உங்கள் ஜாதகத்தை வைத்து வாழ்க்கைத்துணைவரின் தொழில் கண்டறிவது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்கள் ஜாதகத்தை வைத்து வாழ்க்கைத்துணைவரின் தொழில் கண்டறிவது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 டிசம்பர், 2022

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் வாழ்க்கைத்துணை என்ன தொழிலில் இருப்பார் என்பதைச் சொல்ல இயலுமா?



சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ஜாதகம் பார்த்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ஜாதகத்தில் ஆசிரியர் பணிக்கான அமைப்பு இருக்கிறது என்றும் தன்னுடைய குழந்தையின் ஜாதகத்திலும் அவர் தாய் ஆசிரியை பணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னுடைய கணவரின் ஜாதகத்தில் நான் பார்த்த வரை இல்லை.. அது குறித்த அமைப்பு இருக்கிறதா என்று கேட்டார்.

அவருடைய கணவருடைய ஜாதகத்தை பார்த்த போது மனைவி ஆசிரியர் பணிக்கு செல்வார் என்ற அமைப்பு வெகு தெளிவாகவே  இருந்தது..

அதற்கான விளக்கம்

Dob : 23.12.1988
Time : 8.42pm
Madurai

அவருடைய கணவரின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டை குரு பார்க்கின்றார்..

ஏழாம் வீட்டு அதிபதி சனியும், குருவின் வீட்டில் இருக்கின்றார்..
குரு தானே ஆசிரியர் தொழிலை சுட்டிக்காட்டக் கூடிய கிரகம்.#Iniyavan

ஏழாமிடம் வாழ்க்கை துணையை சுட்டிக் காட்டக் கூடிய இடம்.. ஏழாம் வீட்டிற்கு பத்தாமிடம் வாழ்க்கை துனையின் தொழிலை சுட்டிக் காட்டக் கூடிய இடம்.. 7ஆம் வீட்டிற்கு 10ஆம் வீட்டு அதிபதியான சுக்கிரன் குருவின் பார்வையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாம் வீட்டிற்கு வாக்கு ஸ்தானமான லக்னத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதியான சனியும், குருவின் வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது .#Iniyavan

இலக்ன ராசிக்கு 2  மற்றும் 10 ஆம் இடம்,
 2 மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிகளுடன் குரு தொடர்பு கொள்ளும் பொழுது அவர் ஆசிரியப் பணிக்குச் செல்வார்..#Iniyavan

அந்த வகையில் அவர் ஆசிரியர் பணிக்கு செல்வார் என்பது அவருடைய கணவரின் ஜாதகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லோருடைய ஜாதகத்திலும் வாழ்க்கைத்துணையின்  தொழிலுக்கான அமைப்பு தெளிவாக இருக்காது.
சில ஜாதகங்களில் பதியப்பட்டிருக்கும். 
கர்ம பந்தம்..
Dob : 23.12.1988
Time : 8.42pm
Madurai

கட்டண ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..

நன்றி..
Astrologer
ப.இனியவன் கார்த்திகேயன் MA B.Ed, MA Astrology.
Cell 9659653138

ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு இணைந்திருங்கள்..

https://t.me/Astrologytamiltricks

https://chat.whatsapp.com/C2NvgMxacNlFBpcyQq3Gmg