைவிற்கான கடவுள் காலபைரவர் ஆவார். அந்த வகையில் சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் செவ்வரளி மலர்களுடன், காலபைரவர் வழிபாட்டை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.கடினமாக உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைக்க கூடியவர்களுக்கு பாதுகைகளை தானம் வழங்குவது நல்லதாகும்.சாலைகளில் நிழற்குடை அமைப்பது, குடை தானம் செய்து வருவது, ஆலய துப்புரவு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது போன்றவை நல்லதாகும்
நிறைவாக "முன்னேற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியையும் மற்றவர்களை விட
முன்னரே தொடங்குங்கள்."
உங்களது சுய முயற்சியால் முன்னேறுவீர்கள்.#Ik
நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138
ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..
https://whatsapp.com/channel/0029Va5vrDNJZg3zsfvet23T
https://t.me/Astrologytamiltricks
https://www.facebook.com/groups/3741