பரிகார ஸ்தலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிகார ஸ்தலங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 அக்டோபர், 2021

இழந்தவற்றை தந்தருளும் இறைவன்...

இழந்தவற்றை தந்தருளும் இறைவன்

ஜாதகரீதியாக மோசமான தசா புத்திகள் நடைபெற்று தொழில் ரீதியாக மிகப்பெரிய பண இழப்பினை  சந்தித்தவர்கள்,  எதிர்பாராத விதமாக உத்தியோக ரீதியாக பதவிகள் மற்றும் செல்வாக்கு இழந்தவர்கள், மீண்டும் தனக்குரிய புகழ், பதவி, அதிகாரம்,அங்கீகாரம் செல்வாக்கு போன்றவற்றை திரும்பப் பெறுவதற்கான ஆலயம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஆலயத்தின் திருப்பெயர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் அமைந்துள்ளது.

தென்குரங்காடுதுறையில் அருள்பாலிக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்தவற்றை மீட்டுத் தரும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.
ராமாயணத்தில் ராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவன். சுக்ரீவன் தனது அண்ணன் வாலியின் தவறான செய்கைகளால் நாட்டை, அதிகாரத்தை, தனது மனைவியை இழந்தார்.

மனம் வருந்திய நிலையில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்த சுக்ரீவன் நிறைவாக இத்திருத்தலத்திற்கு வந்து  ஆபத்சகாயேஸ்வரர் அருள் பெற்றார்.
ஆபத்சகாயேஸ்வரர் வழிபட்ட பின்பு, சுக்ரீவனுக்கு  ராமபிரானின் நட்பு கிடைத்தது. பின்பு ராமபிரானின் உதவியுடன் தனது பதவி, அதிகாரம், தனது மனைவி போன்றவற்றை பெற்று கிஸ்கிந்தையின் மன்னராக பொறுப்பினை ஏற்றார்.
இத் திருத்தலத்தினிவ் சுக்ரீவனுக்கும் தனிச்சந்நிதி அமைந்திருப்பதைக் காண இயலும்.
ஜாதக ரீதியாக மோசமான தசா புத்திகள் நடந்து தொழில் ரீதியாக மிகப்பெரிய பொருளாதார இழப்பினை சந்தித்தவர்கள்,
எதிரிகளின் போட்டி, பொறாமை காரணமாக வேலை வாய்ப்பை இழந்தவர்கள், மீண்டும் தனக்குரிய புகழ், அதிகாரம், அங்கீகாரம், பதவி, செல்வம் பிரிந்து உறவுகள் போன்றவற்றை திரும்பப் பெற, தங்கள் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இத் திருத்தலம் சென்று, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் சொல்லி ஆபத்சகாயேஸ்வரர் அவர்களை    மனமுருகி வழிபட்டு வருவது சிறப்பாகும்.

(பாடலுக்கான இணைப்பு...)
https://shaivam.org/thirumurai/second-thirumurai/833/thirugnanasambandar-thevaram-thirukurangaduthurai-paravak-kedumval

ஆபத்சகாயேஸ்வரர் நம்முடைய ஆபத்துக்கள் அனைத்தையும் அழித்து நன்மைகளை நல்குவார்..
நலம் பெறுவோம்...

நன்றி
Astrologer 
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.ED
Cell 9659653138

ஜோதிடம்,ஆன்மிகம் குறித்த தகவல்களைப் பெற இணைந்திருங்கள்...

https://chat.whatsapp.com/H9HNdLNl7g6AUdjsNbDRuT

https://t.me/Astrologytamiltricks