இந்தியக் கல்வி முறையைப் பொறுத்தவரை ஞாபக சக்திக்கு அதாவது மனப்பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கல்வி மட்டுமின்றி வாழ்க்கையை சுலபமாக கொண்டு செல்வதற்கும் ஞாபக சக்தி அவசியமான தேவையாகும்.
பொதுவாகவே ஞாபகசக்தி நிரம்பப் பெற்றவர்கள் தன்னுடைய தொழிலில் பெரும்பாலும் ஏமாறுவதில்லை.
அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் ஞாபக சக்தியின் உதவியின்றி வெற்றி பெறுவது கடினம். அவ்வகையில் ஒருவரின் தொழிலை ஜீவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு ஞாபகம் சக்தியின் பங்கு அலாதியான ஒன்று.
உதாரணமாக வட்டிக்கு விடுபவரை எடுத்துக்கொள்வோம்.வட்டிக்கு விடுபவர் தான் யார் யாருக்கெல்லாம் கடன் கொடுத்தோம், எவ்வளவு கொடுத்தோம் என்பதை மறந்தால் அவருடைய தொழில் என்னாவது?
போதிப்பதை தொழிலாகக் கொண்ட ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஏன்? ஜோதிடர்களுக்கும் ஞாபக சக்தியின் பங்கு அவசியமான ஒன்று. பல நூறு சூத்திரங்களை படித்திருந்தாலும் தக்க தருணத்தில் அவற்றை நினைவுகூர்ந்து பலன் சொல்லும் ஜோதிடர்களுக்கும் ஞாபக சக்தி மிக அவசியமான ஒன்று.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒருவரின் ஞாபக சக்தியை அறிய வழி காட்டுவது 5-ஆம் இடம்,
5ஆம் இடத்திற்கு புத்திர ஸ்தானம் என்ற பெயர் மட்டுமின்றி புத்திஸ்தானம் என்ற பெயரும் உண்டு என்பதை பழைய ஜோதிட நூல்களை வாசித்தவர்கள் அறிவர்.
அவ்வகையில் ஐந்தாம் அதிபதி பலம் பெற்று இருப்பவர்கள் ஞாபக சக்தியில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் தான் கற்றுக்கொண்ட விஷயத்தை வயோதிகத்திலும் மறவார். ஐந்தாம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் வலுப்பெற்று அமர்வது, ஐந்தாம் அதிபதி வீடு கொடுத்தவர், சரம் கொடுத்தவர் நல்ல நிலையில் இருப்பது, 5 உச்ச கிரகம் நின்றாலும் 5ஆம் இடத்து அதிபதி ஆட்சி உச்சம் போன்ற நிலைகளை அடைந்து இருந்தாலும் ஞாபக சக்தியில் ஜாதகர் சிறந்து விளங்குவார்,
ஐந்தாம் அதிபதி திக்பலம் மற்றும் வர்கோத்தமம் பெறுவது
இலக்னாதிபதி கேந்திர திரிகோணங்களில் பலமாகி, புத்தி ஸ்தானாதிபதியான ஐந்தாம் அதிபதி ஒன்று மற்றும் பத்தில் வலுவுடன் இருப்பது, லக்கினாதிபதியும் ஐந்தாம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருப்பது,
காரகத்துவரீதியாக மூளை, அறிவுத்திறன் மற்றும் ஞாபசக்தி இவற்றுடன் தொடர்புடைய குரு பகவான் பலமாகி நிற்பது போன்ற நிலையில் ஜெனித்தவர்கள் ஞாபகத்தில் சிறந்து விளங்குவார்கள்.
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கலைஞர் ஞாபக சக்தியில் சிறந்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் மறவாது நடந்து முடிந்த பழைய விஷயங்களிலிருந்து சரியான பதிலை தெரிவிப்பதில் வல்லவரான அவரின் ஜாதகத்தில் கடகம் லக்னமாகி ஐந்தாமிடத்திற்குரிய செவ்வாய் ஏழில் உச்ச பலத்துடன் நிற்பது குறிப்பிடத்தக்கது...
நன்றிகளுடன்...
ப.இனியவன் கார்த்திகேயன் MA.B.Ed
Cell 9659653138